ta_ulb/48-2CO.usfm

555 lines
111 KiB
Plaintext

\id 2CO
\mt1 2 கொரிந்தியர்
\s5
\c 1
\cl அத்தியாயம்– 1
\p
\v 1 தேவனுடைய விருப்பத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயுவும், கொரிந்து பட்டணத்தில் உள்ள தேவனுடைய சபைக்கும், அகாயா நாடு முழுவதும் உள்ள எல்லாப் பரிசுத்தவான்களுக்கும் எழுதுகிறது என்னவென்றால்:
\v 2 நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
\s1 எல்லாவித ஆறுதலின் தேவன்
\s5
\p
\v 3 நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், எல்லாவிதமான ஆறுதலின் தேவனுமாக இருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்.
\v 4 தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எப்படிப்பட்ட உபத்திரவங்களிலும் இருப்பவர்களுக்கு நாங்கள் ஆறுதல்செய்கிறவர்களாவதற்கு, எங்களுக்கு வரும் எல்லா உபத்திரவங்களிலும் அவரே எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்.
\s5
\v 5 எப்படியென்றால், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடம் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது.
\v 6 எனவே, நாங்கள் உபத்திரவப்பட்டாலும், அது உங்களுடைய ஆறுதலுக்கும் இரட்சிப்பிற்கும் ஏற்றதாகும்; நாங்கள் ஆறுதல் அடைந்தாலும், அதுவும் உங்களுடைய ஆறுதலுக்கும் இரட்சிப்பிற்கும் ஏற்றதாகும்; நாங்கள் பாடுபடுகிறதுபோல நீங்களும் பாடுபட்டுச் சகித்துக்கொள்கிறதினாலே அந்த இரட்சிப்பு பலன் தருகிறது.
\v 7 நீங்கள் எங்களோடு பாடுபடுகிறதுபோல, எங்களோடு ஆறுதலும் பெற்றுக்கொள்கிறீர்கள் என்று நாங்கள் அறிந்து, உங்களைக்குறித்து உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கிறோம்.
\s5
\v 8 எனவே, சகோதரர்களே, ஆசியாவில் எங்களுக்கு ஏற்பட்ட உபத்திரவத்தை நீங்கள் தெரிந்துகொள்ளாமலிருக்க எங்களுக்கு மனமில்லை. என்னவென்றால், நாங்கள் பிழைப்போம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இல்லாமல்போகும் அளவிற்கு, எங்களுடைய பலத்திற்கும் மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டானது.
\v 9 நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாக இல்லாமல், மரித்தவர்களை உயிரோடு எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாக இருப்பதற்காக, மரணம் வரும் என்று நாங்கள் எங்களுக்குள்ளே உறுதியாக இருந்தோம்.
\v 10 அப்படிப்பட்ட மரணத்திலிருந்தும் அவர் எங்களைக் காப்பாற்றினார், இப்பொழுதும் காப்பாற்றுகிறார், இனிமேலும் காப்பாற்றுவார் என்று அவரையே நம்பியிருக்கிறோம்.
\s5
\v 11 அநேகர் மூலமாக எங்களுக்கு உண்டான இரக்கத்திற்காக அநேகரால் எங்கள் நிமித்தம் ஸ்தோத்திரங்கள் செலுத்தப்படுவதற்கு, நீங்களும் ஜெபத்தினால் எங்களுக்கு உதவிசெய்யுங்கள்.
\s1 பவுலின் பயணமாற்றம்
\s5
\p
\v 12 உலகத்திற்குரிய ஞானத்தோடு நடக்காமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலும், விசேஷமாக உங்களிடமும், கபடம் இல்லாமல் உண்மையோடு நடந்தோம் என்று, எங்களுடைய மனது எங்களுக்குச் சொல்லும் சாட்சியே எங்களுடைய புகழ்ச்சியாக இருக்கிறது.
\v 13 ஏனென்றால், நீங்கள் படித்தும் புரிந்தும் இருக்கிற விஷயங்களைத்தவிர, வேறொன்றையும் நாங்கள் உங்களுக்கு எழுதவில்லை; முடிவுவரைக்கும் அப்படியே புரிந்துகொள்வீர்கள் என்று நம்பியிருக்கிறேன்.
\v 14 கர்த்தராகிய இயேசு வரும்நாளிலே நீங்கள் எங்களுக்குப் புகழ்ச்சியாக இருப்பதுபோல, நாங்களும் உங்களுக்குப் புகழ்ச்சியாக இருப்போம் என்பதை ஓரளவு ஒத்துக்கொண்டிருக்கிறீர்களே.
\s5
\v 15 நான் இப்படிப்பட்ட நம்பிக்கையை உடையவனாக இருக்கிறதினால், உங்களுக்கு இரண்டாவதுமுறையும் பிரயோஜனம் உண்டாவதற்காக, முதலாவது உங்களிடம் வரவும்,
\v 16 பின்பு உங்களுடைய ஊர்வழியாக மக்கெதோனியா நாட்டிற்குப் போகவும், மக்கெதோனியாவைவிட்டு மீண்டும் உங்களிடம் வரவும், உங்களால் யூதேயா நாட்டிற்கு நான் வழியனுப்பப்படவேண்டும் என்றும் யோசனையாக இருந்தேன்.
\s5
\v 17 இப்படி நான் யோசித்தது வீணாக யோசித்தேனோ? அல்லது ஆம் ஆம் என்கிறதும், இல்லை இல்லை என்கிறதும், என்னிடத்திலே இருப்பதற்காக, நான் யோசிக்கிறவைகளை சரீரத்தின்படி யோசிக்கிறேனோ?
\v 18 நாங்கள் உங்களுக்குச் சொன்ன வார்த்தை ஆம் என்றும் இல்லை என்றும் இல்லை; அதற்கு உண்மையுள்ள தேவனே சாட்சி.
\s5
\v 19 என்னாலும், சில்வானுவினாலும், தீமோத்தேயுவினாலும், உங்களுக்குள்ளே பிரசங்கிக்கப்பட்ட தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவும் ஆம் என்றும், இல்லை என்றும் இல்லாமல், ஆம் என்றே இருக்கிறார்.
\v 20 எங்களால் தேவனுக்கு மகிமை உண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவிற்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.
\s5
\v 21 உங்களோடு எங்களையும் கிறிஸ்துவிற்குள் உறுதிப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே.
\v 22 அவர் நம்மை முத்திரை செய்து, நம்முடைய இருதயங்களில் ஆவியானவரை உத்திரவாதமாகக் கொடுத்திருக்கிறார்.
\s5
\v 23 மேலும் நான் உங்களை வருத்தப்படுத்தாமல் இருப்பதற்காகத்தான் இதுவரைக்கும் கொரிந்து பட்டணத்திற்கு வராமல் இருக்கிறேன் என்று, என் ஆத்துமாவின்பேரில் தேவனையே சாட்சியாக வைக்கிறேன்.
\v 24 உங்களுடைய விசுவாசத்திற்கு நாங்கள் அதிகாரிகளாக இல்லாமல், நீங்கள் உங்களுடைய விசுவாசத்தில் நிலைத்து நிற்பதால், உங்களுடைய சந்தோஷத்திற்கு உதவியாக இருக்கிறோம்.
\s5
\c 2
\cl அத்தியாயம்– 2
\p
\v 1 நான் மீண்டும் துக்கத்தோடு உங்களிடம் வரக்கூடாது என்று எனக்குள்ளே தீர்மானம்பண்ணிக்கொண்டேன்.
\v 2 நான் உங்களைத் துக்கப்படுத்தினால், என்னாலே துக்கமடைந்தவனைத்தவிர, வேறு யார் என்னைச் சந்தோஷப்படுத்துவான்?
\s5
\v 3 என்னுடைய சந்தோஷம் உங்களெல்லோருக்கும் சந்தோஷமாக இருக்கும் என்று, நான் உங்களெல்லோரையும்பற்றி நம்பிக்கை உள்ளவனாக இருந்து, நான் வரும்போது, என்னைச் சந்தோஷப்படுத்தவேண்டியவர்களால் நான் துக்கமடையாமல் இருப்பதற்காக, அதை உங்களுக்கு எழுதினேன்.
\v 4 அன்றியும், நீங்கள் துக்கப்படுவதற்காக எழுதாமல், உங்கள்மேல் நான் வைத்த அன்பின் அளவை நீங்கள் தெரிந்துகொள்வதற்காகவே, அதிக வியாகுலமும் மனவருத்தமும் அடைந்தவனாக அதிகக் கண்ணீரோடு உங்களுக்கு எழுதினேன்.
\s1 பாவிகளுக்கு மன்னிப்பு
\s5
\p
\v 5 துக்கம் உண்டாக்கினவன் எனக்கு மாத்திரமல்ல, ஏறக்குறைய உங்களெல்லோருக்கும் துக்கம் உண்டாக்கினான்; நான் உங்கள் எல்லோர்மேலும் அதிக சுமையைச் சுமத்தாமல் இருப்பதற்காக இதைச் சொல்லுகிறேன்.
\v 6 அப்படிப்பட்டவனுக்கு அநேகரால் உண்டான இந்தத் தண்டனையே போதும்.
\v 7 எனவே அவன் அதிக துக்கத்தில் மூழ்கிப்போகாமல் இருக்க, நீங்கள் அவனுக்கு மன்னித்து ஆறுதல் செய்யவேண்டும்.
\s5
\v 8 அப்படியே, உங்களுடைய அன்பை அவனுக்குக் காண்பிக்கவேண்டும் என்று உங்களை வேண்டிக்கொள்கிறேன்.
\v 9 நீங்கள் எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்திருக்கிறீர்களோ என்று உங்களைச் சோதித்துப் பார்ப்பதற்காக இப்படி எழுதினேன்.
\s5
\v 10 யாரை நீங்கள் மன்னிக்கிறீர்களோ, அவனை நானும் மன்னிக்கிறேன்; மேலும் எதை நான் மன்னித்திருக்கிறேனோ, அதை உங்களுக்காக கிறிஸ்துவினுடைய சந்நிதானத்திலே மன்னித்திருக்கிறேன்.
\v 11 சாத்தானாலே நாம் மோசமடையாமல் இருக்க அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் இல்லை.
\s1 புதிய உடன்படிக்கையின் ஊழியம்
\s5
\p
\v 12 மேலும் நான் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக துரோவா பட்டணத்திற்கு வந்தபோது, கர்த்தராலே எனக்குக் கதவு திறக்கப்பட்டிருக்கும்போது,
\v 13 நான் என் சகோதரனாகிய தீத்துவைப் பார்க்காததினாலே, என் மனதில் சமாதானம் இல்லாமல் இருந்தது. எனவே நான் அவர்களைவிட்டு, மக்கெதோனியா நாட்டிற்குப் புறப்பட்டுப்போனேன்.
\s5
\v 14 கிறிஸ்துவிற்குள் எப்பொழுதும் எங்களை வெற்றியடையச்செய்து, எல்லா இடங்களிலும் எங்களைக்கொண்டு அவரைத் தெரிந்துகொள்கிற அறிவின் நறுமணத்தை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
\v 15 இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நறுமணமாக இருக்கிறோம்.
\s5
\v 16 கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம். இவைகளை நடத்துவதற்கு தகுதியானவன் யார்?
\v 17 அநேகரைப்போல, நாங்கள் தேவவசனத்தைக் கலப்படம் செய்து பேசாமல், சுத்தமாகவும், தேவனால் அருளப்பட்டபடியாகவே, கிறிஸ்துவிற்குள் தேவசந்நிதியில் பேசுகிறோம்.
\s5
\c 3
\cl அத்தியாயம்– 3
\p
\v 1 எங்களை நாங்களே மீண்டும் பெருமைப்படுத்தத் தொடங்குகிறோமோ? அல்லது சிலருக்கு வேண்டியதாக இருக்கிறதுபோல, உங்களுக்கு சிபாரிசுக் கடிதங்களை அனுப்புவதும், உங்களிடமிருந்து சிபாரிசுக் கடிதங்களைப் பெற்றுக்கொள்வதும் எங்களுக்குத் தேவையோ?
\v 2 எங்களுடைய இருதயங்களில் எழுதப்பட்டும், எல்லா மனிதர்களாலும் அறிந்தும், படித்தும் இருக்கிற எங்களுடைய சிபாரிசுக் கடிதங்கள் நீங்கள்தானே.
\v 3 ஏனென்றால், நீங்கள் எங்களுடைய ஊழியத்தினால் உண்டாகிய கிறிஸ்துவின் கடிதமாக இருக்கிறீர்கள் என்று வெளிக்காட்டப்பட்டிருக்கிறது; அது மையினால் இல்லை, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும்; கற்பலகைகளில் இல்லை, இருதயங்களாகிய பலகைகளிலும் எழுதப்பட்டிருக்கிறது.
\s5
\v 4 நாங்கள் தேவனுக்கு முன்பாகக் கிறிஸ்துவின் மூலமாக இப்படிப்பட்ட நம்பிக்கையை உடையவர்களாக இருக்கிறோம்.
\v 5 எங்களால் ஏதாவது ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் இல்லை; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது.
\v 6 புதிய உடன்படிக்கையின் ஊழியக்காரர்களாக இருப்பதற்கு, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாக இல்லாமல், ஆவியானவருக்குரியதாக இருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆனால், ஆவியோ உயிர் கொடுக்கிறது.
\s1 புதிய உடன்படிக்கையின் மகிமை
\s5
\p
\v 7 எழுத்துக்களினால் எழுதப்பட்டுக் கற்களில் பொறிக்கப்பட்டிருந்த மரணத்திற்கான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமையின் பிரகாசம் உண்டானதினால், இஸ்ரவேல் மக்கள் அவன் முகத்தை நேரடியாகப் பார்க்கமுடியாமல் இருந்தார்களே.
\v 8 மங்கிப்போகிற மகிமையுடைய அந்த ஊழியம் அப்படிப்பட்ட மகிமையுள்ளதாக இருந்தால், ஆவியானவருக்குரிய ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுள்ளதாக இருக்கும்?
\s5
\v 9 அழிவுக்கான தீர்ப்பைக் கொடுக்கும் ஊழியம் மகிமையுள்ளதாக இருந்தால், நீதியைக் கொடுக்கும் ஊழியம் அதிக மகிமையுள்ளதாக இருக்குமே.
\v 10 இப்படியாக, மகிமைப்பட்டிருந்த அந்த ஊழியம் இந்த ஊழியத்திற்கு உண்டாயிருக்கிற சிறந்த மகிமைக்கு முன்பாக மகிமையே அல்ல.
\v 11 அன்றியும் மங்கிப்போவதே மகிமையுள்ளதாக இருந்ததானால், நிலைத்திருப்பது அதிக மகிமையுள்ளதாக இருக்குமே.
\s5
\v 12 நாங்கள் இப்படிப்பட்ட நம்பிக்கையுடையவர்களாக இருப்பதால், மிகவும் தாராளமாகப் பேசுகிறோம்.
\v 13 மேலும் மங்கிப்போகிற மகிமையின் முடிவை இஸ்ரவேல் மக்கள் நோக்கிப் பார்க்காதபடி, மோசே தன் முகத்தின்மேல் முக்காடு போட்டுக்கொண்டதுபோல நாங்கள் போடுகிறதில்லை.
\s5
\v 14 அவர்களுடைய மனது கடினப்பட்டது; இந்தநாள் வரைக்கும் பழைய ஏற்பாடு படிக்கும்போது, அந்த முக்காடு நீங்காமல் இருக்கிறது; அது கிறிஸ்துவினாலே நீக்கப்படுகிறது.
\v 15 மோசேயின் ஆகமங்கள் படிக்கப்படும்போது, இந்தநாள் வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின்மேல் இருக்கிறதே.
\v 16 அவர்கள் கர்த்தரிடத்தில் மனம்திரும்பும்போது, அந்த முக்காடு எடுக்கப்படும்.
\s5
\v 17 கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையும் உண்டு.
\v 18 நாமெல்லோரும் திறந்த முகமாகக் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே பார்க்கிறதுபோலப் பார்த்து, ஆவியாக இருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகவே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபமடைகிறோம்.
\s5
\c 4
\cl அத்தியாயம்– 4
\s1 பவுலின் உத்தமமும் நம்பகத்தன்மையும்
\p
\v 1 இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம் பெற்றிருப்பதால் சோர்ந்துபோகிறது இல்லை.
\v 2 வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாக நடக்காமலும், தேவ வசனத்தைத் திரித்துக் கூறாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்குமுன்பாக எல்லா மனிதர்களுடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமர்கள் என்று விளங்கப்பண்ணுகிறோம்.
\s5
\v 3 எங்களுடைய நற்செய்தி மறைபொருளாக இருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாக இருக்கும்.
\v 4 தேவனுடைய சாயலாக இருக்கிற கிறிஸ்துவின் மகிமையான நற்செய்தியின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாக இல்லாதபடி, இந்த உலகத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.
\s5
\v 5 நாங்கள் எங்களையே பிரசங்கிக்காமல், கிறிஸ்து இயேசுவைக் கர்த்தர் என்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் நாங்கள் உங்களுடைய ஊழியக்காரர்கள் என்றும் பிரசங்கிக்கிறோம்.
\v 6 இருளில் இருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்தில் உள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணுவதற்காக, எங்களுடைய இருதயங்களிலே பிரகாசித்தார்.
\s5
\v 7 இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாகாமல், தேவனால் உண்டாகியிருக்கிறது என்று தெரியும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.
\v 8 நாங்கள் எல்லாப் பக்கங்களிலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கம் அடைவதும், மனம் உடைவதும் இல்லை;
\v 9 துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுவதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை.
\v 10 கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவன் எங்களுடைய சரீரத்திலே தெரியும்படி, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்களுடைய சரீரத்தில் சுமந்து திரிகிறோம்.
\s5
\v 11 எப்படியென்றால், மரணத்திற்குரிய எங்களுடைய சரீரத்திலே இயேசுவினுடைய ஜீவன் தெரியும்படி உயிரோடு இருக்கிற நாங்கள் எப்பொழுதும் இயேசுவுக்காக மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம்.
\v 12 இப்படி மரணமானது எங்களிடமும், ஜீவனானது உங்களிடமும் பெலன் செய்கிறது.
\s5
\v 13 விசுவாசித்தேன், ஆகவே, பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாக இருந்து, விசுவாசிக்கிறதினால் பேசுகிறோம்.
\v 14 கர்த்தராகிய இயேசுவை உயிரோடு எழுப்பினவர் எங்களையும் இயேசுவைக்கொண்டு எழுப்பி, உங்களோடு தமக்குமுன்பாக நிறுத்துவார் என்று அறிந்திருக்கிறோம்.
\v 15 தேவனுடைய மகிமை அநேகருக்கு வெளிப்படுவதற்கேதுவாக அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே கிருபையானது பெருகும்படி, இவைகளெல்லாம் உங்களுக்காக உண்டாகியிருக்கிறது.
\s5
\v 16 எனவே, நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்களுடைய புறம்பான மனிதன் அழிந்தாலும், உள்ளான மனிதன் நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறான்.
\v 17 மேலும் காணப்படுகிறவைகளை இல்லை, காணாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கிப்போகும் இலேசான நம்முடைய உபத்திரவம், மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.
\v 18 ஏனென்றால், காணப்படுகிறவைகள் தற்காலிகமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.
\s5
\c 5
\cl அத்தியாயம்– 5
\s1 பவுலின் பாடுகளுக்கான காரணங்கள்
\p
\v 1 பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய சரீரம் அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலை இல்லாத நித்திய வீடு பரலோகத்தில் நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்.
\v 2 ஏனென்றால், இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வீட்டை அணிந்துகொள்ள அதிக ஏக்கம் உள்ளவர்களாக இருக்கிறோம்;
\v 3 அணிந்துகொண்டவர்களானால், நிர்வாணிகளாகக் காணப்படமாட்டோம்.
\s5
\v 4 இந்தக் கூடாரத்தில் இருக்கிற நாம் சுமை சுமந்து தவிக்கிறோம்; இந்தப் போர்வையைக் களைந்து போடவேண்டும் என்று விரும்பாமல், மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்காக போர்வை தரித்தவர்களாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம்.
\v 5 இதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் தேவனே; ஆவி என்னும் உத்திரவாதத்தை நமக்குத் தந்தவரும் அவரே.
\s5
\v 6 நாம் காண்பவைகளின்படி நடக்காமல், அவரை விசுவாசித்து நடக்கிறோம்.
\v 7 இந்த சரீரத்தில் குடியிருக்கும்போது கர்த்தரிடம் குடியில்லாதவர்களாக இருக்கிறோம் என்று தெரிந்தும், எப்பொழுதும் தைரியமாக இருக்கிறோம்.
\v 8 நாம் தைரியமாகவே இருந்து, இந்த சரீரத்தைவிட்டுப் போகவும் கர்த்தரிடம் குடியிருக்கவும் அதிகமாக விரும்புகிறோம்.
\s5
\v 9 அதினாலேயே நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியில்லாமல் போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாக இருக்கவிரும்புகிறோம்.
\v 10 ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தகுந்த பலனைப் பெற்றுக்கொள்வதற்காக, நாமெல்லோரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக நிற்கவேண்டும்.
\s1 ஒப்புரவாக்குதலின் ஊழியம்
\s5
\p
\v 11 எனவே, கர்த்தருக்குப் பயப்படவேண்டும் என்று அறிந்து, மனிதர்களுக்குப் புத்திசொல்லுகிறோம்; தேவனுக்குமுன்பாக வெளிப்படையாக இருக்கிறோம்; உங்களுடைய மனச்சாட்சிக்கும் வெளிப்படையாக இருக்கிறோம் என்று நம்புகிறேன்.
\v 12 இதனாலே நாங்கள் உங்களுக்கு முன்பாக எங்களை மீண்டும் பெருமைப்படுத்திக்கொள்ளாமல், இருதயத்தில் இல்லை, வெளிவேஷத்தில் மேன்மை பாராட்டுகிறவர்களுக்கு எதிரே, எங்களைக்குறித்து நீங்கள் மேன்மைபாராட்டும்படி வாய்ப்பை உண்டாக்குகிறோம்.
\s5
\v 13 நாங்கள் பைத்தியம் பிடித்தவர்களென்றால் தேவனுக்காக அப்படியிருக்கிறோம்; தெளிந்த புத்தியுள்ளவர்களென்றால் உங்களுக்காக அப்படியிருக்கிறோம்.
\v 14 கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை அதிகமாக உற்சாகப்படுத்துகிறது; ஏனென்றால், எல்லோருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லோரும் மரித்தார்கள் என்றும்;
\v 15 வாழ்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று வாழாமல், தங்களுக்காக மரித்து உயிரோடு எழுந்தவருக்கென்று வாழ்வதற்காக, அவர் எல்லோருக்காகவும் மரித்தார் என்றும் நிதானிக்கிறோம்.
\s5
\v 16 எனவே, இனிமேல், நாங்கள் ஒருவனையும் சரீரத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் சரீரத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை சரீரத்தின்படி அறியோம்.
\v 17 இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவிற்குள் இருந்தால் புதுப்படைப்பாக இருக்கிறான்; பழையவைகள் எல்லாம் ஒழிந்துபோனது, எல்லாம் புதிதானது.
\s5
\v 18 இவைகளெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது; அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மை அவரோடு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.
\v 19 அது என்னவென்றால், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவிற்குள் அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடம் ஒப்புவித்தார்.
\s5
\v 20 ஆகவே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவின் பிரதிநிதிகளாக இருந்து, தேவனோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவினால் உங்களை வேண்டிக்கொள்கிறோம்.
\v 21 நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாக இருப்பதற்காக, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.
\s5
\c 6
\cl அத்தியாயம்– 6
\p
\v 1 தேவனுடைய கிருபையை நீங்கள் வீணாகப் பெற்றுக்கொள்ளாதபடி, தேவனுடைய உடன்வேலையாட்களாகிய நாங்கள் உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.
\v 2 சரியான காலத்திலே நான் உன் வார்த்தையைக் கேட்டு, இரட்சிப்பின் நாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே சரியான காலம், இப்பொழுதே மீட்பின் நாள்.
\s1 பவுலின் உபத்திரவங்கள்
\p
\v 3 இந்த ஊழியம் குற்றஞ்சாட்டப்படாமல் இருக்க, நாங்கள் யாருக்கும் இடறல் உண்டாக்காமல், எல்லாவிதத்திலும், எங்களை தேவ ஊழியர்களாக விளங்கப்பண்ணுகிறோம்.
\s5
\v 4 அதிக பொறுமையிலும், உபத்திரவங்களிலும், நெருக்கங்களிலும், இடுக்கண்களிலும்,
\v 5 அடிகளிலும், காவல்களிலும், கலகங்களிலும், பிரயாசங்களிலும், கண்விழிப்புகளிலும், உபவாசங்களிலும்,
\v 6 கற்பிலும், அறிவிலும், நீடிய சாந்தத்திலும், தயவிலும், பரிசுத்த ஆவியிலும், மாயமில்லாத அன்பிலும்,
\v 7 சத்தியவசனத்திலும், தேவபலத்திலும்; நீதியாகிய வலது இடதுபக்கத்து ஆயுதங்களை அணிந்திருக்கிறதிலும்,
\s5
\v 8 கனத்திலும், கனவீனத்திலும், இகழ்ச்சியிலும், புகழ்ச்சியிலும்; ஏமாற்றுபவர்கள் என்று சொல்லப்பட்டாலும், உண்மை உள்ளவர்களாகவும்,
\v 9 அறியப்படாதவர்கள் என்னப்பட்டாலும் நன்றாகத் அறியப்பட்டவர்களாகவும், சாகிறவர்கள் என்னப்பட்டாலும் உயிரோடு இருக்கிறவர்களாகவும், தண்டிக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் கொல்லப்படாதவர்களாகவும்,
\v 10 துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், ஏழைகள் என்னப்பட்டாலும் அநேகரை செல்வந்தர்களாக்குகிறவர்களாகவும், ஒன்றும் இல்லாதவர்கள் என்னப்பட்டாலும் எல்லாவற்றையும் உடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம்.
\s5
\v 11 கொரிந்தியர்களே, எங்களுடைய வாய் உங்களோடு பேசத் திறந்திருக்கிறது, எங்களுடைய இருதயம் உங்களுக்குத் திறந்திருக்கிறது.
\v 12 எங்களுடைய உள்ளம் உங்களைக்குறித்து நெருக்கமடையவில்லை, உங்களுடைய உள்ளமே எங்களைக்குறித்து நெருக்கமடைந்திருக்கிறது.
\v 13 எனவே அதற்குப் பதிலாக நீங்களும் உங்களுடைய இருதயங்களைத் திறவுங்கள் என்று, குழந்தைகளுக்குச் சொல்லுகிறதுபோல, உங்களுக்குச் சொல்லுகிறேன்.
\s1 அவிசுவாசிகளுடன் இணைந்திருத்தல்
\s5
\p
\v 14 அவிசுவாசிகளுடன் இணைக்கப்படாமல் இருங்கள்; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தம் ஏது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியம் ஏது?
\v 15 கிறிஸ்துவிற்கும் பேலியாளுக்கும் ஒப்பந்தம் ஏது? அவிசுவாசியுடன் விசுவாசிக்குப் பங்கு ஏது?
\v 16 தேவனுடைய ஆலயத்திற்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தம் ஏது? நான் அவர்களுக்குள்ளே வாழ்ந்து, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்களுக்கு தேவனாக இருப்பேன், அவர்கள் என் மக்களாக இருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடியே, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாக இருக்கிறீர்களே.
\s5
\v 17 எனவே, நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாமல் இருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
\v 18 அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாக இருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரர்களும் குமாரத்திகளுமாக இருப்பீர்கள் என்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.
\s5
\c 7
\cl அத்தியாயம்– 7
\p
\v 1 இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, சரீரத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுத்தமானவைகளும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடு நிறைவாக்குவோம்.
\s1 பவுலின் சந்தோஷம்
\s5
\p
\v 2 எங்களுக்கு உங்கள் இருதயத்தில் இடங்கொடுங்கள்; நாங்கள் யாருக்கும் அநியாயம் செய்யவில்லை, யாரையும் கெடுக்கவில்லை, யாரையும் ஏமாற்றவில்லை.
\v 3 உங்களைக் குற்றவாளிகளாக்குவதற்கு இப்படி நான் சொல்லுகிறதில்லை; முன்னே நான் சொல்லியபடி, உங்களோடு மரிக்கவும் பிழைக்கவும் எங்களுடைய இருதயங்களில் நீங்கள் இருக்கிறீர்களே.
\v 4 அதிக தைரியத்தோடு உங்களோடு பேசுகிறேன்; உங்களைக்குறித்து அதிகமாக மேன்மைபாராட்டுகிறேன், ஆறுதலால் நிறைந்திருக்கிறேன். எங்களுக்கு உண்டான எல்லா உபத்திரவத்திலேயும் பரிபூரண சந்தோஷமாக இருக்கிறேன்.
\s5
\v 5 எப்படியென்றால், நாங்கள் மக்கெதோனியா நாட்டிற்கு வந்தபோது, எங்களுடைய சரீரத்திற்கு ஓய்வு இல்லாமல், எல்லாப் பக்கத்திலேயும் உபத்திரவப்பட்டோம்; வெளியே போராட்டங்களும், உள்ளே பயங்களும் இருந்தன.
\v 6 ஆனாலும், சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதல் செய்கிற தேவன், தீத்து வந்ததினாலே எங்களுக்கு ஆறுதல் செய்தார்.
\v 7 அவன் வந்ததினாலே மாத்திரமல்ல, உங்களுடைய வாஞ்சையையும், உங்களுடைய வருத்தத்தையும், என்னைப்பற்றி உங்களுக்கு உண்டான பக்திவைராக்கியத்தையும் அவன் பார்த்து, உங்களால் அடைந்த ஆறுதலைத் தெரியப்படுத்தினதினாலும், நானும் ஆறுதலடைந்து அதிகமாகச் சந்தோஷப்பட்டேன்.
\s5
\v 8 ஆதலால் நான் கடிதத்தினால் உங்களைத் துக்கப்படுத்தியிருந்தும், அந்தக் கடிதம் கொஞ்சகாலம் உங்களைத் துக்கப்படுத்தினது என்று பார்த்து நான் வருத்தப்பட்டிருந்தும், இப்பொழுது வருத்தப்படுகிறது இல்லை.
\v 9 இப்பொழுது சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் துக்கப்பட்டதற்காக இல்லை, மனம்திரும்புகிறதற்கேற்றத் துக்கப்பட்டதற்காகவே சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் ஒன்றிலும் எங்களால் நஷ்டப்படாதபடி, தேவனுக்கேற்ற துக்கம் அடைந்தீர்களே.
\v 10 தேவனுக்கேற்ற துக்கம் பின்பு வருத்தப்படுகிறதற்கு ஏதுவாக இல்லாமல் இரட்சிப்பிற்குரிய மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; உலகத்தின் துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது.
\s5
\v 11 பாருங்கள், நீங்கள் தேவனுக்கேற்ற துக்கமடைந்ததுண்டே; அது உங்களிடம் எவ்வளவு வாஞ்சையையும், குற்றம் தீர எவ்வளவு நியாயம் சொல்லுதலையும், எவ்வளவு வெறுப்பையும், எவ்வளவு பயத்தையும், எவ்வளவு ஆவலையும், எவ்வளவு பக்திவைராக்கியத்தையும், எவ்வளவு கண்டிப்பையும் உண்டாக்கியது. இந்தக் காரியத்திலே நீங்கள் எல்லாவிதத்திலும் உங்களைக் குற்றமற்றவர்கள் என்று விளங்கப்பண்ணினீர்கள்.
\v 12 எனவே, நான் உங்களுக்கு அப்படி எழுதியிருந்தும், அநியாயம் செய்தவனாலும் இல்லை, அநியாயம் செய்யப்பட்டவனாலும் இல்லை, தேவனுக்குமுன்பாக உங்களைக்குறித்து எங்களுக்கு உண்டாயிருக்கிற வாஞ்சையை உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்காகவே அப்படி எழுதினேன்.
\s5
\v 13 இதனால் நீங்கள் ஆறுதலடைந்ததினாலே நாங்களும் ஆறுதலடைந்தோம்; விசேஷமாகத் தீத்துவினுடைய ஆவி உங்கள் அனைவராலும் ஆறுதல் அடைந்ததினாலே, அவனுக்கு உண்டான சந்தோஷத்தினால் அதிக சந்தோஷப்பட்டோம்.
\v 14 இப்படியிருக்க, உங்களுக்குப் புகழ்ச்சியாக நான் அவனுடன் சொன்ன எதைக்குறித்தும் வெட்கப்படமாட்டேன்; நாங்கள் எல்லாவற்றையும் உங்களுக்குச் சத்தியமாகச் சொன்னதுபோல, தீத்துவுடனே நாங்கள் உங்களுக்குப் புகழ்ச்சியாகச் சொன்னதும் சத்தியமாக விளங்கினதே.
\s5
\v 15 மேலும் நீங்கள் எல்லோரும் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, பயத்தோடும் நடுக்கத்தோடும் தன்னை ஏற்றுக்கொண்டதை அவன் நினைக்கும்போது, அவனுடைய உள்ளம் உங்களைப்பற்றி அதிக அன்பாக இருக்கிறது.
\v 16 எனவே, எல்லாவிதத்திலும் உங்களைக்குறித்து எனக்குத் திடமான நம்பிக்கை இருக்கிறது என்று சந்தோஷப்படுகிறேன்.
\s5
\c 8
\cl அத்தியாயம்– 8
\s1 எருசலேமில் உள்ள பரிசுத்தவான்களைத் தாங்குதல்
\p
\v 1 அன்றியும் சகோதர, சகோதரிகளே மக்கெதோனியா நாட்டு சபைகளுக்கு தேவன் அளித்த கிருபையை உங்களுக்கு அறிவிக்கிறோம்.
\v 2 அவர்கள் அதிக உபத்திரவத்தினாலே சோதிக்கப்படும்போது, கொடிய தரித்திரம் உடையவர்களாக இருந்தும், தங்களுடைய பரிபூரண சந்தோஷத்தினாலே அதிக தாராளமாகக் கொடுத்தார்கள்.
\s5
\v 3 மேலும் அவர்கள் தங்களுடைய தகுதிக்கும், தங்களுடைய தகுதிக்கு மிஞ்சியும் கொடுக்க, தாங்களே விருப்பம் உள்ளவர்களாக இருந்தார்கள் என்பதற்கு, நான் சாட்சியாக இருக்கிறேன்.
\v 4 தங்களுடைய உதவிகளையும், பரிசுத்தவான்களுக்குச் செய்யப்படும் தர்ம ஊழியத்தின் பங்கையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் எங்களை அதிகமாக வேண்டிக்கொண்டார்கள்.
\v 5 மேலும் நாங்கள் எதிர்பார்த்தபடி கொடுக்காமல், தேவனுடைய விருப்பத்தினாலே தங்களைத்தாமே, முதலில் கர்த்தருக்கும், பின்பு எங்களுக்கும் ஒப்புக்கொடுத்தார்கள்.
\s5
\v 6 எனவே, தீத்து இந்தத் தர்மகாரியத்தை உங்களிடம் தொடங்கினபடியே, அதை முடிக்கவும் வேண்டும் என்று அவனைக் கேட்டுக்கொண்டோம்.
\v 7 அல்லாமலும், விசுவாசத்திலும், போதிப்பதிலும், அறிவிலும், எல்லாவிதமான எச்சரிக்கையிலும், எங்கள்மேல் உள்ள உங்களுடைய அன்பிலும், மற்ற எல்லாக் காரியங்களிலும், நீங்கள் பெருகியிருக்கிறதுபோல, இந்தத் தர்மகாரியத்திலும் பெருகவேண்டும்.
\s5
\v 8 இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், மற்றவர்களுடைய வாஞ்சையைக் கொண்டு, உங்களுடைய அன்பின் உண்மையைச் சோதிப்பதற்காகவே சொல்லுகிறேன்.
\v 9 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் செல்வந்தராக இருந்தும், நீங்கள் அவருடைய ஏழ்மையினாலே செல்வந்தர்களாவதற்கு, உங்களுக்காக ஏழையானாரே.
\s5
\v 10 இதைக்குறித்து என் யோசனையை உங்களுக்கு அறிவிக்கிறேன்; இதைச் செய்கிறதற்கு மட்டுமில்லை, செய்யவேண்டும் என்று விருப்பப்பட்டு கடந்த வருடத்தில் ஆரம்பம்பண்ணின உங்களுக்கு இது தகுதியாக இருக்கும்.
\v 11 எனவே, அதை இப்பொழுது செய்து நிறைவேற்றுங்கள்; கொடுக்கவேண்டும் என்கிற விருப்பம் உண்டாயிருந்ததுபோல, உங்களிடம் இருக்கிறவைகளில் எடுத்து அதை நிறைவேற்றுதலும் உண்டாவதாக.
\v 12 ஒருவனுக்கு மனவிருப்பம் இருந்தால், அவனுக்கு இல்லாதவைகளின்படியல்ல, அவனுக்கு இருக்கிறவைகளின்படியே அங்கீகரிக்கப்படும்.
\s5
\v 13 மற்றவர்களுக்கு உதவியும், உங்களுக்கு வருத்தமும் உண்டாகும்படியல்ல, ஏற்றத்தாழ்வில்லாமல் இருக்கும்படியாகவே சொல்லுகிறேன்.
\v 14 எப்படியென்றால், அதிகமாகச் சேர்த்தவனுக்கு அதிகமானதும் இல்லை, கொஞ்சமாகச் சேர்த்தவனுக்குக் குறைவானதும் இல்லை என்று எழுதியிருக்கிறபடி,
\v 15 ஏற்றத்தாழ்வற்றப் பிரமாணத்தின்படியே, அவர்களுடைய செல்வம் உங்களுடைய வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக.
\s1 தீத்துவின் ஒப்படைப்பு
\s5
\p
\v 16 அன்றியும் உங்களுக்காக இப்படிப்பட்ட வாஞ்சை உண்டாயிருக்கும்படி தீத்துவின் இருதயத்தில் அருளின தேவனுக்கு ஸ்தோத்திரம்.
\v 17 நாங்கள் கேட்டுக்கொண்டதை அவன் அங்கீகரித்ததோடு, அவன் அதிக வாஞ்சையாக இருந்து, தன் மனவிருப்பத்தின்படியே உங்களிடம் வருவதற்காகப் புறப்பட்டான்.
\s5
\v 18 நற்செய்தி ஊழியத்தில் எல்லா சபைகளிலும் புகழ்ச்சிபெற்ற ஒரு சகோதரனை அவனோடுகூட அனுப்பியிருக்கிறோம்.
\v 19 அதுமட்டும் இல்லை, கர்த்தருக்கு மகிமை உண்டாகவும், உங்களுடைய மனவிருப்பம் விளங்கவும், எங்களுடைய ஊழியத்தினாலே சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக் கொண்டுபோகும்போது, எங்களுடைய பயணத்தில் துணையாக இருப்பதற்காக, அவன் சபைகளால் தெரிந்து நியமிக்கப்பட்டவனாகவும் இருக்கிறான்.
\s5
\v 20 எங்களுடைய ஊழியத்தினாலே சேர்க்கப்படும் இந்த அதிகமான தர்மப்பணத்தைக்குறித்து யாரும் எங்களைக் குற்றப்படுத்தாதபடி நாங்கள் எச்சரிக்கையாக இருந்து,
\v 21 கர்த்தருக்கு முன்பாகமட்டும் இல்லை, மனிதர்களுக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய விரும்புகிறோம்.
\s5
\v 22 மேலும், அநேக காரியங்களில் ஜாக்கிரதையுள்ளவன் என்று நாங்கள் பலமுறை பார்த்து அறிந்தவனும், இப்பொழுது உங்கள்மேல் உள்ள அதிக நம்பிக்கையினாலே அதிக எச்சரிக்கையுள்ளவனுமாகிய நம்முடைய சகோதரனையும் இவர்களோடு அனுப்பியிருக்கிறோம்.
\v 23 தீத்துவைக்குறித்து யாராவது விசாரித்தால், அவன் எனக்குக் கூட்டாளியும், உங்களுக்காக என் உடன்வேலையாளுமாக இருக்கிறான் என்றும்; எங்களுடைய சகோதரர்களைக்குறித்து ஒருவன் விசாரித்தால், அவர்கள் சபைகளில் இருந்து அனுப்பப்பட்ட பிரதிநிதிகளும், கிறிஸ்துவிற்கு மகிமையுமாக இருக்கிறார்கள் என்றும் அறியவேண்டும்.
\v 24 எனவே, உங்களுடைய அன்பையும், நாங்கள் உங்களைக்குறித்துச் சொன்ன புகழ்ச்சியையும், சபைகளுக்கு முன்பாக அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
\s5
\c 9
\cl அத்தியாயம்– 9
\p
\v 1 பரிசுத்தவான்களின் ஊழியத்திற்கு செய்யவேண்டிய உதவிகளைக்குறித்து, நான் அதிகமாக உங்களுக்கு எழுதவேண்டியதில்லை.
\v 2 உங்களுடைய மனவிருப்பத்தை அறிந்திருக்கிறேன்; அகாயாவில் உள்ளவர்கள் ஒருவருடமாக ஆயத்தமாக இருக்கிறார்கள் என்று, நான் மக்கெதோனியரிடம் சொல்லி, உங்களைப் புகழ்ந்தேனே; உங்களுடைய வாஞ்சை அநேகரை செயலில் ஈடுபடவைத்தது.
\s5
\v 3 அப்படியிருந்தும், உங்களைக்குறித்து நாங்கள் சொன்ன புகழ்ச்சி இந்தக் காரியத்தில் வீணாகப்போகாமல், நான் சொன்னபடி நீங்கள் ஆயத்தப்பட்டவர்களாக இருப்பதற்கு, இந்தச் சகோதரர்களை அனுப்பினேன்.
\v 4 மக்கெதோனியர்கள் என்னோடு வந்து, நீங்கள் ஆயத்தப்படாதவர்களாக இருப்பதைப் பார்த்தால், இவ்வளவு உறுதியாக உங்களைப் புகழ்ந்ததற்காக, நீங்கள் வெட்கப்படுவீர்கள் என்று நாங்கள் சொல்லாமல், நாங்களே வெட்கப்படவேண்டியதாக இருக்கும்.
\v 5 ஆகவே, வாக்குறுதிபண்ணப்பட்டிருக்கிற உங்களுடைய தர்ம உதவியானது கட்டாயப்படுத்திக் கொடுக்கப்பட்டதாக இல்லாமல், தாராளமாகக் கொடுக்கப்பட்டதாக இருப்பதற்காக அதை ஆயத்தப்படுத்துகிறதற்குச் சகோதரர்களை முதலில் உங்களிடம் அனுப்புவது அவசியம் என்று எனக்குத் தோன்றியது.
\s1 விதைப்பதும் அறுப்பதும்
\s5
\p
\v 6 பின்னும் நான் சொல்லுகிறது என்னவென்றால், கொஞ்சம் விதைக்கிறவன் கொஞ்சம் அறுப்பான், அதிகமாக விதைக்கிறவன் அதிகமாக அறுப்பான்.
\v 7 அவனவன் வருத்தத்தோடும் அல்ல, கட்டாயமாகவும் அல்ல, தன் மனதில் திட்டமிட்டபடியே கொடுக்கவேண்டும்; உற்சாகமாகக் கொடுக்கிறவனிடம் தேவன் பிரியமாக இருக்கிறார்.
\s5
\v 8 மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாகவும், எல்லாவித நல்ல செயல்களிலும் பெருகுகிறவர்களாகவும் இருப்பதற்காக, தேவன் உங்களில் எல்லாவிதமான கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராக இருக்கிறார்.
\v 9 வாரி இறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியே ஆகும்.
\s5
\v 10 விதைக்கிறவனுக்கு விதையையும், சாப்பிடுகிறதற்கு ஆகாரத்தையும் கொடுக்கிறவர் உங்களுக்கு விதையைக் கொடுத்து, அதைப் பெருகப்பண்ணி, உங்களுடைய நீதியின் விளைச்சலைப் பெருகச்செய்வார்.
\v 11 நீங்கள் எல்லா வகையிலும் செல்வந்தராகி தாராளகுணத்திலே சம்பூரணமுள்ளவர்களாவீர்கள். இதனால் தேவனுக்கு எங்கள் மூலமாக ஸ்தோத்திரமுண்டாகும்.
\s5
\v 12 இந்த தர்ம உதவியாகிய பணிவிடை பரிசுத்தவான்களுடைய குறைவுகளை நீக்குகிறதுமட்டுமல்லாமல், அநேகர் தேவனை ஸ்தோத்திரிப்பதினாலே சம்பூரண பலன் உள்ளதாகவும் இருக்கும்.
\v 13 அவர்கள் இந்த தர்ம உதவிகளாகிய நன்மையை அனுபவித்து, நீங்கள் கிறிஸ்துவின் நற்செய்தியைக் கீழ்ப்படிதலோடு அறிக்கையிட்டதினால், தங்களுக்கும் மற்ற அனைவருக்கும் நீங்கள் தாராளமாக தர்ம உதவிகள் செய்கிறதினாலும், அவர்கள் தேவனை மகிமைப்படுத்தி;
\v 14 உங்களுக்காக வேண்டுதல்செய்து, தேவன் உங்களுக்கு அளித்த மிகவும் விசேஷித்த கிருபையினால் உங்கள்மேல் வாஞ்சையாக இருக்கிறார்கள்.
\v 15 தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்.
\s5
\c 10
\cl அத்தியாயம்– 10
\s1 பவுலின் ஆவிக்குரிய வல்லமை
\p
\v 1 உங்களுக்கு முன்பாக இருக்கும்போது தாழ்மையாகவும், தூரத்திலே இருக்கும்போது உங்கள்மேல் கண்டிப்புடனும் இருக்கிற பவுலாகிய நான் கிறிஸ்துவின் சாந்தத்தையும் தயவையும் முன்வைத்து உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
\v 2 எங்களை சரீரத்தின்படி நடக்கிறவர்கள் என்று நினைக்கிற சிலரைக்குறித்து நான் கண்டிப்புடன் இருக்கவேண்டும் என்று நினைத்திருக்கிற தைரியத்தோடு, உங்கள் முன்பாக இருக்கும்போது, நான் கண்டிப்புள்ளவனாக இல்லாதபடி நீங்கள் எச்சரிக்கையாக இருக்க உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.
\s5
\v 3 நாங்கள் சரீரத்தில் நடக்கிறவர்களாக இருந்தும் சரீரத்தின்படி போர் செய்கிறவர்கள் இல்லை.
\v 4 எங்களுடைய போராயுதங்கள் சரீரத்திற்கு உரியவைகளாக இல்லாமல், அரண்களை அழிக்கிறதற்கு தேவபலமுள்ளவைகளாக இருக்கிறது.
\s5
\v 5 அவைகளால் நாங்கள் வாக்குவாதங்களையும், தேவனை அறிகிற அறிவிற்கு விரோதமாக எழும்புகிற எல்லா மேட்டிமையையும் அழித்து, எல்லா எண்ணங்களையும் கிறிஸ்துவிற்குக் கீழ்ப்படியுமாறு சிறைப்படுத்துகிறவர்களாக இருக்கிறோம்.
\v 6 உங்களுடைய கீழ்ப்படிதல் நிறைவேறும்போது, எல்லாக் கீழ்ப்படியாமைக்கும் தகுந்த நீதியுள்ள தண்டனையைச் செலுத்த ஆயத்தமாக இருக்கிறோம்.
\s5
\v 7 வெளித்தோற்றத்தின்படி பார்க்கிறீர்களா? ஒருவன் தன்னைக் கிறிஸ்துவிற்குரியவன் என்று நம்பினால், தான் கிறிஸ்துவிற்குரியவனாக இருக்கிறதுபோல நாங்களும் கிறிஸ்துவிற்குரியவர்கள் என்று அவன் தனக்குள்ளே சிந்திக்கட்டும்.
\v 8 மேலும், உங்களை அழிக்கிறதற்காக அல்ல, உங்களை உறுதியாகக் கட்டி எழுப்புகிறதற்குக் கர்த்தர் எங்களுக்குக் கொடுத்த அதிகாரத்தைக்குறித்து, நான் இன்னும்கொஞ்சம் அதிகமாக மேன்மைபாராட்டினாலும் நான் வெட்கப்படுவதில்லை.
\s5
\v 9 நான் கடிதங்களாலே உங்களைப் பயமுறுத்துகிறவனாகத் தோன்றாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன்.
\v 10 அவனுடைய கடிதங்கள் கடினமானவையும் பலமும் உள்ளவைகள்; சரீரத்தின் தோற்றமோ பலவீனமும், வசனம் அற்பமாகவும் இருக்கிறது என்கிறார்களே.
\s5
\v 11 அப்படிச் சொல்லுகிறவன், நாங்கள் தூரத்தில் இருக்கும்போது எழுதுகிற கடிதங்களால் வசனத்தில் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோமோ அப்படிப்பட்டவர்களாகவே அருகில் இருக்கும்போதும், செய்கையிலும் இருப்போம் என்று சிந்திக்கட்டும்.
\v 12 எனவே, தங்களைத்தாங்களே பெருமைப்படுத்திக் கொள்கிற சிலருக்கு நாங்கள் எங்களை சரியாக்கவும், ஒப்பிடவும் துணியமாட்டோம்; தங்களைக்கொண்டு தங்களையே அளந்துகொண்டு, தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக்கொள்கிற அவர்கள் புத்திமான்கள் இல்லை.
\s5
\v 13 நாங்கள் அளவிற்கு மிஞ்சி மேன்மைபாராட்டாமல், உங்களிடம் வந்தடைவதற்காக, தேவன் எங்களுக்கு அளந்து பகிர்ந்த அளவுப்பிரமாணத்தின்படியே மேன்மைபாராட்டுகிறோம்.
\v 14 உங்களிடம் வந்தடையாதவர்களாக நாங்கள் அளவிற்கு மிஞ்சிப்போகிறது இல்லை; நாங்கள் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பிரசங்கித்து உங்களிடம் வந்தோமே.
\s5
\v 15 எங்களுடைய அளவைக் கடந்து மற்றவர்களுடைய வேலைக்கு உட்பட்டு மேன்மை பாராட்டமாட்டோம்.
\v 16 ஆனாலும் உங்களுடைய விசுவாசம் பெருகும்போது, மற்றவர்களுடைய எல்லைகளுக்குள்ளே செய்யப்பட்டவைகளை நாங்கள் செய்ததாக மேன்மைபாராட்டாமல், உங்களுக்கு அப்பால் உள்ள இடங்களில் நற்செய்தியைப் பிரசங்கிக்கத்தக்கதாக, எங்களுடைய அளவின்படி உங்களால் மிகவும் பெருகி விருத்தியடைவோம் என்று நம்பிக்கையாக இருக்கிறோம்.
\s5
\v 17 மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மை பாராட்டவேண்டும்.
\v 18 தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமன் இல்லை, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்.
\s5
\c 11
\cl அத்தியாயம்– 11
\s1 பவுலும் கள்ள அப்போஸ்தலர்களும்
\p
\v 1 என் புத்தியீனத்தை நீங்கள் கொஞ்சம் சகித்துக்கொண்டால் நலமாக இருக்கும்; என்னைச் சகித்துமிருக்கிறீர்களே.
\v 2 நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே கணவனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியம் கொண்டிருக்கிறேன்.
\s5
\v 3 ஆனாலும், பாம்பானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை ஏமாற்றினதுபோல, உங்களுடைய மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையிலிருந்து விலகும்படி கெடுக்கப்படுமோ என்று பயந்திருக்கிறேன்.
\v 4 எப்படியென்றால், உங்களிடம் வருகிறவன் நாங்கள் பிரசங்கிக்காத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தால், அல்லது நீங்கள் பெற்றுக்கொள்ளாத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு நற்செய்தியையும் பெற்றீர்களானால், நன்றாகச் சகித்திருப்பீர்களே.
\s5
\v 5 மாபெரும் பிரதான அப்போஸ்தலர்களிலும், நான் ஒன்றிலும் குறைவுள்ளவன் இல்லை என்று நினைக்கிறேன்.
\v 6 நான் பேச்சிலே கற்றுக்கொள்ளாதவனாக இருந்தாலும், அறிவிலே கற்றுக்கொள்ளாதவன் இல்லை; எல்லாக் காரியத்திலும், எல்லோருக்கும் முன்பாகவும் உங்களுக்குள்ளே நாங்கள் இதை வெளிப்படுத்தியிருக்கிறோமே.
\s5
\v 7 நீங்கள் உயர்த்தப்படும்படி நான் என்னைத்தானே தாழ்த்தி, தேவனுடைய நற்செய்தியை இலவசமாக உங்களுக்குப் பிரசங்கித்ததினாலே குற்றம் செய்தேனோ?
\v 8 உங்களுக்கு ஊழியம் செய்யும்படிக்கு, மற்றச் சபைகளில் சம்பளத்தைப் பெற்று, அவர்களைக் கொள்ளையிட்டேன்.
\v 9 நான் உங்களோடு இருந்து குறைவுபட்டபோதும், யாரையும் நான் வருத்தப்படுத்தவில்லை; மக்கெதோனியாவில் இருந்து வந்த சகோதரர்கள் என் குறைவை நிறைவாக்கினார்கள்; எந்தவிதத்திலும் நான் உங்களுக்குச் சுமையாக இல்லாதபடிக்கு ஜாக்கிரதையாக இருந்தேன், இனிமேலும் ஜாக்கிரதையாக இருப்பேன்.
\s5
\v 10 அகாயா நாட்டின் பகுதிகளிலே இந்தப் புகழ்ச்சி என்னைவிட்டு நீங்குவதில்லை என்று என்னில் உள்ள கிறிஸ்துவினுடைய சத்தியத்தைக்கொண்டு சொல்லுகிறேன்.
\v 11 இப்படிச் சொல்லவேண்டியதென்ன? நான் உங்களை நேசிக்காதபடியாலோ? தேவன் அறிவார்.
\s5
\v 12 மேலும், எங்களை எதிர்க்க நேரம் தேடுகிறவர்களுக்கு நேரம் கிடைக்காதபடிக்கு, தங்களைக்குறித்து மேன்மைபாராட்டுகிற காரியத்தில் அவர்கள் எங்களைப்போலக் காணப்படும்படி, நான் செய்வதையே இன்னும் செய்வேன்.
\v 13 அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தை அணிந்துகொண்டவர்களாக இருக்கிறார்கள்.
\s5
\v 14 அது ஆச்சரியம் இல்லை, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தை அணிந்துகொள்வானே.
\v 15 எனவே அவனுடைய ஊழியக்காரர்களும் நீதியின் ஊழியக்காரர்களுடைய வேஷத்தை அணிந்துகொண்டால் அது ஆச்சரியம் இல்லையே; அவர்கள் முடிவு அவர்கள் செய்கைகளைப் பொருத்திருக்கும்.
\s1 பவுல் தன்னுடைய உபத்திரவத்தைக்குறித்து மேன்மைபாராட்டல்
\s5
\p
\v 16 பின்னும் நான் சொல்லுகிறேன்; யாரும் என்னைப் புத்தியீனன் என்று நினைக்கவேண்டாம்; அப்படி நினைத்தால், நானும் கொஞ்சம் மேன்மைபாராட்டும்படி, என்னைப் புத்தியீனனைப்போலாவது ஏற்றுக்கொள்ளுங்கள்.
\v 17 இப்படி நான் சொல்லுகிறது கர்த்தருக்கேற்றபடி சொல்லாமல், மேன்மைபாராட்டும் தைரியத்தினாலே புத்தியீனனைப்போலச் சொல்லுகிறேன்.
\v 18 அநேகர் சரீரத்திற்கேற்றபடி மேன்மை பாராட்டிக்கொள்ளும்போது, நானும் மேன்மைபாராட்டுவேன்.
\s5
\v 19 நீங்கள் புத்தி உள்ளவர்களாக இருந்து புத்தியில்லாதவர்களைச் சந்தோஷமாகச் சகித்திருக்கிறீர்களே.
\v 20 ஒருவன் உங்களைச் சிறையாக்கினாலும், ஒருவன் உங்களை அழித்தாலும், ஒருவன் உங்களைக் கைவசப்படுத்தினாலும், ஒருவன் தன்னை உயர்த்தினாலும், ஒருவன் உங்களை முகத்தில் அறைந்தாலும் சகித்திருக்கிறீர்களே.
\v 21 நாங்கள் பலவீனரானதுபோல, எங்களுக்கு வந்த கனவீனத்தைக்குறித்துப்பேசுகிறேன்; ஒருவன் எதிலே துணிவுள்ளவனாக இருக்கிறானோ அதிலே நானும் துணிவுள்ளவனாக இருக்கிறேன்; இப்படிப் புத்தியீனமாகப் பேசுகிறேன்.
\s5
\v 22 அவர்கள் எபிரெயரா? நானும் எபிரெயன்; அவர்கள் இஸ்ரவேலரா? நானும் இஸ்ரவேலன்; அவர்கள் ஆபிரகாமின் வம்சத்தாரா? நானும் ஆபிரகாமின் வம்சத்தான்.
\v 23 அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரர்களா? நான் அதிகம்; புத்தியீனமாகப் பேசுகிறேன்; நான் அதிகமாகப் பிரயாசப்பட்டவன், அதிகமாக அடிபட்டவன், அதிகமாக சிறைக் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகமுறை மரணவேதனையில் சிக்கிக்கொண்டவன்.
\s5
\v 24 யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பது அடிகளாக ஐந்து முறை அடிக்கப்பட்டேன்;
\v 25 மூன்றுமுறை பிரம்புகளால் அடிக்கப்பட்டேன், ஒருமுறை கல்லெறியப்பட்டேன், மூன்றுமுறை கப்பல் சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இரவும் பகலும் கழித்தேன்.
\v 26 அநேகமுறை பயணம் செய்தேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், திருடர்களால் வந்த மோசங்களிலும், என் சொந்த மக்களால் வந்த மோசங்களிலும், யூதரல்லாதவர்கள் மூலம் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்திரத்தில் உண்டான மோசங்களிலும், கடலில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரர்களால் வந்த மோசங்களிலும்;
\s5
\v 27 பிரயாசத்திலும், வருத்தத்திலும் அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்.
\v 28 இவைகள் மட்டுமல்லாமல், எல்லா சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை தினந்தோறும் துக்கப்படுத்துகிறது.
\v 29 ஒருவன் பலவீனனானால் நானும் பலவீனனாகிறது இல்லையோ? ஒருவன் பாவத்தில் விழுந்தால் என் மனம் எரியாமல் இருக்குமோ?
\s5
\v 30 நான் மேன்மைபாராட்டவேண்டுமென்றால், என் பலவீனங்களைக் காண்பிக்கிறவைகளைக்குறித்து மேன்மைபாராட்டுவேன்.
\v 31 என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமானவர் நான் பொய் சொல்லுகிறது இல்லை என்று அறிவார்.
\s5
\v 32 தமஸ்கு பட்டணத்து அரேத்தா ராஜாவினுடைய படைத்தலைவன் என்னைப் பிடிக்கவேண்டும் என்று தமஸ்கருடைய பட்டணத்தைச் சுற்றி காவல்வைத்துக் காத்தான்;
\v 33 அப்பொழுது நான் கூடையிலே வைக்கப்பட்டு, மதிலிலிருந்த ஜன்னல் வழியாக இறக்கிவிடப்பட்டு, அவனுடைய கைக்குத் தப்பினேன்.
\s5
\c 12
\cl அத்தியாயம்– 12
\s1 பவுலுடைய தரிசனமும், முள்ளும்
\p
\v 1 மேன்மைபாராட்டுகிறது எனக்குத் தகுதியானது இல்லையே; ஆனாலும், கர்த்தர் அருளிய தரிசனங்களையும் வெளிப்படுத்தல்களையும் சொல்லுகிறேன்.
\v 2 கிறிஸ்துவிற்குள்ளான ஒரு மனிதனை அறிவேன்; அவன் பதினான்கு வருடத்திற்கு முன்பே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்தில் இருந்தானோ அல்லது சரீரத்திற்கு வெளியே இருந்தானோ, அதை நான் அறியேன்; தேவன் அறிவார்.
\s5
\v 3 அந்த மனிதன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனிதன் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமான வார்த்தைகளைக் கேட்டான் என்று அறிந்திருக்கிறேன்.
\v 4 அவன் சரீரத்தில் இருந்தானோ அல்லது சரீரத்திற்கு வெளியே இருந்தானோ, அதை நான் அறியேன்; தேவன் அறிவார்.
\v 5 இப்படிப்பட்டவனைக்குறித்து மேன்மைபாராட்டுவேன்; ஆனாலும் என்னைக்குறித்து என் பலவீனங்களைத்தவிர, வேறொன்றிலும் மேன்மைபாராட்டமாட்டேன்.
\s5
\v 6 சத்தியமானதை நான் பேசுகிறேன்; நான் மேன்மைபாராட்ட விரும்பினாலும், நான் புத்தியீனன் இல்லை, ஆனாலும் ஒருவனும் என்னிடம் பார்த்ததற்கும், கேட்டதற்கும் மேலாக என்னை நினைக்காமலிருக்க நான் அப்படிச் செய்யாதிருப்பேன்.
\v 7 அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினால் நான் என்னை உயர்த்தாமல் இருக்க, என் சரீரத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; நான் என்னை உயர்த்தாமல் இருக்க, அது என்னைக் குத்தும் சாத்தானுடைய தூதனாக இருக்கிறது.
\s5
\v 8 அது என்னைவிட்டு நீங்கும்படி, நான் மூன்றுமுறை கர்த்தரிடம் வேண்டிக்கொண்டேன்.
\v 9 அதற்கு அவர்: என் கிருபை உனக்குப் போதும்; உன் பலவீனத்திலே என் பலம் பூரணமாக இருக்கும் என்றார். எனவே, கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாக மேன்மைபாராட்டுவேன்.
\v 10 அப்படியே நான் பலவீனமாக இருக்கும்போதே பலமுள்ளவனாக இருக்கிறேன்; எனவே கிறிஸ்துவுக்காக எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.
\s1 கொரிந்தியர்கள் மீதான பவுலின் கரிசனை
\s5
\p
\v 11 மேன்மைபாராட்டி, புத்தியீனன் ஆனேன்; நீங்களே இதற்கு என்னைக் கட்டாயப்படுத்தினீர்கள். நான் ஒன்றுமில்லை என்றாலும், பிரதான அப்போஸ்தலர்களுக்கும் நான் சிறிதளவும் குறைந்தவனாக இல்லாதபடியால், உங்களாலே பாராட்டப்பட வேண்டியதாக இருந்ததே.
\v 12 அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் எல்லாவிதமான பொறுமையோடும், அதிசயங்களோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும், உங்களுக்குள்ளே நடத்தப்பட்டதே.
\v 13 எதிலே மற்றச் சபைகளுக்குக் குறைவாக இருந்தீர்கள்? நான் உங்களை வருத்தப்படுத்தாமல் இருந்ததே உங்களுக்குக் குறைவு; இந்த அநியாயத்திற்காக என்னை மன்னியுங்கள்.
\s5
\v 14 இதோ, உங்களிடம் மூன்றாவது முறையும் வருவதற்கு ஆயத்தமாக இருக்கிறேன்; நான் உங்களை வருத்தப்படுத்துவது இல்லை; நான் உங்களுடையவைகளை அல்ல, உங்களையே தேடுகிறேன்; பெற்றோருக்குக் குழந்தைகள் இல்லை, குழந்தைகளுக்குப் பெற்றோர்களே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டும்.
\v 15 எனவே, நான் உங்களை எவ்வளவு அதிகமாக நேசிக்கிறேனோ அவ்வளவு குறைவாக உங்களால் நான் நேசிக்கப்பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாக நான் உங்களுடைய ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன்.
\s5
\v 16 அப்படியே ஆகட்டும், நான் உங்களுக்குச் சுமையாக இருக்கவில்லை; ஆனாலும், உதவி செய்கிறவனாக இருந்து, தந்திரத்தினாலே உங்களைப் பிடித்தேனாம்.
\v 17 நான் உங்களிடம் அனுப்பினவர்களில் எவன் மூலமாவது உங்களிடம் நன்மையைத் தேடினது உண்டா?
\v 18 தீத்து உங்களிடம் வரும்படி நான் அவனைக் கேட்டுக்கொண்டு, அவனோடுகூட ஒரு சகோதரனை அனுப்பினேன்; தீத்து உங்களிடம் ஏதாவது நன்மையைத் தேடினானா? நாங்கள் ஒரே ஆவியை உடையவர்களாக, ஒரே அடிச்சுவடுகளில் நடந்தோம் அல்லவா?
\s5
\v 19 நாங்கள் யோக்கியமானவர்கள் என்று தெரியும்படி உங்களிடம் பேசுகிறோம் என்று நினைக்கிறீர்களோ? தேவனுக்கு முன்பாகக் கிறிஸ்துவிற்குள் பேசுகிறோம். பிரியமானவர்களே, எல்லாவற்றையும் உங்களுடைய பக்திவளர்ச்சிக்காகச் செய்கிறோம்.
\s5
\v 20 ஆனாலும் நான் வந்து, உங்களை என் மனவிருப்பத்தின்படி இருக்கிறவர்களாகப் பார்க்காமலும், நானும் உங்களுடைய மனவிருப்பத்தின்படி இருக்கிறவனாகப் பார்க்கப்படாமல் இருப்பேனோ என்றும்; விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், வாக்குவாதங்கள், புறங்கூறுதல், கோள் சொல்லுதல், இறுமாப்பு, கலகங்கள் ஆகிய இவைகள் உங்களுக்குள்ளே உண்டாயிருக்குமோ என்றும்;
\v 21 மீண்டும் நான் வருகிறபோது, என் தேவன் உங்களிடம் என்னைத் தாழ்த்தும்படிக்கு முன்பு பாவம் செய்தவர்களாகிய அநேகர் தாங்கள் செய்த அசுத்தத்தையும் வேசித்தனத்தையும் காமவிகாரத்தையும்விட்டு மனம்திரும்பாமல் இருக்கிறதைக்குறித்து, நான் துக்கப்படவேண்டியதாக இருக்குமோ என்றும் பயந்திருக்கிறேன்.
\s5
\c 13
\cl அத்தியாயம்– 13
\s1 பவுலின் இறுதி எச்சரிக்கை
\p
\v 1 மூன்றாவதுமுறை நான் உங்களிடம் வருகிறேன்; எல்லாக் காரியங்களும் இரண்டு மூன்று சாட்சிகளினாலே உறுதிப்படுத்தப்படும்.
\v 2 நான் இரண்டாம்முறை உங்களோடு இருந்தபோது சொன்னதுபோல, இப்பொழுது தூரத்தில் இருந்தும் உங்களிடம் இருக்கிறவனாக, நான் மீண்டும் வந்தால் தப்பவிடமாட்டேன் என்று முன்பு பாவம் செய்தவர்களுக்கும் மற்ற எல்லோருக்கும் முன்னறிவித்து எழுதுகிறேன்.
\s5
\v 3 கிறிஸ்து என் மூலம் பேசுகிறார் என்பதற்கு ஆதாரம் தேடுகிறீர்களே; அவர் உங்களிடம் பலவீனராக அல்ல, உங்களிடம் வல்லவராக இருக்கிறார்.
\v 4 ஏனென்றால், அவர் பலவீனத்தால் சிலுவையில் அறையப்பட்டிருந்தும், தேவனுடைய வல்லமையினால் பிழைத்திருக்கிறார்; அப்படி நாங்களும் அவருக்குள் பலவீனராக இருந்தும், உங்களிடம் விளங்கிய தேவனுடைய வல்லமையினால் அவரோடு பிழைத்திருப்போம்.
\s5
\v 5 நீங்கள் விசுவாசம் உள்ளவர்களோ என்று உங்களை நீங்களே சோதித்துப்பாருங்கள்; உங்களை நீங்களே பரீட்சை செய்துபாருங்கள். இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் பரீட்சைக்கு நிற்காதவர்களாக இருந்தால் தெரியாது.
\v 6 நாங்களோ பரீட்சைக்கு நிற்காதவர்கள் அல்ல என்பதைத் தெரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
\s5
\v 7 மேலும் நீங்கள் ஒரு பொல்லாங்கும் செய்யாமல் இருக்கும்படியாக, தேவனை நோக்கி வேண்டுதல்செய்கிறேன். நாங்கள் பரீட்சைக்கு நின்றவர்கள் என்று தெரிவதற்காக இல்லை, நாங்கள் பரீட்சைக்கு நிற்காதவர்கள்போல இருந்தாலும், நீங்கள் நலமானதைச் செய்யும்படியே வேண்டுதல்செய்கிறேன்.
\v 8 சத்தியத்திற்கு எதிராக நாங்கள் ஒன்றும் செய்யமுடியாமல், சத்தியத்திற்கு சாதகமாகவே செய்யமுடியும்.
\s5
\v 9 நாங்கள் பலவீனமுள்ளவர்களும் நீங்கள் பலமுள்ளவர்களாகவும் இருக்கும்போது சந்தோஷப்படுகிறோம்; நீங்கள் பூரணர்களாகும்படி வேண்டுதல்செய்கிறோம்.
\v 10 ஆகவே, இடித்துப்போடுவதற்கு அல்ல, உறுதியாகக் கட்டவே கர்த்தர் எனக்குக் கொடுத்த அதிகாரத்தின்படி, நான் உங்களிடம் வரும்போது, உங்களைக் கண்டிக்காமல் இருப்பதற்காக, நான் தூரத்தில் இருக்கும்போதே இவைகளை எழுதுகிறேன்.
\s1 இறுதி வாழ்த்துக்கள்.
\s5
\p
\v 11 கடைசியாக, சகோதரர்களே, சந்தோஷமாக இருங்கள், பூரணராக நாடுங்கள், ஆறுதல் அடையுங்கள்; ஒரே சிந்தையாக இருங்கள், சமாதானமாக இருங்கள், அப்பொழுது அன்புக்கும் சமாதானத்திற்கும் காரணராகிய தேவன் உங்களோடு இருப்பார்.
\v 12 ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்.
\s5
\v 13 பரிசுத்தவான்கள் எல்லோரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
\v 14 கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.