ta_ulb/06-JOS.usfm

1121 lines
293 KiB
Plaintext

\id JOS
\ide UTF-8
\h யோசுவா
\toc1 யோசுவா
\toc2 யோசுவா
\toc3 jos
\mt1 யோசுவா
\s5
\c 1
\cl அத்தியாயம்– 1
\s1 யோசுவாவிற்குக் கர்த்தருடைய கட்டளை
\p
\v 1 கர்த்தருடைய ஊழியக்காரனாகிய மோசே இறந்தபின்பு, கர்த்தர் மோசேயின் ஊழியக்காரனான நூனின் மகனாகிய யோசுவாவைப் பார்த்து:
\v 2 என் ஊழியக்காரனாகிய மோசே இறந்துபோனான்; இப்பொழுது நீயும் இந்த மக்கள் எல்லோரும் எழுந்து, இந்த யோர்தானைக் கடந்து, இஸ்ரவேல் மக்களுக்கு நான் கொடுக்கும் தேசத்திற்குப் போங்கள்.
\v 3 நான் மோசேக்குச் சொன்னபடி உங்களுடைய கால்கள் மிதிக்கும் எல்லா இடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன்.
\s5
\v 4 வனாந்திரமும் இந்த லீபனோனும் தொடங்கி ஐபிராத்து நதியான பெரிய நதிவரைக்கும் உள்ள ஏத்தியரின் தேசம் அனைத்தும், சூரியன் மறைகிற திசையான பெரிய சமுத்திரம்வரைக்கும் உங்களுடைய எல்லையாக இருக்கும்.
\v 5 நீ உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடு இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.
\s5
\v 6 பெலன்கொண்டு திடமனதாக இரு; இந்த மக்களின் முற்பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று வாக்குக்கொடுத்த தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய்.
\v 7 என் ஊழியக்காரனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்ய கவனமாக இருப்பதற்கு மிகவும் பெலன்கொண்டு திடமனதாக இரு; நீ போகும் இடங்களெல்லாம் புத்திமானாக நடந்துகொள்ளும்படி, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாமல் இருப்பாயாக.
\s5
\v 8 இந்த நியாயப்பிரமாண புத்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்ய கவனமாக இருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாகவும் நடந்துகொள்ளுவாய்.
\v 9 நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பெலன்கொண்டு திடமனதாக இரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடங்களெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடு இருக்கிறார் என்றார்.
\s5
\v 10 அப்பொழுது யோசுவா மக்களின் தலைவர்களை நோக்கி:
\v 11 நீங்கள் முகாமிற்குள்ளே நடந்துபோய், மக்களைப் பார்த்து: உங்களுக்கு உணவுப் பொருட்களை ஆயத்தம் செய்யுங்கள்; உங்களுடைய தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சுதந்தரித்துக்கொள்வதற்காகக் கொடுக்கும் தேசத்தை நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, இன்னும் மூன்றுநாட்களுக்குள்ளே இந்த யோர்தானைக் கடந்துபோவீர்கள் என்று சொல்லச்சொன்னான்.
\s5
\v 12 பின்பு யோசுவா; ரூபனியர்களையும் காத்தியர்களையும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களையும் நோக்கி:
\v 13 கர்த்தருடைய ஊழியக்காரனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள்; உங்களுடைய தேவனாகிய கர்த்தர் உங்களை இளைப்பாறச்செய்து, இந்த தேசத்தை உங்களுக்குக் கொடுத்தாரே.
\s5
\v 14 உங்களுடைய மனைவிகளும் பிள்ளைகளும் மிருகஜீவன்களும், மோசே உங்களுக்கு யோர்தானுக்கு இந்தப்புறத்திலே கொடுத்த தேசத்தில் இருக்கட்டும்; உங்களிலுள்ள யுத்தவீரர்கள் எல்லோரும் உங்களுடைய சகோதரர்களுக்கு முன்பாக அணியணியாகக் கடந்துபோய்,
\v 15 கர்த்தர் உங்களைப்போல உங்களுடைய சகோதரர்களையும் இளைப்பாறச்செய்து, அவர்களும் உங்களுடைய தேவனாகிய கர்த்தர் தங்களுக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்வரை, அவர்களுக்கு உதவிசெய்யக்கடவீர்கள்; பின்பு நீங்கள் கர்த்தருடைய ஊழியக்காரனாகிய மோசே உங்களுக்கு யோர்தானுக்கு இந்தப்புறத்தில் சூரியன் உதிக்கும் திசைக்கு நேராகக் கொடுத்த உங்களுடைய சொந்தமான தேசத்திற்குத் திரும்பி, அதைச் சுதந்தரித்துக் கொண்டிருப்பீர்களாக என்றான்.
\s5
\v 16 அப்பொழுது அவர்கள் யோசுவாவுக்கு மறுமொழியாக: நீர் எங்களுக்குக் கட்டளையிடுகிறதையெல்லாம் செய்வோம்; நீர் எங்களை அனுப்பும் இடங்களுக்கெல்லாம் போவோம்.
\v 17 நாங்கள் மோசேக்குக் கீழ்ப்படிந்ததுபோல உமக்கும் கீழ்ப்படிவோம்; உம்முடைய தேவனாகிய கர்த்தர் மட்டும் மோசேயோடு இருந்ததுபோல, உம்மோடும் இருப்பாராக.
\v 18 நீர் எங்களுக்குக் கட்டளையிடும் எல்லா காரியத்திலும் உம்முடைய சொல்லைக் கேட்காமல், உம்முடைய கட்டளைக்கு எதிராக முரட்டாட்டம் செய்கிற எவனும் கொலை செய்யப்படக்கடவன்; பெலன்கொண்டு திடமனதாக மட்டும் இரும் என்றார்கள்.
\s5
\c 2
\cl அத்தியாயம்– 2
\s1 ராகாபும் வேவுபார்க்கிறவர்களும்
\p
\v 1 நூனின் மகனாகிய யோசுவா சித்தீமிலிருந்து வேவுபார்க்கிறவர்களாகிய இரண்டு மனிதர்களை இரகசியமாக வேவுபார்க்கும்படி அனுப்பி: நீங்கள் போய் தேசத்தையும் எரிகோவையும் பார்த்துவாருங்கள் என்றான். அவர்கள் போய், ராகாப் என்னும் பெயருடைய விலைமாதுவின் வீட்டிற்குச் சென்று, அங்கே தங்கினார்கள்.
\v 2 தேசத்தை வேவுபார்ப்பதற்காக, இஸ்ரவேல் மக்களில் சில மனிதர்கள் இந்த ராத்திரியிலே இங்கே வந்தார்கள் என்று எரிகோவின் ராஜாவுக்கு சொல்லப்பட்டது.
\v 3 அப்பொழுது எரிகோவின் ராஜா ராகாபிடத்திற்கு ஆள் அனுப்பி: உன்னிடத்தில் வந்து, உன் வீட்டிற்குள் பிரவேசித்த மனிதர்களை வெளியே கொண்டுவா; அவர்கள் தேசத்தையெல்லாம் வேவுபார்ப்பதற்காக வந்தார்கள் என்று சொல்லச்சொன்னான்.
\s5
\v 4 அந்தப் பெண் அந்த இரண்டு மனிதர்களையும் கொண்டுபோய் அவர்களை ஒளித்துவைத்து: உண்மைதான், என்னிடத்தில் மனிதர்கள் வந்திருந்தார்கள்; ஆனாலும் அவர்கள் எந்த ஊரைச்சார்ந்தவர்கள் என்று எனக்குத் தெரியாது.
\v 5 பட்டணத்தின் வாசற்கதவை அடைக்கும் நேரத்தில் இருட்டும்வேளையிலே, அந்த மனிதர்கள் புறப்பட்டுப் போய்விட்டார்கள்; அவர்கள் எங்கு போனார்கள் என்று எனக்குத் தெரியாது; சீக்கிரமாகப் போய் அவர்களைத் தேடுங்கள்; நீங்கள் அவர்களைப் பிடித்துக்கொள்ளலாம் என்றாள்.
\s5
\v 6 அவள் அவர்களை வீட்டின்மேல் ஏறச்செய்து, வீட்டின்மேல் பரப்பப்பட்ட சணல் நார்களுக்குள்ளே மறைத்து வைத்திருந்தாள்.
\v 7 ராஜாவின் ஆட்கள் யோர்தானுக்குப் போகிற வழியில் துறைமுகம்வரை அவர்களைத் தேடிப்போனார்கள்; அவர்களைத் தேடுகிறவர்கள் புறப்பட்டவுடனே வாசற்கதவு அடைக்கப்பட்டது.
\s5
\v 8 அந்த மனிதர்கள் படுத்துக்கொள்வதற்குமுன்னே அவள் வீட்டின்மேல் அவர்களிடத்திற்கு ஏறிச்சென்று,
\v 9 கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக்கொடுத்தாரென்றும், உங்களைப்பற்றி எங்களுக்குத் திகில் பிடித்திருக்கிறதென்றும், தேசத்து மக்கள் எல்லோரும் பயந்துபோனார்களென்றும் அறிவேன்.
\s5
\v 10 நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபோது, கர்த்தர் உங்களுக்கு முன்பாக சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப்போகச்செய்ததையும், நீங்கள் யோர்தானுக்கு மறுபுறத்தில் அழித்துப்போட்ட எமோரியர்களின் இரண்டு ராஜாக்களாகிய சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் கேள்விப்பட்டோம்.
\v 11 கேள்விப்பட்டபோது எங்களுடைய இருதயம் கரைந்துபோனது, உங்களாலே எல்லோருடைய தைரியமும் அற்றுப்போனது; உங்களுடைய தேவனாகிய கர்த்தரே மேலே வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர்.
\s5
\v 12 இப்போதும், நான் உங்களுக்கு தயவுசெய்தபடியினால், நீங்களும் என் தகப்பன் குடும்பத்திற்கு தயவுசெய்வோம் என்று கர்த்தருடைய நாமத்தில் எனக்கு சத்தியம் செய்து,
\v 13 நீங்கள் என் தகப்பனையும் என் தாயையும் என் சகோதரர்களையும் என் சகோதரிகளையும் அவர்களுக்கு உண்டான எல்லாவற்றையும் உயிரோடு வைத்து, எங்களுடைய ஜீவனை சாவுக்குத் தப்புவிக்கும்படி, எனக்கு நிச்சயமான அடையாளத்தைக் கொடுக்கவேண்டும் என்றாள்.
\s5
\v 14 அப்பொழுது அந்த மனிதர்கள் அவளை நோக்கி: எங்களுடைய ஜீவன் உங்களுடைய ஜீவனுக்கு சமம்; நீங்கள் எங்களுடைய காரியத்தை வெளிப்படுத்தாமலிருந்தால், கர்த்தர் எங்களுக்கு தேசத்தைக் கொடுக்கும்போது, நாங்கள் உங்களிடம் தயவாகவும் உண்மையாகவும் இருப்போம் என்றார்கள்.
\s5
\v 15 அப்பொழுது அவர்களைக் கயிற்றினாலே ஜன்னல்வழியாக இறக்கிவிட்டாள்; அவள் வீடு பட்டணத்தின் மதில்மேல் இருந்தது; பட்டணத்திலே அவள் குடியிருந்தாள்.
\v 16 அப்பொழுது அவள் அவர்களை நோக்கி: தேடுகிறவர்கள் உங்களைப் பார்க்காதபடி, நீங்கள் மலையிலே போய், அவர்கள் திரும்பிவரும்வரைக்கும் அங்கே மூன்றுநாட்கள் ஒளிந்திருந்து, பின்பு உங்களுடைய வழியிலே போங்கள் என்றாள்.
\v 17 அப்பொழுது அந்த மனிதர்கள் அவளை நோக்கி: இதோ, நாங்கள் தேசத்திற்குள் பிரவேசிக்கும்போது, நீ இந்த சிவப்பு நூல்கயிற்றை எங்களை இறக்கிவிட்ட ஜன்னலிலே கட்டி, உன் தகப்பனையும் உன் தாயையும் உன் சகோதரர்களையும் உன் தகப்பன் குடும்பத்தார் அனைவரையும் உன் வீட்டிலே சேர்த்துக்கொள்.
\s5
\v 18 இல்லாவிட்டால் நீ எங்கள் கையில் வாங்கின சத்தியத்திற்கு நீங்கலாயிருப்போம்.
\v 19 எவனாகிலும் உன் வீட்டு வாசல்களிலிருந்து வெளியே புறப்பட்டால், அவனுடைய இரத்தப்பழி அவனுடைய தலையின்மேல் இருக்கும்; எங்கள்மேல் குற்றம் இல்லை; உன்னோடு வீட்டில் இருக்கிற எவன்மீதாவது கைபோடப்பட்டதானால், அவனுடைய இரத்தப்பழி எங்கள் தலையின்மேல் இருக்கும்.
\s5
\v 20 நீ எங்களுடைய காரியத்தை வெளிப்படுத்துவாயானால், நீ எங்கள் கையில் வாங்கின சத்தியத்திற்கு நீங்கலாயிருப்போம் என்றார்கள்.
\v 21 அதற்கு அவள்: உங்களுடைய வார்த்தையின்படியே ஆகக்கடவது என்று சொல்லி, அவர்களை அனுப்பிவிட்டாள்; அவர்கள் போய்விட்டார்கள்; பின்பு அவள் அந்த சிவப்புக்கயிற்றை ஜன்னலிலே கட்டிவைத்தாள்.
\s5
\v 22 அவர்கள் போய், மலையிலே சேர்ந்து, தேடுகிறவர்கள் திரும்பிவரும்வரைக்கும், மூன்றுநாட்கள் அங்கே தங்கியிருந்தார்கள்; தேடுகிறவர்கள் வழிகளிலெல்லாம் அவர்களைத் தேடியும் காணமுடியாமல்போனார்கள்.
\s5
\v 23 அந்த இரண்டு மனிதர்களும் திரும்பி, மலையிலிருந்து இறங்கி, ஆற்றைக்கடந்து, நூனின் மகனாகிய யோசுவாவிடம் வந்து, தங்களுக்கு சம்பவித்த எல்லாவற்றையும் அவனுக்குத் தெரிவித்து;
\v 24 கர்த்தர் தேசத்தையெல்லாம் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; தேசத்தின் மக்களெல்லோரும் நமக்கு முன்பாகச் சோர்ந்துபோனார்கள் என்று அவனிடம் சொன்னார்கள்.
\s5
\c 3
\cl அத்தியாயம்– 3
\s1 யோர்தானைக் கடந்துபோகுதல்
\p
\v 1 அதிகாலையிலே யோசுவா எழுந்த பின்பு, அவனும் இஸ்ரவேல் மக்கள் அனைவரும் சித்தீமிலிருந்து பயணம்செய்து, யோர்தான்வரைக்கும் வந்து, அதைக் கடந்துபோகுமுன்னே அங்கே இரவு தங்கினார்கள்.
\s5
\v 2 மூன்றுநாட்களானபின்பு, அதிகாரிகள் முகாமின் நடுவே போய்,
\v 3 மக்களை நோக்கி: நீங்கள் உங்களுடைய தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியையும் அதைச் சுமக்கிற லேவியர்களாகிய ஆசாரியர்களையும் கண்டவுடனே, நீங்களும் உங்களுடைய இடத்தைவிட்டுப் பயணம்செய்து, அதைப் பின்பற்றிச்செல்லுங்கள்.
\v 4 உங்களுக்கும் அதற்கும் இரண்டாயிரம் முழந்தூரம் இடைவெளி இருக்கவேண்டும்; நீங்கள் நடக்கவேண்டிய வழியை அறியும்படி, அதற்கு அருகில் வராமலிருப்பீர்களாக; இதற்கு முன்னே நீங்கள் ஒருபோதும் இந்த வழியாக நடந்துபோகவில்லை என்று சொல்லி கட்டளையிட்டார்கள்.
\s5
\v 5 யோசுவா மக்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம் செய்துகொள்ளுங்கள்; நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான்.
\v 6 பின்பு யோசுவா ஆசாரியர்களை நோக்கி: நீங்கள் உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு, மக்களுக்கு முன்னே நடந்துபோங்கள் என்றான்; அப்படியே உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு மக்களுக்கு முன்னே போனார்கள்.
\s5
\v 7 கர்த்தர் யோசுவாவை நோக்கி: நான் மோசேயோடு இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலர்கள் எல்லோரும் அறிவதற்கு, இன்று அவர்களுடைய கண்களுக்குமுன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன்.
\v 8 உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களைப் பார்த்து: நீங்கள் யோர்தான் தண்ணீர் ஓரத்தில் சேரும்போது, யோர்தானில் நில்லுங்கள் என்று நீ கட்டளையிடுவாயாக என்றார்.
\s5
\v 9 யோசுவா இஸ்ரவேல் மக்களை நோக்கி: நீங்கள் இங்கே வந்து, உங்களுடைய தேவனாகிய கர்த்தருடைய வார்த்தைகளைக் கேளுங்கள் என்றான்.
\v 10 பின்பு யோசுவா: ஜீவனுள்ள தேவன் உங்கள் நடுவே இருக்கிறார் என்பதையும், அவர் கானானியர்களையும், ஏத்தியர்களையும், ஏவியர்களையும், பெரிசியர்களையும், கிர்காசியர்களையும், எமோரியர்களையும், எபூசியர்களையும் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுவார் என்பதையும், நீங்கள் அறிந்துகொள்வதற்கு அடையாளமாக:
\v 11 இதோ, சர்வ பூமிக்கும் ஆண்டவராக இருக்கிறவருடைய உடன்படிக்கைப் பெட்டி உங்களுக்கு முன்னே யோர்தானிலே போகிறது.
\s5
\v 12 இப்பொழுதும் இஸ்ரவேல் கோத்திரங்களிலே பன்னிரண்டுபேரை, ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராகப் பிரித்தெடுங்கள்.
\v 13 சம்பவிப்பது என்னவென்றால், சர்வபூமிக்கும் ஆண்டவராகிய கர்த்தரின் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் உள்ளங்கால்கள் யோர்தானின் தண்ணீரிலே பட்டவுடனே, மேலேயிருந்து ஓடிவருகிற யோர்தானின் தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக நிற்கும் என்றான்.
\s5
\v 14 மக்கள் யோர்தானைக் கடந்துபோகத் தங்களுடைய கூடாரங்களிலிருந்து புறப்பட்டார்கள்; ஆசாரியர்கள் உடன்படிக்கைப் பெட்டியை மக்களுக்கு முன்னே சுமந்துகொண்டுபோய், யோர்தான்வரைக்கும் வந்தார்கள்.
\v 15 யோர்தான் அறுப்புக்காலம் முழுவதும் கரைபுரண்டோடும். பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே,
\v 16 மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர்வரைக்கும் ஒரு குவியலாகக் குவிந்தது; உப்புக்கடல் என்னும் சமவெளியின் கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடினது; அப்பொழுது மக்கள் எரிகோவிற்கு எதிரே கடந்துபோனார்கள்.
\s5
\v 17 எல்லா மக்களும் யோர்தானைக் கடந்துபோகும்வரைக்கும், கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தானின் நடுவிலே தண்ணீரில்லாத தரையில் காலூன்றி நிற்கும்போது, இஸ்ரவேலர்கள் எல்லோரும் தண்ணீரில்லாத உலர்ந்த தரைவழியாகக் கடந்துபோனார்கள்.
\s5
\c 4
\cl அத்தியாயம்– 4
\p
\v 1 மக்கள் எல்லோரும் யோர்தானைக் கடந்தபின்பு, கர்த்தர் யோசுவாவை நோக்கி:
\v 2 நீங்கள், ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராக மக்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு,
\v 3 இங்கே யோர்தானின் நடுவிலே ஆசாரியர்களின் கால்கள் நிலையாக நின்ற இடத்திலே பன்னிரண்டு கற்களை எடுத்து, அவைகளை உங்களோடு அக்கரைக்குக் கொண்டுபோய், நீங்கள் இன்று இரவில் தங்கும் இடத்திலே அவைகளை வையுங்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிடுங்கள் என்றார்.
\s5
\v 4 அப்பொழுது யோசுவா இஸ்ரவேல் மக்களில் ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராக ஆயத்தப்படுத்தப்பட்டிருந்த பன்னிரண்டுபேரை அழைத்து,
\v 5 அவர்களை நோக்கி: நீங்கள் யோர்தானின் நடுவில் உங்களுடைய தேவனாகிய கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகக் கடந்துபோய், உங்களுக்குள்ளே ஒரு அடையாளமாக இருக்கும்படிக்கு, இஸ்ரவேல் மக்களுடைய கோத்திரங்களின் எண்ணிக்கைக்குச் சமமாக, உங்களில் ஒவ்வொருவனும் ஒவ்வொரு கல்லைத் தன் தோளின்மேல் எடுத்துக்கொண்டுபோங்கள்.
\s5
\v 6 நாளை இந்தக் கற்கள் என்னவென்று உங்களுடைய பிள்ளைகள் உங்களைக் கேட்கும்போது,
\v 7 நீங்கள்: கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோனதினால் அவைகள் வைக்கப்பட்டிருக்கிறது; யோர்தானைக் கடந்துபோகிறபோது, யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோனது; ஆகையால் இந்தக் கற்கள் இஸ்ரவேல் மக்களுக்கு என்றென்றைக்கும் நினைவூட்டும் அடையாளம் என்று சொல்லுங்கள் என்றான்.
\s5
\v 8 யோசுவா கட்டளையிட்டபடி இஸ்ரவேல் மக்கள் செய்து, கர்த்தர் யோசுவாவிடம் சொன்னபடியே, இஸ்ரவேல் மக்களுடைய கோத்திரங்களின் எண்ணிக்கைக்குச் சமமாகப் பன்னிரண்டு கற்களை யோர்தானின் நடுவில் எடுத்து, அவைகளைத் தங்களோடு அக்கரைக்குக் கொண்டுபோய், அவர்கள் தங்கின இடத்திலே வைத்தார்கள்.
\v 9 யோர்தானின் நடுவிலும் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்த ஆசாரியர்களின் கால்கள் நின்ற இடத்திலே யோசுவா பன்னிரண்டு கற்களை நாட்டினான்; அவைகள் இந்த நாள்வரைக்கும் அங்கே இருக்கிறது.
\s5
\v 10 மோசே யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்த எல்லாவற்றின்படியும் மக்களுக்குச் சொல்லும்படி, கர்த்தர் யோசுவாவுக்குக் கட்டளையிட்டவைகளையெல்லாம் செய்து முடிக்கும்வரைக்கும், பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தானின் நடுவே நின்றார்கள்; மக்கள் வேகமாகக் கடந்துபோனார்கள்.
\v 11 மக்களெல்லோரும் கடந்துபோனபின்பு, கர்த்தருடைய பெட்டியும் கடந்துபோனது; ஆசாரியர்கள் மக்களுக்கு முன்பாகப் போனார்கள்.
\s5
\v 12 ரூபன் கோத்திரத்தார்களும் காத் கோத்திரத்தார்களும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களும் மோசே தங்களுக்குச் சொன்னபடியே அணியணியாக இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகக் கடந்துபோனார்கள்.
\v 13 ஏறக்குறைய நாற்பதாயிரம்பேர்கள் யுத்தத்திற்காக பயிற்சிபெற்றவர்களாக யுத்தம்செய்ய, கர்த்தருக்கு முன்பாக எரிகோவின் சமவெளிகளுக்குக் கடந்துபோனார்கள்.
\v 14 அந்தநாளிலே கர்த்தர் யோசுவாவை எல்லா இஸ்ரவேலர்களின் கண்களுக்கு முன்பாகவும் மேன்மைப்படுத்தினார்; அவர்கள் மோசேக்குப் பயந்திருந்ததுபோல, யோசுவாவிற்கும், அவன் உயிரோடிருந்த நாட்களெல்லாம் பயந்திருந்தார்கள்.
\s5
\v 15 கர்த்தர் யோசுவாவை நோக்கி:
\v 16 சாட்சியின் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தானிலிருந்து கரையேறும்படி அவர்களுக்குக் கட்டளையிடு என்று சொன்னார்.
\s5
\v 17 யோசுவா: யோர்தானிலிருந்து கரையேறி வாருங்கள் என்று ஆசாரியர்களுக்குக் கட்டளையிட்டான்.
\v 18 அப்பொழுது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தான் நடுவிலிருந்து ஏறி, அவர்கள் உள்ளங்கால்கள் கரையில் ஊன்றினபோது, யோர்தானின் தண்ணீர்கள் தங்களிடத்திற்குத் திரும்பி, முன்புபோல அதின் கரையெங்கும் புரண்டோடியது.
\s5
\v 19 இந்தவிதமாக முதலாம் மாதம் பத்தாம் தேதியிலே மக்கள் யோர்தானிலிருந்து கரையேறி, எரிகோவுக்குக் கிழக்கு எல்லையான கில்காலிலே முகாமிட்டார்கள்.
\v 20 அவர்கள் யோர்தானிலிருந்து எடுத்துக்கொண்டுவந்த அந்தப் பன்னிரண்டு கற்களையும் யோசுவா கில்காலிலே நாட்டி,
\v 21 இஸ்ரவேல் மக்களை நோக்கி: நாளை உங்களுடைய பிள்ளைகள் இந்தக் கற்கள் என்னவென்று தங்களுடைய தகப்பன்மார்களைக் கேட்கும்போது,
\s5
\v 22 நீங்கள் உங்களுடைய பிள்ளைகளுக்கு அறிவிக்கவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேலர்கள் வெட்டாந்தரை வழியாக இந்த யோர்தானைக் கடந்துவந்தார்கள்.
\v 23 பூமியின் எல்லா மக்களும் கர்த்தருடைய கரம் பலத்ததென்று அறியும்படிக்கும், நீங்கள் எல்லா நாட்களும் உங்களுடைய தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படும்படிக்கும்,
\v 24 உங்களுடைய தேவனாகிய கர்த்தர் சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை நாங்கள் கடந்துபோகும்வரைக்கும் எங்களுக்கு முன்பாக வற்றிப்போகச்செய்ததுபோல, உங்களுடைய தேவனாகிய கர்த்தர் யோர்தானின் தண்ணீருக்கும் செய்து, அதை உங்களுக்கு முன்பாக நீங்கள் கடந்துபோகும்வரைக்கும் வற்றிப்போகச்செய்தார் என்று அறிவிக்கக்கடவீர்கள் என்றான்.
\s5
\c 5
\cl அத்தியாயம்– 5
\s1 கில்காலில் விருத்தசேதனம்
\p
\v 1 இஸ்ரவேல் மக்கள் கடந்துபோகும்வரைக்கும், கர்த்தர் யோர்தானின் தண்ணீரை அவர்களுக்கு முன்பாக வற்றிப்போகச்செய்ததை, யோர்தானுக்கு மேற்குப்பகுதியில் குடியிருந்த எமோரியர்களின் எல்லா ராஜாக்களும், சமுத்திரத்தின் அருகே குடியிருந்த கானானியர்களின் எல்லா ராஜாக்களும் கேட்டதுமுதல், அவர்களுடைய இருதயம் கரைந்து, இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக சோர்ந்துபோனார்கள்.
\s5
\v 2 அந்தக் காலத்திலே கர்த்தர் யோசுவாவை நோக்கி: நீ கூர்மையான கத்திகளை உண்டாக்கி, மீண்டும் இரண்டாம்முறை இஸ்ரவேலின் எல்லா ஆண்களுக்கும் விருத்தசேதனம் செய் என்றார்.
\v 3 அப்பொழுது யோசுவா கூரான கத்திகளை உண்டாக்கி, இஸ்ரவேலின் எல்லா ஆண்களுக்கும் ஆர்லோத் மேட்டிலே விருத்தசேதனம்செய்தான்.
\s5
\v 4 யோசுவா இப்படி விருத்தசேதனம்செய்த நோக்கம் என்னவென்றால்: எகிப்திலிருந்து புறப்பட்ட எல்லா ஆண்மக்களாகிய யுத்த மனிதர்கள் எல்லோரும் எகிப்திலிருந்து புறப்பட்டப்பின்பு, வழியில் வனாந்திரத்திலே இறந்துபோனார்கள்.
\v 5 எகிப்திலிருந்து புறப்பட்ட எல்லா மக்களும் விருத்தசேதனம் செய்யப்பட்டிருந்தார்கள்; அவர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டப்பின்பு, வழியில் வனாந்திரத்திலே பிறந்த எல்லா மக்களும் விருத்தசேதனம் செய்யப்படாமலிருந்தார்கள்.
\s5
\v 6 கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமற்போன எகிப்திலிருந்து புறப்பட்ட யுத்த மனிதர்களான எல்லோரும் இறக்கும்வரைக்கும், இஸ்ரவேல் மக்கள் நாற்பதுவருடங்கள் வனாந்திரத்தில் நடந்து திரிந்தார்கள்; கர்த்தர் எங்களுக்குக் கொடுக்கும்படி அவர்களுடைய பிதாக்களுக்கு வாக்குத்தத்தம் செய்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை அவர்கள் காண்பதில்லை என்று கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தார்.
\v 7 அவர்களுக்குப் பதிலாக அவர் எழும்பப்பண்ணின அவர்களுடைய ஆண் பிள்ளைகளை யோசுவா விருத்தசேதனம்செய்தான்; வழியிலே அவர்களை விருத்தசேதனம்செய்யாததினால் அவர்கள் விருத்தசேதனம் செய்யப்படாமலிருந்தார்கள்.
\s5
\v 8 மக்கள் எல்லோரும் விருத்தசேதனம்செய்யப்பட்டபின்பு, அவர்கள் குணமாகும்வரைக்கும் தங்கள்தங்கள் இடத்திலே முகாமில் தங்கியிருந்தார்கள்.
\v 9 கர்த்தர் யோசுவாவை நோக்கி: இன்று எகிப்தின் நிந்தையை உங்கள்மேல் இல்லாதபடிக்குப் புரட்டிப்போட்டேன் என்றார்; அதனால் அந்த இடம் இந்த நாள்வரைக்கும் கில்கால் எனப்படுகிறது.
\s5
\v 10 இஸ்ரவேல் மக்கள் கில்காலில் முகாமிட்டிருந்து, மாதத்தின் பதினான்காம் தேதி மாலைநேரத்திலே எரிகோவின் சமவெளிகளிலே பஸ்காவை அனுசரித்தார்கள்.
\v 11 பஸ்காவின் மறுநாளாகிய அன்றையதினம் அவர்கள் தேசத்தினுடைய தானியத்தால் செய்யப்பட்ட புளிப்பில்லாத அப்பங்களையும் சுட்ட கதிர்களையும் சாப்பிட்டார்கள்.
\s5
\v 12 அவர்கள் தேசத்தின் தானியத்தைச் சாப்பிட்ட மறுநாளிலே மன்னா பெய்யாமல் நின்றுபோனது; அதுமுதல் இஸ்ரவேல் மக்களுக்கு மன்னா இல்லாமற்போய், அவர்கள் கானான்தேசத்தின் பலனை அந்த வருடத்திலே சாப்பிட்டார்கள்.
\s1 எரிகோவின் வீழ்ச்சி
\p
\s5
\v 13 பின்னும் யோசுவா எரிகோவின் வெளியிலிருந்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, ஒருவர் அவனுக்கு எதிரே நின்றார்; உருவிய பட்டயம் அவருடைய கையில் இருந்தது; யோசுவா அவரிடத்தில் போய்: நீர் எங்களைச் சேர்ந்தவரோ அல்லது எங்களுடைய சத்துருக்களைச் சேர்ந்தவரோ என்று கேட்டான்.
\s5
\v 14 அதற்கு அவர்: அல்ல, நான் கர்த்தருடைய சேனையின் அதிபதியாக இப்பொழுது வந்தேன் என்றார்; அப்பொழுது யோசுவா தரையிலே முகங்குப்புற விழுந்து பணிந்துகொண்டு, அவரை நோக்கி: என் ஆண்டவர் தம்முடைய ஊழியனான எனக்குச் சொல்லுகிறது என்னவென்று கேட்டான்.
\v 15 அப்பொழுது கர்த்தருடைய சேனையின் அதிபதி யோசுவாவை நோக்கி: உன் கால்களில் இருக்கிற காலணிகளைக் கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்றார்; யோசுவா அப்படியே செய்தான்.
\s5
\c 6
\cl அத்தியாயம்– 6
\s1 எரிகோவைக் கைப்பற்றுதல்
\p
\v 1 எரிகோ இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது; ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை.
\v 2 கர்த்தர் யோசுவாவை நோக்கி: இதோ, எரிகோவையும் அதின் ராஜாவையும், யுத்தவீரர்களையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்.
\s5
\v 3 யுத்தமனிதர்களாகிய நீங்கள் அனைவரும் பட்டணத்தை ஒருமுறை சுற்றி வாருங்கள்; இப்படி ஆறுநாட்கள் சுற்றிவரவேண்டும்.
\v 4 ஏழு ஆசாரியர்கள் பெட்டிக்கு முன்பாக ஏழு கொம்பு எக்காளங்களைப் பிடித்துக்கொண்டு போகவேண்டும்; ஏழாம்நாளில் பட்டணத்தை ஏழுமுறை சுற்றிவாருங்கள்; ஆசாரியர்கள் எக்காளங்களை ஊதவேண்டும்.
\s5
\v 5 அவர்கள் அந்தக் கொம்புகளினால் நீண்ட சப்தம் எழுப்பும்போதும், நீங்கள் எக்காள சத்தத்தைக் கேட்கும்போதும், மக்கள் எல்லோரும் மகா சத்தத்தோடு ஆர்ப்பரிக்கவேண்டும்; அப்பொழுது பட்டணத்தின் மதில் இடிந்துவிழும்; உடனே மக்கள் அவரவர்கள் தங்களுக்கு நேராக ஏறிப்போகவேண்டும் என்றார்.
\s5
\v 6 அந்தப்படியே நூனின் மகனாகிய யோசுவா ஆசாரியர்களை அழைத்து: உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டுபோங்கள்; தொனிக்கும் ஏழு எக்காளங்களையும் ஏழு ஆசாரியர்கள் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகப் பிடித்துக்கொண்டு போகக்கடவர்கள் என்று சொல்லி;
\v 7 மக்களை நோக்கி: பட்டணத்தைச் சுற்றி நடந்துபோங்கள்; யுத்த வீரர்கள் கர்த்தரின் பெட்டிக்குமுன்னே நடக்கவேண்டும் என்றான்.
\s5
\v 8 யோசுவா மக்களிடம் பேசினவுடனே, தொனிக்கும் ஏழு எக்காளங்களைப் பிடித்திருக்கிற ஏழு ஆசாரியர்கள் கர்த்தருக்கு முன்பாக நடந்து எக்காளங்களை ஊதினார்கள்; கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி அவர்களுக்குப் பின்னே சென்றது.
\v 9 எக்காளங்களை ஊதுகிற ஆசாரியர்களுக்கு முன்னே யுத்த வீரர்கள் நடந்தார்கள்; பின்புறம் உள்ள வீரர்கள், எக்காளங்கள் ஊதப்படும்போது பெட்டிக்குப் பின்னே சென்றார்கள்.
\s5
\v 10 யோசுவா மக்களை நோக்கி: நான் சொல்லும் நாள் வரைக்கும், நீங்கள் ஆர்ப்பரிக்காமலும் உங்கள் வாயினால் சத்தம் போடாமலும் இருங்கள்; உங்களுடைய வாயிலிருந்து ஒரு பேச்சும் புறப்படவேண்டாம்; ஆர்ப்பரியுங்கள் என்று உங்களுக்கு நான் சொல்லும் நாளில் ஆர்ப்பரிப்பீர்களாக என்று கட்டளையிட்டிருந்தான்.
\v 11 அப்படியே கர்த்தரின் பெட்டியைப் பட்டணத்தைச் சுற்றி ஒருமுறை சுற்றிவரச் செய்தான்; அவர்கள் திரும்பப் முகாமிற்கு வந்து, அங்கே இரவுதங்கினார்கள்.
\s5
\v 12 யோசுவா அதிகாலையில் எழுந்திருந்தான்; ஆசாரியர்கள் கர்த்தரின் பெட்டியைச் சுமந்துகொண்டு போனார்கள்.
\v 13 தொனிக்கும் ஏழு எக்காளங்களைப் பிடித்திருக்கிற ஏழு ஆசாரியர்களும் எக்காளங்களை ஊதிக்கொண்டே கர்த்தரின் பெட்டிக்கு முன்பாக நடந்தார்கள்; யுத்த வீரர்கள் அவர்களுக்கு முன்னே நடந்தார்கள்; பின்புறம் இருந்த படை, எக்காளங்கள் ஊதப்படும்போது, கர்த்தரின் பெட்டிக்குப் பின்னே சென்றது.
\v 14 இரண்டாம் நாளிலும் பட்டணத்தை ஒருமுறை சுற்றிவந்து, முகாமிற்குத் திரும்பினார்கள்; இவ்விதமாக ஆறுநாட்களும் செய்தார்கள்.
\s5
\v 15 ஏழாம் நாளில், அதிகாலையிலே பொழுதுவிடியும்போது எழுந்திருந்து அந்தவிதமாகவே பட்டணத்தை ஏழுமுறை சுற்றிவந்தார்கள்; அந்த நாளில் மட்டும் பட்டணத்தை ஏழுமுறை சுற்றிவந்தார்கள்.
\v 16 ஏழாம்முறை ஆசாரியர்கள் எக்காளங்களை ஊதும்போது, யோசுவா மக்களை நோக்கி: ஆர்ப்பரியுங்கள், பட்டணத்தைக் கர்த்தர் உங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.
\s5
\v 17 ஆனாலும் இந்தப் பட்டணமும், இதில் உள்ள அனைத்தும் கர்த்தருக்கு சபிக்கப்பட்டதாக இருக்கும்; நாம் அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் விலைமாது மறைத்துவைத்தபடியால், அவளும் அவளுடைய வீட்டில் இருக்கிற அனைவரும் உயிரோடிருக்கட்டும்.
\v 18 சபிக்கப்பட்டதிலிருந்து எதையாவது எடுத்துக்கொள்வதினாலே, நீங்கள் சபிக்கப்பட்டவர்களாகாதபடிக்கும், இஸ்ரவேல் முகாமை சபிக்கப்பட்டதாக்கி அதைக் கலங்கச்செய்யாதபடிக்கும், நீங்கள் சபிக்கப்பட்டதற்குமட்டும் எச்சரிக்கையாக இருங்கள்.
\v 19 அனைத்து வெள்ளியும், பொன்னும், வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்யப்பட்ட பாத்திரங்களும், கர்த்தருக்குப் பரிசுத்தமானவைகள்; அவைகள் கர்த்தரின் பொக்கிஷத்தில் சேரும் என்றான்.
\s5
\v 20 எக்காளங்களை ஊதும்போது, மக்கள் ஆர்ப்பரித்தார்கள்; எக்காள சத்தத்தை மக்கள் கேட்டு, மகா ஆரவாரத்தோடு சத்தமிடும்போது, மதில் இடிந்து விழுந்தது; உடனே மக்கள் அவரவர்கள் தங்களுக்கு நேராகப் பட்டணத்தில் ஏறி, பட்டணத்தைப் பிடித்து,
\v 21 பட்டணத்திலிருந்த ஆண்களையும் பெண்களையும் வாலிபர்களையும் வயதானவர்களையும் ஆடுமாடுகளையும் கழுதைகள் அனைத்தையும் கூரான பட்டயத்தினால் அழித்துப்போட்டார்கள்.
\s5
\v 22 யோசுவா, தேசத்தை வேவுபார்த்த இரண்டு மனிதர்களை நோக்கி: நீங்கள் அந்த விலைமாதுவின் வீட்டிற்குப் போய், நீங்கள் அவளுக்கு வாக்குச்செய்தபடி அந்தப் பெண்ணையும் அவளுக்கு உண்டான எல்லாவற்றையும் அங்கிருந்து வெளியே கொண்டுவாருங்கள் என்றான்.
\s5
\v 23 அப்பொழுது வேவுகாரர்களான அந்த வாலிபர்கள் உள்ளே சென்று, ராகாபையும் அவளுடைய தகப்பனையும், தாயையும், சகோதரர்களையும், அவளுக்குண்டான எல்லாவற்றையும் அவளுடைய குடும்பத்தினர் அனைவரையும் வெளியே அழைத்துக்கொண்டுவந்து, அவர்களை இஸ்ரவேல் முகாமுக்கு வெளியே இருக்கும்படி செய்தார்கள்.
\v 24 பட்டணத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்; வெள்ளியையும், பொன்னையும், வெண்கலத்தினாலும், இரும்பினாலும் செய்த பாத்திரங்களை மட்டும் கர்த்தரின் ஆலயப்பொக்கிஷத்தில் சேர்த்தார்கள்.
\s5
\v 25 எரிகோவை வேவுபார்க்க யோசுவா அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் விலைமாது மறைத்துவைத்தபடியினால், அவளையும், அவளுடைய தகப்பன் வீட்டாரையும், அவளுக்குண்டான எல்லாவற்றையும் யோசுவா உயிரோடு வைத்தான்; அவள் இந்தநாள்வரைக்கும் இஸ்ரவேலில் வாழ்கிறாள்.
\s5
\v 26 அந்தக் காலத்திலே யோசுவா: இந்த எரிகோ பட்டணத்தைக் கட்டுவதற்காக எழும்பும் மனிதன் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்பட்டிருப்பான்; அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது தன் மூத்த மகனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது தன் இளைய மகனையும் சாகக் கொடுப்பான் என்று சாபம் கூறினான்.
\v 27 இந்தவிதமாகக் கர்த்தர் யோசுவாவோடு இருந்தார்; அவனுடைய புகழ் தேசமெல்லாம் பரவியது.
\s5
\c 7
\cl அத்தியாயம்– 7
\s1 ஆகானின் பாவம்
\p
\v 1 இஸ்ரவேல் மக்கள் சபிக்கப்பட்டவைகளினாலே துரோகம் செய்தார்கள்; எப்படியென்றால், யூதாகோத்திரத்தின் சேராகுடைய மகனாகிய சப்தியின் மகன் கர்மீக்குப் பிறந்த ஆகான் என்பவன், சபிக்கப்பட்டவைகளிலே சிலவற்றை எடுத்துக்கொண்டான்; ஆகையால் இஸ்ரவேல் மக்களின்மீது கர்த்தருடைய கோபம் மூண்டது.
\s5
\v 2 யோசுவா எரிகோவிலிருந்து பெத்தேலுக்குக் கிழக்கில் உள்ள பெத்தாவேனுக்கு அருகில் இருக்கிற ஆயி பட்டணத்திற்குப் போகும்படி ஆட்களை அனுப்பி: நீங்கள் போய், அந்த நாட்டை வேவுபாருங்கள் என்றான்; அந்த மனிதர்கள் போய், ஆயியை வேவுபார்த்து,
\v 3 யோசுவாவிடம் திரும்பிவந்து, அவனை நோக்கி: மக்கள் எல்லோரும் போகவேண்டியதில்லை; ஏறக்குறைய இரண்டாயிரம் மூவாயிரம்பேர் போய், ஆயியை முறியடிக்கலாம்; எல்லா மக்களையும் அங்கே போகும்படி வருத்தப்படுத்தவேண்டியதில்லை; அவர்கள் கொஞ்சம்பேர்தான் என்றார்கள்.
\s5
\v 4 அப்படியே மக்களில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் அந்த இடத்திற்குப் போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஆயியின் மனிதர்களிடம் தோல்வியடைந்து ஓடிப்போனார்கள்.
\v 5 ஆயியின் மனிதர்கள் அவர்களில் ஏறக்குறைய முப்பத்தாறுபேரை வெட்டிப்போட்டார்கள்; பட்டணவாசலின் வெளியிலிருந்து செபாரீம்வரைக்கும் அவர்களைத் துரத்தி, மலையடிவாரத்தில் அவர்களை வெட்டினார்கள்; மக்களின் இருதயம் கரைந்து தண்ணீராகப்போனது.
\s5
\v 6 அப்பொழுது யோசுவா தன்னுடைய ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, அவனும் இஸ்ரவேலின் மூப்பர்களும் மாலைநேரம்வரைக்கும் கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து, தங்களுடைய தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு கிடந்தார்கள்.
\v 7 யோசுவா: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, எங்களை அழிக்கும்படிக்கு எமோரியர்களின் கைகளில் ஒப்புக்கொடுப்பதற்காகவா இந்த மக்களை யோர்தானைக் கடக்கச்செய்தீர்? நாங்கள் யோர்தானுக்கு மறுபுறத்தில் மனதிருப்தியாக இருந்துவிட்டோமானால் நலமாக இருக்கும்.
\s5
\v 8 ஆ, ஆண்டவரே, இஸ்ரவேலர்கள் தங்களுடைய எதிரிகளுக்கு முதுகைக் காட்டினார்கள்; இப்பொழுது நான் என்ன சொல்லுவேன்.
\v 9 கானானியர்களும் தேசத்தின் குடிகள் அனைவரும் இதைக்கேட்டு, எங்களைச் சுற்றி வளைத்துக்கொண்டு, எங்களுடைய பெயரை பூமியில் இல்லாதபடிக்கு வேரில்லாமற்போகச் செய்வார்களே; அப்பொழுது உமது மகத்தான நாமத்திற்கு என்ன செய்வீர் என்றான்.
\s5
\v 10 அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: எழுந்திரு, நீ இப்படி முகங்குப்புற விழுந்துகிடக்கிறது என்ன?
\v 11 இஸ்ரவேலர்கள் பாவம் செய்தார்கள்; நான் அவர்களுக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையை மீறினார்கள்; சபிக்கப்பட்டவைகளில் சிலவற்றை எடுத்துக்கொண்டதும், திருடியதும், ஏமாற்றியதும், தங்களுடைய பொருட்களுக்குள்ளே வைத்ததும் உண்டே.
\v 12 ஆகவே, இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய எதிரிகளுக்கு முன்பாக நிற்க முடியாமல், தங்களுடைய எதிரிகளுக்கு முதுகைக் காட்டினார்கள்; அவர்கள் சபிக்கப்பட்டவர்களானார்கள்; நீங்கள் சபிக்கப்பட்டவைகளை உங்கள் நடுவிலிருந்து அழிக்காவிட்டால், இனி உங்களோடு இருக்கமாட்டேன்.
\s5
\v 13 எழுந்திரு, நீ மக்களைப் பரிசுத்தம்செய்யச் சொல்லவேண்டியது என்னவென்றால்: நாளையதினத்திற்கு உங்களைப் பரிசுத்தம் செய்துகொள்ளுங்கள்; இஸ்ரவேலர்களே, சபிக்கப்பட்டவைகள் உங்கள் நடுவே இருக்கிறது; நீங்கள் சபிக்கப்பட்டவைகளை உங்கள் நடுவிலிருந்து அகற்றாமலிருக்கும்வரை, நீங்கள் உங்களுடைய எதிரிகளுக்கு முன்பாக நிற்கமுடியாது என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.
\s5
\v 14 காலையிலே நீங்கள் கோத்திரம் கோத்திரமாக வரவேண்டும்; அப்பொழுது கர்த்தர் குறிக்கிற கோத்திரம் வம்சம் வம்சமாக வரவேண்டும்; கர்த்தர் குறிக்கிற வம்சம் குடும்பம் குடும்பமாக வரவேண்டும்; கர்த்தர் குறிக்கிற குடும்பம் பேர்பேராக வரவேண்டும் என்று சொல்.
\v 15 அப்பொழுது சபிக்கப்பட்டவைகளை எடுத்தவனாகக் கண்டுபிடிக்கப்படுகிறவன், கர்த்தரின் உடன்படிக்கையை மீறி, இஸ்ரவேலிலே மதிகேடான காரியத்தைச் செய்தபடியினால், அவனும் அவனுக்குண்டான அனைத்தும் அக்கினியில் சுட்டெரிக்கப்படவேண்டும் என்றார்.
\s5
\v 16 யோசுவா அதிகாலையில் எழுந்திருந்து, இஸ்ரவேலர்களைக் கோத்திரம் கோத்திரமாக வரச்செய்தான்; அப்பொழுது, யூதாவின் கோத்திரம் குறிக்கப்பட்டது.
\v 17 அவன் யூதாவின் வம்சங்களை வரச்செய்தபோது, சேராகியர்களின் வம்சம் குறிக்கப்பட்டது; அவன் சேராகியர்களின் வம்சத்தைப் பேர்பேராக வரச்செய்தபோது, சப்தி குறிக்கப்பட்டான்.
\v 18 அவனுடைய வீட்டாரை அவன் பேர்பேராக வரச்செய்தபோது, யூதா கோத்திரத்தின் சேராகின் மகனாகிய சப்திக்குப் பிறந்த கர்மீயின் மகன் ஆகான் குறிக்கப்பட்டான்.
\s5
\v 19 அப்பொழுது யோசுவா ஆகானை நோக்கி: மகனே, நீ இப்பொழுது இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்து, அவருக்கு முன்பாக அறிக்கைசெய்து, நீ செய்ததை எனக்குச் சொல்லு; அதை எனக்கு மறைக்காதே என்றான்.
\v 20 அப்பொழுது ஆகான் யோசுவாவுக்கு மறுமொழியாக: உண்மையாகவே நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தேன்; இன்னின்ன விதமாகச் செய்தேன்.
\v 21 கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையுள்ள ஒரு தங்கக் கட்டியையும் நான் கண்டு, அவைகளை ஆசைப்பட்டு எடுத்துக்கொண்டேன்; இதோ, அவைகள் என்கூடாரத்தின் நடுவில் நிலத்திற்குள் புதைக்கப்பட்டிருக்கிறது, வெள்ளி அதற்கு அடியில் இருக்கிறது என்றான்.
\s5
\v 22 உடனே யோசுவா ஆட்களை அனுப்பினான்; அவர்கள் கூடாரத்திற்கு ஓடினார்கள்; அவனுடைய கூடாரத்தில் அது புதைக்கப்பட்டிருந்தது, வெள்ளியும் அதின்கீழே இருந்தது.
\v 23 அவைகளைக் கூடாரத்தின் நடுவிலிருந்து எடுத்து, யோசுவாவிடமும் இஸ்ரவேல் மக்கள் எல்லோரிடமும் கொண்டுவந்து, கர்த்தருடைய சமூகத்தில் வைத்தார்கள்.
\s5
\v 24 அப்பொழுது யோசுவாவும் இஸ்ரவேலர்கள் எல்லோரும் சேராகின் மகனாகிய ஆகானையும், அந்த வெள்ளியையும், சால்வையையும், பொன் கட்டியையும், அவனுடைய மகன்களையும், மகள்களையும், அவனுடைய மாடுகளையும், கழுதைகளையும், ஆடுகளையும், அவனுடைய கூடாரத்தையும், அவனுக்குண்டான அனைத்தையும் எடுத்து, ஆகோர் பள்ளத்தாக்கிற்குக் கொண்டுபோனார்கள்.
\s5
\v 25 அங்கே யோசுவா: நீ எங்களைக் கலங்கச்செய்தது என்ன? இன்று கர்த்தர் உன்னைக் கலங்கச்செய்வார் என்றான்; அப்பொழுது இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவன்மேல் கல்லெறிந்து, அவைகளை அக்கினியில் சுட்டெரித்து, கற்களினால் மூடி;
\v 26 அவன்மேல் இந்தநாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இப்படியே கர்த்தர் தமது கடுங்கோபத்தைவிட்டு மாறினார்; ஆகவே அந்த இடம் இந்தநாள்வரைக்கும் ஆகோர் பள்ளத்தாக்கு என்னப்படும்.
\s5
\c 8
\cl அத்தியாயம்– 8
\s1 ஆயி பட்டணத்தின் அழிவு
\p
\v 1 அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; நீ யுத்த மக்கள் அனைவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து, ஆயி பட்டணம்வரைக்கும் போ, இதோ, ஆயியின் ராஜாவையும். அவனுடைய மக்களையும் அவனுடைய பட்டணத்தையும் அவனுடைய நாட்டையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்.
\v 2 நீ எரிகோவுக்கும் அதின் ராஜாவுக்கும் செய்ததுபோல, ஆயிக்கும் அதின் ராஜாவுக்கும் செய்யக்கடவாய்; அதில் கொள்ளையிட்டப் பொருட்களையும் மிருகஜீவன்களையும் உங்களுக்குக் கொள்ளையாக எடுத்துக்கொள்ளலாம், பட்டணத்திற்குப் பின்புறத்திலே இரகசியப்படையை வை என்றார்.
\s5
\v 3 அப்பொழுது ஆயியின் மீது படையெடுத்துப் போக, யோசுவாவும் எல்லா யுத்தமனிதர்களும் எழுந்து புறப்பட்டார்கள்; யோசுவா யுத்தவீரர்களான முப்பதாயிரம்பேரைத் தேர்ந்தெடுத்து, இரவிலே அவர்களை அனுப்பி,
\v 4 அவர்களுக்குக் கட்டளையிட்டது என்னவென்றால்: நீங்கள் பட்டணத்தின் பின்புறத்திலே ஒளிந்திருக்கவேண்டும்; பட்டணத்தைவிட்டு வெகுதூரம் போகாமல், எல்லோரும் ஆயத்தமாக இருங்கள்.
\s5
\v 5 நானும் என்னோடு இருக்கிற எல்லா மக்களும் பட்டணத்திற்கு அருகில் நெருங்கி வருவோம்; அவர்கள் முன்புபோல எங்களுக்கு எதிராகப் புறப்பட்டு வரும்போது, அவர்களுக்கு முன்னாக நாங்கள் ஓடிப்போவோம்.
\v 6 அப்பொழுது அவர்கள்; முன்பு போலவே நமக்கு முன்பாக தோற்று ஓடிப்போகிறார்கள் என்று சொல்லி, எங்களைத் துரத்தப் புறப்படுவார்கள்; நாங்களோ அவர்களைப் பட்டணத்தைவிட்டு வெளியே வரப்பண்ணும்வரைக்கும், அவர்களுக்கு முன்பாக ஓடுவோம்.
\v 7 அப்பொழுது நீங்கள் மறைவிலிருந்து எழும்பிவந்து, பட்டணத்தைப் பிடிக்கவேண்டும்; உங்களுடைய தேவனாகிய கர்த்தர் அதை உங்களுடைய கைகளில் ஒப்புக்கொடுப்பார்.
\s5
\v 8 நீங்கள் பட்டணத்தைப் பிடிக்கும்போது, அதைத் தீக்கொளுத்திப்போடுங்கள்; கர்த்தருடைய சொற்படி செய்யுங்கள்; இதோ, நான் உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன் என்று சொல்லி,
\v 9 அவர்களை அனுப்பினான்; அவர்கள் போய், பெத்தேலுக்கும் ஆயிக்கும் நடுவே, ஆயிக்கு மேற்கில் ஒளிந்திருந்தார்கள்; யோசுவா அன்று இரவு மக்களுடன் தங்கினான்.
\s5
\v 10 அதிகாலையில் யோசுவா எழுந்திருந்து, மக்களை எண்ணிப்பார்த்து, இஸ்ரவேலின் மூப்பர்களோடு மக்களுக்கு முன்பே நடந்து, ஆயியின் மேல் படையெடுத்தான்.
\v 11 அவனோடு இருந்த யுத்த மக்கள் எல்லோரும் நடந்து, பட்டணத்திற்கு அருகே வந்துசேர்ந்து, ஆயிக்கு வடக்கே முகாமிட்டார்கள்; அவர்களுக்கும் ஆயிக்கும் நடுவே ஒரு பள்ளத்தாக்கு இருந்தது.
\v 12 அவன் ஏறக்குறைய ஐயாயிரம் பேரைப் பிரித்தெடுத்து, அவர்களை பெத்தேலுக்கும் ஆயிக்கும் நடுவே பட்டணத்திற்குமேலே இரகசியப் படையாக வைத்தான்.
\s5
\v 13 பட்டணத்திற்கு வடக்கே இருந்த எல்லா சேனையையும் பட்டணத்திற்கு மேற்கே ஒளிந்திருக்கிறவர்களையும் ஒழுங்குசெய்தபின்பு, யோசுவா அன்று இரவு பள்ளத்தாக்கிற்குப் போயிருந்தான்.
\v 14 ஆயியின் ராஜா அதைக் கண்டபோது, அவனும் பட்டணத்தின் மனிதர்களாகிய அவனுடைய எல்லா மக்களும் துரிதப்பட்டு, அதிகாலையிலே குறித்த வேளையில் இஸ்ரவேலர்களுக்கு எதிரே யுத்தம்செய்ய சமவெளிக்கு நேராகப் புறப்பட்டார்கள்; பட்டணத்திற்குப் பின்னாலே தன்னைத் தாக்குவதற்காக இரகசியப் படை வைக்கப்பட்டிருக்கிறதை அவன் அறியாமலிருந்தான்.
\s5
\v 15 யோசுவாவும் இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவர்களுக்கு முன்னாக முறிந்து, வனாந்திரத்திற்குப் போகிற வழியே ஓடிப்போனார்கள்.
\v 16 அப்பொழுது பட்டணத்திற்குள் இருந்த மக்கள் எல்லோரும் அவர்களைத் துரத்தும்படி கூப்பிட்டுக்கொண்டு யோசுவாவைப் பின்தொடர்ந்து பட்டணத்தை விட்டுப் புறப்பட்டார்கள்.
\v 17 ஆயியிலும் பெத்தேலிலும் இஸ்ரவேலர்களைப் பின்தொடராத மனிதன் இருந்ததில்லை; பட்டணத்தைத் திறந்துவைத்துவிட்டு, இஸ்ரவேலர்களைத் துரத்திக்கொண்டுபோனார்கள்.
\s5
\v 18 அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: உன் கையில் இருக்கிற ஈட்டியை ஆயிக்கு நேராக நீட்டு; பட்டணத்தை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்; அப்படியே யோசுவா தன் கையில் இருந்த ஈட்டியைப் பட்டணத்திற்கு நேராக நீட்டினான்.
\v 19 அவன் தன் கையை நீட்டினவுடனே, ஒளிந்திருந்தவர்கள் வேகமாகத் தாங்கள் இருந்த இடத்திலிருந்து எழும்பி ஓடி, பட்டணத்திற்கு வந்து, அதைப் பிடித்து, தீவிரத்தோடு பட்டணத்தைத் தீக்கொளுத்தினார்கள்.
\s5
\v 20 ஆயியின் மனிதர்கள் பின்நோக்கிப் பார்த்தபோது, இதோ, பட்டணத்தின் புகை ஆகாயத்தில் எழும்புகிறதைக் கண்டார்கள்; அப்பொழுது அங்கும் இங்கும் ஓடிப்போகிறதற்கு அவர்களுக்கு இடம் இல்லாமல்போனது; வனாந்திரத்திற்கு ஓடின மக்கள் தங்களைப் பின்தொடர்ந்தவர்களை நோக்கித் திரும்பினார்கள்.
\v 21 ஒளிந்திருந்தவர்கள் பட்டணத்தைப் பிடித்ததையும், பட்டணத்தின் புகை எழும்புகிறதையும், யோசுவாவும் இஸ்ரவேலர்களும் பார்த்தபோது, திரும்பிக்கொண்டு, ஆயியின் மனிதர்களை முறியடித்தார்கள்.
\s5
\v 22 பட்டணத்திலிருந்தவர்களும் அவர்களுக்கு எதிர்ப்பட்டதினால், சிலர் இந்தப்பக்கத்திலும் சிலர் அந்தப்பக்கத்திலும் இருந்த இஸ்ரவேலர்களின் நடுவே அகப்பட்டுக்கொண்டார்கள்; ஆகவே, அவர்களில் ஒருவரும் தப்பிப்போகாதபடிக்கு அவர்களை வெட்டிப்போட்டு,
\v 23 ஆயியின் ராஜாவை உயிரோடு பிடித்து, யோசுவாவிடம் கொண்டுவந்தார்கள்.
\s5
\v 24 இஸ்ரவேலர்கள் வனாந்திரவெளியிலே தங்களைத் துரத்தின ஆயியின் குடிகளையெல்லாம் வெட்டித் தீர்ந்தபோதும், அவர்கள் அனைவரும் அழியும்வரை பட்டயக்கருக்கினால் விழுந்து இறந்தபோதும், இஸ்ரவேலர்கள் எல்லோரும் ஆயிக்குத் திரும்பி, அதைப் பட்டயக்கருக்கினால் அழித்தார்கள்.
\v 25 அந்த நாளிலே ஆணும் பெண்ணுமாக ஆயியின் மனிதர்கள் எல்லோரும் பன்னிரண்டாயிரம்பேர் மரித்தார்கள்.
\v 26 ஆயியின் குடிகளையெல்லாம் அழித்துத் தீரும்வரைக்கும், யோசுவா ஈட்டியை நீட்டிக்கொண்டிருந்த தன் கையை மடக்கவில்லை.
\s5
\v 27 கர்த்தர் யோசுவாவிற்குக் கட்டளையிட்ட வார்த்தையின்படி, மிருகஜீவனையும் அந்தப் பட்டணத்தில் கொள்ளையிட்டவைகளையும் மட்டும் இஸ்ரவேலர்கள் எடுத்துக்கொண்டார்கள்.
\v 28 யோசுவா ஆயியைச் சுட்டெரித்து, அதை இந்த நாள்வரைக்கும் இருக்கிறபடி என்றைக்கும் பாழாய்க்கிடக்கும் மண்மேடாக்கி,
\s5
\v 29 ஆயியின் ராஜாவை ஒரு மரத்திலே தூக்கி, மாலைநேரம்வரைக்கும் அதிலே தொங்கவிட்டான்; சூரியன் மறைந்தபின்பு யோசுவா அவனுடைய உடலை மரத்தைவிட்டு இறக்கச் சொன்னான்; அதைப் பட்டணத்தின் வாசலில் போட்டு, இந்த நாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலை அதின்மேல் குவித்தார்கள்.
\s1 ஏபால் மலையில் உடன்படிக்கை புதுப்பிக்கப்படுதல்
\p
\s5
\v 30 அப்பொழுது யோசுவா: கர்த்தரின் ஊழியக்காரனாகிய மோசே இஸ்ரவேல் மக்களுக்குக் கட்டளையிட்டபடியும், மோசேயின் நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதியிருக்கிறபடியும், ஏபால் மலையில் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு இரும்பு ஆயுதம் படாத முழுக்கற்களால் ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
\v 31 அதின்மேல் கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி, சமாதானபலிகளையும் செலுத்தினார்கள்.
\v 32 இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக மோசே எழுதியிருந்த நியாயப்பிரமாணத்தை அவன் அங்கே கற்களில் எழுதினான்.
\s5
\v 33 இஸ்ரவேல் மக்களை ஆசீர்வதிப்பதற்காக கர்த்தரின் தாசனாகிய மோசே முதலில் கட்டளையிட்டிருந்தபடியே, இஸ்ரவேலர்கள் எல்லோரும், அவர்களுடைய மூப்பர்களும், அதிகாரிகளும், நியாயாதிபதிகளும், அந்நியர்களும், இஸ்ரவேலில் பிறந்தவர்களும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவியர்களான ஆசாரியர்களுக்கு முன்பாக, பெட்டிக்கு இருபுறத்திலும், பாதிபேர் கெரிசீம் மலைக்கு எதிர்புறமாகவும், பாதிபேர் ஏபால் மலைக்கு எதிர்புறமாகவும் நின்றார்கள்.
\s5
\v 34 அதற்குப்பின்பு அவன் நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதியிருக்கிறபடி நியாயப்பிரமாணத்தில் சொல்லிய ஆசீர்வாதமும் சாபமுமாகிய எல்லா வார்த்தைகளையும் வாசித்தான்.
\v 35 மோசே கட்டளையிட்ட எல்லாவற்றிலும் யோசுவா இஸ்ரவேலின் முழுச்சபைக்கும், பெண்களுக்கும், பிள்ளைகளுக்கும், அவர்களுக்குள் வாழ்ந்த அந்நியர்களுக்கும் முன்பாக, ஒரு வார்த்தையையும் விடாமல் வாசித்தான்.
\s5
\c 9
\cl அத்தியாயம்– 9
\s1 கிபியோனியர்களின் தந்திரம்
\p
\v 1 யோர்தானுக்கு இந்தப்புறத்திலே மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் லீபனோனுக்கு எதிரான பெரிய சமுத்திரத்தின் கரையோரமெங்குமுள்ள ஏத்தியர்களும், எமோரியர்களும், கானானியர்களும், பெரிசியர்களும், ஏவியர்களும், எபூசியர்களும் அவர்களுடைய எல்லா ராஜாக்களும் அதைக் கேள்விப்பட்டபோது,
\v 2 அவர்கள் ஒருமனப்பட்டு, யோசுவாவோடும் இஸ்ரவேலர்களோடும் யுத்தம்செய்ய ஒன்றாகக் கூடினார்கள்.
\s5
\v 3 எரிகோவுக்கும் ஆயிக்கும் யோசுவா செய்ததைக் கிபியோனின் குடிகள் கேள்விப்பட்டபோது,
\v 4 ஒரு தந்திரமான யோசனைசெய்து, தங்களைப் பிரதிநிதிகளைப் போலக்காண்பித்து, பழைய சாக்குப் பைகளையும், பீறலும் பொத்தலுமான பழைய திராட்சரசத் தோல்பைகளையும் தங்களுடைய கழுதைகள்மேல் வைத்து,
\v 5 பழுதுபார்க்கப்பட்ட பழைய காலணிகளைத் தங்களுடைய கால்களில் அணிந்து, பழைய உடைகளை உடுத்திக்கொண்டார்கள்; வழிக்கு அவர்கள் கொண்டுபோன அப்பங்களெல்லாம் உலர்ந்ததும் பூசணம் பூத்ததுமாக இருந்தது.
\s5
\v 6 அவர்கள் கில்காலில் இருக்கிற கூடாரத்திற்கு யோசுவாவிடம் போய், அவனையும் இஸ்ரவேல் மனிதர்களையும் நோக்கி: நாங்கள் தூரதேசத்திலிருந்து வந்தவர்கள், எங்களோடு உடன்படிக்கைசெய்யுங்கள் என்றார்கள்.
\v 7 அப்பொழுது இஸ்ரவேல் மனிதர்கள் அந்த ஏவியர்களை நோக்கி: நீங்கள் எங்கள் நடுவிலே குடியிருக்கிறவர்கள்; நாங்கள் எப்படி உங்களுடன் உடன்படிக்கை செய்யமுடியும் என்றார்கள்.
\v 8 அவர்கள் யோசுவாவை நோக்கி: நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள்; அதற்கு யோசுவா: நீங்கள் யார், எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டான்.
\s5
\v 9 அதற்கு அவர்கள்: உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக் கேள்விப்பட்டு, உமது அடியார்களாகிய நாங்கள் வெகு தூரதேசத்திலிருந்து வந்தோம்; அவருடைய புகழ்ச்சியையும், அவர் எகிப்திலே செய்த எல்லாவற்றையும்,
\v 10 அவர் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனும் அஸ்தரோத்திலிருந்த பாசானின் ராஜாவாகிய ஓகும் என்கிற யோர்தானுக்கு மறுபுறத்திலிருந்த எமோரியர்களின் இரண்டு ராஜாக்களுக்கும் செய்த எல்லாவற்றையும் கேள்விப்பட்டோம்.
\s5
\v 11 ஆகவே, எங்கள் மூப்பர்களும் எங்கள் தேசத்தின் குடிகளெல்லோரும் எங்களை நோக்கி: உங்களுடைய கைகளில் வழிக்கு ஆகாரம் எடுத்துக்கொண்டு, அவர்களுக்கு எதிர்கொண்டுபோய், அவர்களிடம்: நாங்கள் உங்களுடைய அடியார்கள், எங்களோடு உடன்படிக்கை செய்யவேண்டும் என்று சொல்லச்சொன்னார்கள்.
\v 12 உங்களிடம் வர நாங்கள் புறப்படுகிற அன்றே, எங்களுடைய வழிப்பிரயாணத்திற்கு இந்த அப்பத்தைச் சுடச்சுட எங்கள் வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு வந்தோம்; இப்பொழுது, இதோ, உலர்ந்து பூசணம் பூத்திருக்கிறது.
\v 13 நாங்கள் இந்தத் திராட்சரசத் தோல்பைகளை நிரப்பும்போது புதிதாக இருந்தது; ஆனாலும், இதோ, கிழிந்துபோனது; எங்கள் உடைகளும், காலணிகளும் நெடுந்தூர பிரயாணத்தினாலே பழையதாகப்போனது என்றார்கள்.
\s5
\v 14 அப்பொழுது இஸ்ரவேலர்கள்: கர்த்தருடைய வார்த்தையைக் கேட்காமல் அவர்களுடைய உணவுப்பதார்த்தங்களிலே சிறிது வாங்கிக்கொண்டார்கள்.
\v 15 யோசுவா அவர்களோடு சமாதானம்செய்து, அவர்களை உயிரோடு காப்பாற்றும் உடன்படிக்கையை அவர்களோடு செய்தான்; அதற்காக சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு வாக்குக்கொடுத்தார்கள்.
\s5
\v 16 அவர்களோடு உடன்படிக்கைசெய்து, மூன்று நாட்கள் சென்றபின்பு, அவர்கள் தங்களுடைய அயலகத்தார்கள் என்றும் தங்கள் நடுவில் குடியிருக்கிறவர்கள் என்றும் கேள்விப்பட்டார்கள்.
\v 17 இஸ்ரவேல் மக்கள் பிரயாணம்செய்யும்போது, மூன்றாம் நாளில் அவர்கள் பட்டணங்களுக்கு வந்தார்கள்; அந்தப் பட்டணங்கள் கிபியோன், கெபிரா, பெயெரோத், கீரியாத்யெயாரீம் என்பவைகள்.
\s5
\v 18 சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தில் ஆணையிட்டிருந்தபடியினால், இஸ்ரவேல் மக்கள் அவர்களைத் தாக்கவில்லை; ஆனாலும் சபையார்கள் எல்லோரும் பிரபுக்களுக்கு எதிராக முறுமுறுத்தார்கள்.
\v 19 அப்பொழுது எல்லா பிரபுக்களும், சபையார்கள் அனைவரையும் நோக்கி: நாங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தில் அவர்களுக்கு வாக்குக்கொடுத்தோம்; ஆகவே அவர்களை நாம் தொடக்கூடாது.
\s5
\v 20 கடுங்கோபம் நம்மேல் வராதபடிக்கு, நாம் அவர்களுக்குக் கொடுத்த வாக்கின்படி நாம் அவர்களை உயிரோடு வைத்து, அவர்களுக்கு ஒன்று செய்வோம்.
\v 21 பிரபுக்களாகிய நாங்கள் அவர்களுக்குச் சொன்னபடி அவர்கள் உயிரோடிருந்து, சபையார்கள் எல்லோருக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும், தண்ணீர் எடுக்கிறவர்களாகவும் இருங்கள் என்று பிரபுக்கள் அவர்களிடம் சொன்னார்கள்.
\s5
\v 22 பின்பு யோசுவா அவர்களை அழைத்து: நீங்கள் எங்கள் நடுவில் குடியிருக்கும்போது: நாங்கள் உங்களுக்கு வெகுதூரமாக இருக்கிறவர்கள் என்று சொல்லி, எங்களை ஏமாற்றியது ஏன்?
\v 23 இப்பொழுதும் நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; என் தேவனுடைய ஆலயத்திற்கு விறகு வெட்டுகிறவர்களும், தண்ணீர் எடுக்கிறவர்களுமான வேலைக்காரர்களாக இருப்பீர்கள்; இந்த வேலை உங்களைவிட்டு நீங்காது என்றான்.
\s5
\v 24 அவர்கள் யோசுவாவுக்கு மறுமொழியாக: தேசத்தையெல்லாம் உங்களுக்கு ஒப்புக்கொடுக்கவும், தேசத்தின் குடிகளையெல்லாம் உங்களுக்கு முன்பாக அழிக்கவும் உம்முடைய தேவனாகிய கர்த்தர் தமது ஊழியக்காரனாகிய மோசேக்குக் கட்டளையிட்டது உமது அடியார்களுக்கு நிச்சயமாகவே அறிவிக்கப்பட்டதினால், நாங்கள் எங்களுடைய ஜீவனுக்காக உங்களுக்கு மிகவும் பயந்து, இந்தக் காரியத்தைச் செய்தோம்.
\v 25 இப்போதும், இதோ, உமது கைகளில் இருக்கிறோம், உம்முடைய பார்வைக்கு நன்மையும் நியாயமுமாகத் தோன்றுகிறபடி எங்களுக்குச் செய்யும் என்றார்கள்.
\s5
\v 26 அப்படியே யோசுவா அவர்களுக்குச் செய்து, இஸ்ரவேல் மக்கள் அவர்களைக் கொன்றுபோடாதபடிக்கு, அவர்களை இவர்கள் கைகளிலிருந்து தப்புவித்தான்.
\v 27 இந்தநாள்வரை இருக்கிறபடியே, அந்தநாளில் அவர்களைச் சபைக்கும், கர்த்தர் தெரிந்துகொள்ளும் இடத்திலிருக்கும் அவருடைய பலிபீடத்திற்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும், தண்ணீர் எடுக்கிறவர்களாகவும் வைத்தான்.
\s5
\c 10
\cl அத்தியாயம்– 10
\s1 சூரியனை நிறுத்துதல்
\p
\v 1 யோசுவா ஆயியைப் பிடித்து, முழுவதும் அழித்து, எரிகோவிற்கும் அதின் ராஜாவிற்கும் செய்தபடி, ஆயிக்கும் அதின் ராஜாவிற்கும் செய்ததையும், கிபியோனின் குடிகள் இஸ்ரவேலர்களோடு சமாதானம்செய்து அவர்களுக்குள் குடியிருக்கிறதையும், எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் கேள்விப்பட்டபோது,
\v 2 கிபியோன், ராஜதானி பட்டணங்களில் ஒன்றைப்போல பெரிய பட்டணமும், ஆயியைவிட பெரியதுமாக இருந்தபடியினாலும், அதின் மனிதர்கள் எல்லோரும் பலசாலிகளாக இருந்தபடியினாலும், மிகவும் பயந்தார்கள்.
\s5
\v 3 ஆகவே, எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் எபிரோனின் ராஜாவாகிய ஓகாமுக்கும், யர்மூத்தின் ராஜாவாகிய பீராமுக்கும், லாகீசின் ராஜாவாகிய யப்பியாவுக்கும், எக்லோனின் ராஜாவாகிய தெபீருக்கும் ஆள் அனுப்பி:
\v 4 நாங்கள் கிபியோனைத் தாக்கும்படி, நீங்கள் என்னிடம் வந்து, எனக்கு உதவிசெய்யுங்கள்; அவர்கள் யோசுவாவோடும், இஸ்ரவேல் மக்களோடும் சமாதானம் செய்தார்கள் என்று சொல்லியனுப்பினான்.
\s5
\v 5 அப்படியே எருசலேமின் ராஜா, எபிரோனின் ராஜா, யர்மூத்தின் ராஜா, லாகீசின் ராஜா, எக்லோனின் ராஜா என்கிற எமோரியர்களின் ஐந்து ராஜாக்களும் கூடிக்கொண்டு, அவர்களும் அவர்களுடைய எல்லா சேனைகளும் போய், கிபியோனுக்கு முன்பாக முகாமிட்டு, அதின்மேல் யுத்தம்செய்தார்கள்.
\s5
\v 6 அப்பொழுது கிபியோனின் மனிதர்கள் கில்காலில் இருக்கிற முகாமிற்கு யோசுவாவிடம் ஆள் அனுப்பி: உமது அடியார்களைக் கைவிடாமல், சீக்கிரமாக எங்களிடம் வந்து, எங்களைக் காப்பாற்றி, எங்களுக்கு உதவிசெய்யும்; மலை தேசங்களிலே குடியிருக்கிற எமோரியர்களின் ராஜாக்கள் எல்லோரும் எங்களுக்கு விரோதமாகக் கூடினார்கள் என்று சொல்லச் சொன்னார்கள்.
\v 7 உடனே யோசுவாவும் அவனோடு எல்லா யுத்தமனிதர்களும், எல்லா பராக்கிரமசாலிகளும் கில்காலிலிருந்து போனார்கள்.
\s5
\v 8 கர்த்தர் யோசுவாவை நோக்கி: அவர்களுக்குப் பயப்படாதே; உன் கைகளில் அவர்களை ஒப்புக்கொடுத்தேன்; அவர்களில் ஒருவரும் உனக்கு முன்பாக நிற்பதில்லை என்றார்.
\s5
\v 9 யோசுவா கில்காலிலிருந்து இரவுமுழுவதும் நடந்து, திடீரென்று அவர்கள்மேல் வந்துவிட்டான்.
\v 10 கர்த்தரோ அவர்களை இஸ்ரவேலுக்கு முன்பாகக் கலங்கச்செய்தார்; ஆகவே அவர்களைக் கிபியோனிலே மகா பயங்கரமாகத் தாக்கி, பெத்தொரோனுக்குப் போகிற வழியிலே துரத்தி, அசெக்கா மற்றும் மக்கெதாவரைக்கும் முறியடித்தார்கள்.
\s5
\v 11 அவர்கள் பெத்தொரோனிலிருந்து இறங்குகிற வழியிலே இஸ்ரவேலுக்கு முன்பாக ஓடிப்போகும்போது, அசெக்காவரைக்கும் ஓடுகிற அவர்கள்மேல் கர்த்தர் வானத்திலிருந்து பெரிய கற்களை விழச்செய்தார், அவர்கள் இறந்தார்கள்; இஸ்ரவேல் மக்களுடைய பட்டயத்தால் கொல்லப்பட்டவர்களைவிட கல்மழையினால் இறந்தவர்கள் அதிகமாக இருந்தார்கள்.
\s5
\v 12 கர்த்தர் எமோரியர்களை இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிற அந்த நாளிலே, யோசுவா கர்த்தரை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக: சூரியனே, நீ கிபியோன்மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கின்மேலும் நில்லுங்கள் என்றான்.
\s5
\v 13 அப்பொழுது மக்கள் தங்களுடைய சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டும்வரைக்கும் சூரியன் நின்றது, சந்திரனும் நின்றது; இது யாசேரின் புத்தகத்தில் எழுதியிருக்கவில்லையா; அப்படியே சூரியன் மறைவதற்குத் துரிதப்படாமல், ஏறக்குறைய ஒருபகல் முழுவதும் நடுவானத்தில் நின்றது.
\v 14 இப்படிக் கர்த்தர் ஒரு மனிதனுடைய சொல்லைக் கேட்ட அந்த நாளைப்போன்ற ஒருநாள் அதற்கு முன்னும் இல்லை, அதற்குப் பின்னும் இல்லை; கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்செய்தார்.
\s5
\v 15 பின்பு யோசுவா இஸ்ரவேலர்கள் அனைவரோடும் கில்காலில் இருக்கிற முகாமிற்குத் திரும்பினான்.
\s1 ஐந்து எமோரிய இராஜாக்கள் கொல்லப்படுதல்
\p
\v 16 அந்த ஐந்து ராஜாக்களும் ஓடிப்போய், மக்கெதாவிலிருக்கிற ஒரு குகையில் ஒளிந்துகொண்டார்கள்.
\v 17 ஐந்து ராஜாக்களும் மக்கெதாவிலிருக்கிற ஒரு குகையில் ஒளிந்திருந்து அகப்பட்டார்கள் என்று யோசுவாவிற்கு அறிவிக்கப்பட்டது.
\s5
\v 18 அப்பொழுது யோசுவா: பெரிய கற்களைக் குகையின் வாயிலே புரட்டிவைத்து, அந்த இடத்தில் அவர்களைக் காவல்காக்க மனிதர்களை நிறுத்துங்கள்.
\v 19 நீங்களோ நிற்காமல், உங்களுடைய எதிரிகளைத் துரத்தி, அவர்களுடைய பின்படைகளை வெட்டிப்போடுங்கள்; அவர்களைத் தங்கள் பட்டணங்களிலே நுழையவிடாதிருங்கள்; உங்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களை உங்களுடைய கையில் ஒப்புக்கொடுத்தார் என்றான்.
\s5
\v 20 யோசுவாவும் இஸ்ரவேல் மக்களும் அவர்களை மகா பயங்கரமாக அவர்கள் முழுவதும் அழியும்வரைக்கும் தாக்கினார்கள்; அவர்களில் மீதியானவர்கள் பாதுகாப்பான பட்டணங்களுக்குள் புகுந்தார்கள்.
\v 21 மக்களெல்லோரும் சுகமாக மக்கெதாவிலிருக்கிற முகாமிலே, யோசுவாவிடம் திரும்பிவந்தார்கள்; இஸ்ரவேல் மக்களுக்கு விரோதமாக ஒருவனும் தன் நாவை அசைக்கவில்லை.
\s5
\v 22 அப்பொழுது யோசுவா: குகையின் வாயைத் திறந்து, அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் குகையிலிருந்து என்னிடம் வெளியே கொண்டுவாருங்கள் என்றான்.
\v 23 அவர்கள் அப்படியே செய்து, எருசலேமின் ராஜாவும், எபிரோனின் ராஜாவும், யர்மூத்தின் ராஜாவும், லாகீசின் ராஜாவும், எக்லோனின் ராஜாவுமாகிய அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் குகையிலிருந்து வெளியே அவனிடத்திற்குக் கொண்டுவந்தார்கள்.
\s5
\v 24 அவர்களை யோசுவாவிடம் கொண்டுவந்தபோது, யோசுவா இஸ்ரவேல் மனிதர்கள் அனைவரையும் அழைத்து, தன்னோடு வந்த யுத்தமனிதர்களின் அதிகாரிகளை நோக்கி: நீங்கள் அருகில் வந்து, உங்கள் கால்களை இந்த ராஜாக்களுடைய கழுத்துகளின்மேல் வையுங்கள் என்றான்; அவர்கள் அருகில் வந்து, தங்களுடைய கால்களை அவர்கள் கழுத்துகளின்மேல் வைத்தார்கள்.
\v 25 அப்பொழுது யோசுவா அவர்களை நோக்கி: நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் பலமாகவும் திடமனதாகவும் இருங்கள்; நீங்கள் யுத்தம்செய்யும் உங்களுடைய எதிரிகளுக்கெல்லாம் கர்த்தர் இப்படியே செய்வார் என்றான்.
\s5
\v 26 அதற்குப்பின்பு யோசுவா அவர்களை வெட்டிக் கொன்று, ஐந்து மரங்களிலே தூக்கிப்போட்டான்; மாலைநேரம்வரைக்கும் மரங்களில் தொங்கினார்கள்.
\v 27 சூரியன் மறைகிற நேரத்திலே, யோசுவா அவர்களை மரங்களிலிருந்து இறக்கக் கட்டளையிட்டான். அவர்கள் ஒளிந்துகொண்டிருந்த குகையிலே அவர்களைப் போட்டு; இந்தநாள்வரைக்கும் இருக்கிறபடி பெரிய கற்களைக் குகையின் வாயிலே அடைத்தார்கள்.
\s5
\v 28 அந்தநாளிலே யோசுவா மக்கெதாவைப் பிடித்து, அதைப் பட்டயத்தினால் அழித்து, அதின் ராஜாவையும் அதிலுள்ள மனிதர்களையும் எல்லா உயிரினங்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல், அழித்து, எரிகோவின் ராஜாவுக்குச் செய்ததுபோல, மக்கெதாவின் ராஜாவுக்கும் செய்தான்.
\s1 தென்திசைப் பட்டணங்கள் கைப்பற்றப்படுதல்
\p
\s5
\v 29 மக்கெதாவிலிருந்து யோசுவா இஸ்ரவேலர்கள் அனைவரோடும் லிப்னாவுக்குப் புறப்பட்டு, லிப்னாவின்மேல் யுத்தம்செய்தான்.
\v 30 கர்த்தர் அதையும் அதின் ராஜாவையும் இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அதையும் அதிலுள்ள எல்லா உயிரினங்களையும், ஒருவரையும் அதிலே மீதியாக வைக்காமல், பட்டயத்தினால் அழித்து, எரிகோவின் ராஜாவுக்குச் செய்ததுபோல, அதின் ராஜாவுக்கும் செய்தான்.
\s5
\v 31 லிப்னாவிலிருந்து யோசுவா இஸ்ரவேல் அனைவரோடும் லாகீசுக்குப் புறப்பட்டு, அதற்கு எதிரே முகாமிட்டு, அதின்மேல் யுத்தம்செய்தான்.
\v 32 கர்த்தர் லாகீசை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அதை இரண்டாம் நாளிலே பிடித்து, லிப்னாவுக்குச் செய்ததுபோல, அதையும் அதிலுள்ள எல்லா உயிரினங்களையும் பட்டயத்தினால் அழித்தான்.
\s5
\v 33 அப்பொழுது கேசேரின் ராஜாவாகிய ஓராம் லாகீசுக்கு உதவிசெய்யும்படி வந்தான்; யோசுவா அவனையும் அவனுடைய மக்களையும், ஒருவனும் மீதியாக இல்லாதபடி, வெட்டிப்போட்டான்.
\s5
\v 34 லாகீசிலிருந்து யோசுவாவும் இஸ்ரவேலர்கள் அனைவரும் எக்லோனுக்குப் புறப்பட்டு, அதற்கு எதிரே முகாமிட்டு, அதின்மேல் யுத்தம்செய்து,
\v 35 அதை அந்தநாளிலே பிடித்து, அதைப் பட்டயக்கருக்கினால் அழித்தார்கள்; லாகீசுக்குச் செய்ததுபோல, அதிலுள்ள எல்லா உயிரினங்களையும் அந்தநாளிலே அழித்துப்போட்டான்.
\s5
\v 36 பின்பு எக்லோனிலிருந்து யோசுவாவும் இஸ்ரவேலர்கள் அனைவருமாக எபிரோனுக்குப் புறப்பட்டு, அதின்மேல் யுத்தம்செய்து,
\v 37 அதைப் பிடித்து, எக்லோனுக்குச் செய்ததுபோல, அதையும் அதின் ராஜாவையும் அதற்கு அடுத்த எல்லாப் பட்டணங்களையும் அதிலுள்ள எல்லா உயிரினங்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல், பட்டயத்தினால் அழித்தார்கள்; அதையும் அதிலுள்ள எல்லா உயிரினங்களையும் அழித்துப்போட்டான்.
\s5
\v 38 பின்பு யோசுவா இஸ்ரவேலர்கள் அனைவரோடும் தெபீருக்குத் திரும்பிப்போய், அதின்மேல் யுத்தம்செய்து,
\v 39 அதையும் அதின் ராஜாவையும் அதைச் சேர்ந்த எல்லாப் பட்டணங்களையும் பிடித்தான்; அவைகளைப் பட்டயத்தினால் அழித்து, அதிலுள்ள உயிரினங்களையெல்லாம், ஒருவரையும் மீதியாக வைக்காமல், அழித்தார்கள்; எபிரோனுக்கும் லிப்னாவுக்கும் அவைகளின் ராஜாவுக்கும் செய்ததுபோல தெபீருக்கும் அதின் ராஜாவுக்கும் செய்தான்.
\s5
\v 40 இப்படியே யோசுவா மலைத்தேசம் அனைத்தையும் தென்தேசத்தையும் சமபூமியையும் நீர்ப்பாய்ச்சலான இடங்களையும் அவைகளின் எல்லா ராஜாக்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் அழித்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டபடியே, சுவாசமுள்ள எல்லாவற்றையும் அழித்து,
\v 41 காதேஸ்பர்னேயா துவங்கிக் காத்சாவரை இருக்கிறதையும் கிபியோன்வரை இருக்கிற கோசேன் தேசம் அனைத்தையும் அழித்தான்.
\s5
\v 42 அந்த ராஜாக்கள் எல்லோரையும் அவர்களுடைய தேசத்தையும் யோசுவா ஒரே சமயத்தில் பிடித்தான்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்செய்தார்.
\v 43 பின்பு யோசுவா இஸ்ரவேலர்கள் அனைவரோடும் கில்காலில் இருக்கிற முகாமிற்குத் திரும்பினான்.
\s5
\c 11
\cl அத்தியாயம்– 11
\s1 வடதிசை இராஜாக்கள் முறியடிக்கப்படுதல்
\p
\v 1 ஆத்சோரின் ராஜாவாகிய யாபீன் அதைக் கேள்விப்பட்டபோது, அவன் மாதோனின் ராஜாவாகிய யோபாபிடமும், சிம்ரோனின் ராஜாவிடமும், அக்சாபின் ராஜாவிடமும்,
\v 2 வடக்கே இருக்கிற மலைகளிலும் கின்னரோத்திற்குத் தெற்கே இருக்கிற நாட்டுப்புறத்திலும் சமபூமியிலும் மேற்கு எல்லையாகிய தோரிலும் இருக்கிற ராஜாக்களிடமும்,
\v 3 கிழக்கேயும், மேற்கேயும் இருக்கிற கானானியர்களிடமும், மலைகளில் இருக்கிற எமோரியர்கள், ஏத்தியர்கள், பெரிசியர்கள், எபூசியர்களிடமும், எர்மோன் மலையின் அடியிலே மிஸ்பா தேசத்தில் இருக்கிற ஏவியர்களிடமும் ஆள் அனுப்பினான்.
\s5
\v 4 அவர்கள் கடற்கரை மணலைப்போல ஏராளமான மக்களாகிய தங்களுடைய எல்லா சேனைகளோடும், ஏராளமான குதிரைகளோடும் இரதங்களோடும் புறப்பட்டார்கள்.
\v 5 இந்த ராஜாக்கள் எல்லோரும் கூடி, இஸ்ரவேலர்களோடு யுத்தம்செய்ய வந்து, மேரோம் என்கிற ஏரியின் அருகில் ஏகமாக முகாமிட்டார்கள்.
\s5
\v 6 அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: அவர்களுக்குப் பயப்படாதே; நாளை இந்த நேரத்திலே நான் அவர்களையெல்லாம் இஸ்ரவேலுக்கு முன்பாக வெட்டப்பட்டவர்களாக ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்களுடைய குதிரைகளின் குதிகால் நரம்புகளை அறுத்து, அவர்கள் இரதங்களை அக்கினியால் சுட்டெரிப்பாய் என்றார்.
\v 7 யோசுவாவும், அவனோடு யுத்த மக்கள் அனைவரும், திடீரென்று மேரோம் ஏரியின் அருகே இருக்கிற எதிரிகளிடம் வந்து, அவர்களைத் தாக்கினார்கள்.
\s5
\v 8 கர்த்தர் அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களை முறியடித்து, பெரிய சீதோன்வரைக்கும் மிஸ்ரபோத்மாயீம்வரைக்கும், கிழக்கே இருக்கிற மிஸ்பே பள்ளத்தாக்குவரைக்கும் துரத்தி, அவர்களில் ஒருவரும் மீதியில்லாதபடி, அவர்களை வெட்டிப்போட்டார்கள்.
\v 9 யோசுவா கர்த்தர் தனக்குச் சொன்னபடி அவர்களுக்குச் செய்து, அவர்களுடைய குதிரைகளின் குதிகால் நரம்புகளை அறுத்து, அவர்களுடைய இரதங்களை அக்கினியால் சுட்டெரித்தான்.
\s5
\v 10 அக்காலத்திலே யோசுவா திரும்பி, ஆத்சோரைப் பிடித்து, அதின் ராஜாவைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டான்; ஆத்சோர் முன்னே அந்த ராஜ்யங்களுக்கெல்லாம் தலைமையான பட்டணமாக இருந்தது.
\v 11 அதில் இருந்த உயிரினங்களையெல்லாம் பட்டயத்தினால் வெட்டி, அழித்துப்போட்டான்; சுவாசமுள்ளது ஒன்றும் மீதியானதில்லை; ஆத்சோரையோ அக்கினியால் சுட்டெரித்தான்.
\s5
\v 12 அந்த ராஜாக்களுடைய எல்லாப் பட்டணங்களையும் அவைகளுடைய எல்லா ராஜாக்களையும் யோசுவா பிடித்து, பட்டயத்தினால் வெட்டி, கர்த்தருடைய ஊழியக்காரனாகிய மோசே கட்டளையிட்டபடி, அவர்களை அழித்துப்போட்டான்.
\v 13 ஆனாலும் தங்களுடைய மேட்டின்மேல் இருந்த பட்டணங்களையெல்லாம் இஸ்ரவேலர்கள் சுட்டெரித்துப்போடாமல் வைத்தார்கள்; ஆத்சோரைமாத்திரம் யோசுவா சுட்டெரித்துப்போட்டான்.
\s5
\v 14 அந்தப் பட்டணங்களிலுள்ள மிருகஜீவன்களையும் மற்றக் கொள்ளைப்பொருட்களையும் இஸ்ரவேல் மக்கள் தங்களுக்கென்று எடுத்துக்கொண்டார்கள்; ஆனாலும் எல்லா மனிதர்களையும் அழித்துபோடும்வரைக்கும் அவர்களைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டார்கள்; சுவாசமுள்ள ஒன்றையும் அவர்கள் மீதியாக வைக்கவில்லை.
\v 15 கர்த்தர் தமது ஊழியக்காரனாகிய மோசேக்கு எப்படிக் கட்டளையிட்டிருந்தாரோ, அப்படியே மோசே யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்தான்; அப்படியே யோசுவா செய்தான்; அவன், கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டதில் ஒன்றையும் செய்யாமல் விடவில்லை.
\s5
\v 16 இந்த விதமாக யோசுவா சேயீருக்கு ஏறிப்போகிற ஆலாக் மலைதுவங்கி லீபனோனின் பள்ளத்தாக்கில் எர்மோன் மலையடியில் இருக்கிற பாகால் காத்வரையுள்ள அந்த முழுத்தேசமாகிய மலைகளையும், தென்தேசம் எல்லாவற்றையும், கோசேன் தேசத்தையும் சமனான பூமியையும், நாட்டுப்புறத்தையும், இஸ்ரவேலின் மலைகளையும் அதின் சமபூமியையும் பிடித்துக்கொண்டு,
\v 17 அவைகளின் ராஜாக்களையெல்லாம் பிடித்து, அவர்களை வெட்டிக் கொன்றுபோட்டான்.
\s5
\v 18 யோசுவா நீண்டநாட்களாக அந்த ராஜாக்கள் எல்லோரோடும் யுத்தம்செய்தான்.
\v 19 கிபியோனின் குடிகளாகிய ஏவியர்களைத்தவிர, ஒரு பட்டணமும் இஸ்ரவேல் மக்களோடு சமாதானம் செய்யவில்லை; மற்ற எல்லாப் பட்டணங்களையும் யுத்தம்செய்துப் பிடித்தார்கள்.
\v 20 யுத்தம்செய்ய இஸ்ரவேலுக்கு எதிராக வரும்படிக்கு, அவர்களுடைய இருதயம் கடினமானதும், இப்படியே அவர்கள்மேல் இரக்கம் உண்டாகாமல், கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி, அவர்களை அழித்துப்போட்டதும் கர்த்தரால் வந்த காரியமாக இருந்தது.
\s5
\v 21 அக்காலத்திலே யோசுவா போய், மலைத்தேசமாகிய எபிரோனிலும் தெபீரிலும் ஆனாபிலும் யூதாவின் எல்லா மலைகளிலும் இருந்த ஏனாக்கியர்களை அவர்களுடைய பட்டணங்களோடு சேர்த்து அழித்தான்.
\v 22 இஸ்ரவேல் மக்களின் தேசத்தில் ஏனாக்கியர்கள் ஒருவரும் மீதியாக வைக்கப்படவில்லை; காசாவிலும் காத்திலும் அஸ்தோத்திலும்மட்டும் சிலர் மீதியாக இருந்தார்கள்.
\s5
\v 23 அப்படியே யோசுவா, கர்த்தர் மோசேயிடம் சொன்னபடியெல்லாம் முழுதேசத்தையும் பிடித்து, அதை இஸ்ரவேலுக்கு, அவர்களின் கோத்திரங்களுடைய பங்குகளின்படியே, சொந்தமாகக் கொடுத்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாக இருந்தது.
\s5
\c 12
\cl அத்தியாயம்– 12
\s1 முறியடிக்கப்பட்ட இராஜாக்கள்
\p
\v 1 யோர்தானுக்கு அந்தப் புறத்தில் சூரியன் உதயமாகிற திசையிலே அர்னோன் ஆறு துவங்கி எர்மோன் மலைவரைக்கும், கிழக்கே சமபூமி எல்லைகளிலெல்லாம் உள்ள ராஜாக்களை இஸ்ரவேலர்கள் முறியடித்து, அவர்களுடைய தேசங்களையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்.
\v 2 அந்த ராஜாக்களில், எஸ்போனில் குடியிருந்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோன், அர்னோன் ஆற்றங்கரையில் இருக்கிற ஆரோவேர் துவங்கி ஆற்றின் நடுமையமும் பாதிக் கீலேயாத் உட்பட அம்மோனியர்களின் எல்லையான யாபோக்கு ஆறுவரையுள்ள தேசத்தையும்,
\s5
\v 3 சமவெளி துவங்கிக் கிழக்கே இருக்கிற கின்னரோத் கடல்வரைக்கும் பெத்யெசிமோத் வழியாகக் கிழக்கே இருக்கிற சமவெளியின் கடலாகிய உப்புக்கடல்வரைக்கும் இருக்கிற தேசத்தையும் தெற்கே அஸ்தோத்பிஸ்காவுக்குக் கீழாக இருக்கிற தேசத்தையும் அரசாண்டான்.
\v 4 இராட்சதரில் மீதியான பாசானின் ராஜாவாகிய ஓகின் எல்லையையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்; அவன் அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் வாழ்ந்து,
\v 5 எர்மோன் மலையையும் சல்காவையும், கெசூரியர்கள், மாகாத்தியர்கள் எல்லைவரைக்கும் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் எல்லையாக இருந்த பாதிக் கீலேயாத்வரைக்கும் இருக்கும் பாசான் அனைத்தையும் அரசாண்டான்.
\s5
\v 6 அவர்களைக் கர்த்தரின் ஊழியக்காரனாகிய மோசேயும் இஸ்ரவேல் மக்களும் முறியடித்தார்கள்; அந்த தேசத்தைக் கர்த்தரின் ஊழியக்காரனாகிய மோசே ரூபனியர்களுக்கும் காத்தியர்களுக்கும் மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்கும் சொந்தமாகக் கொடுத்தான்.
\s5
\v 7 யோர்தானுக்கு இந்தப் புறத்திலே மேற்கே லீபனோனின் பள்ளத்தாக்கிலுள்ள பாகால்காத் துவங்கி சேயீருக்கு ஏறிப்போகிற ஆலாக்மலைவரைக்கும், மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் சமபூமியிலும் மலைகளுக்கடுத்த பகுதிகளிலும் வனாந்திரத்திலும் தெற்குத் தேசத்திலும் இருக்கிறதும்,
\v 8 யோசுவா இஸ்ரவேல் கோத்திரங்களுக்குச் சொந்தமாகப் பங்கிட்டதுமான ஏத்தியர்கள், எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் என்பவர்களுடைய தேசத்தில் இருந்தவர்களும், யோசுவாவும் இஸ்ரவேல் மக்களும் முறியடித்தவர்களுமான ராஜாக்கள் யாரென்றால்:
\s5
\v 9 எரிகோவின் ராஜா ஒன்று, பெத்தேலுக்கு அருகான ஆயியின் ராஜா ஒன்று,
\v 10 எருசலேமின் ராஜா ஒன்று, எபிரோனின் ராஜா ஒன்று,
\v 11 யர்மூத்தின் ராஜா ஒன்று, லாகீசின் ராஜா ஒன்று,
\v 12 எக்லோனின் ராஜா ஒன்று, கேசேரின் ராஜா ஒன்று,
\s5
\v 13 தெபீரின் ராஜா ஒன்று, கெதேரின் ராஜா ஒன்று,
\v 14 ஒர்மாவின் ராஜா ஒன்று, ஆராதின் ராஜா ஒன்று,
\v 15 லிப்னாவின் ராஜா ஒன்று, அதுல்லாமின் ராஜா ஒன்று,
\v 16 மக்கேதாவின் ராஜா ஒன்று, பெத்தேலின் ராஜா ஒன்று,
\s5
\v 17 தப்புவாவின் ராஜா ஒன்று, எப்பேரின் ராஜா ஒன்று,
\v 18 ஆப்பெக்கின் ராஜா ஒன்று, லசரோனின் ராஜா ஒன்று,
\v 19 மாதோனின் ராஜா ஒன்று, ஆத்சோரின் ராஜா ஒன்று,
\v 20 சிம்ரோன் மேரோனின் ராஜா ஒன்று, அக்சாபின் ராஜா ஒன்று,
\s5
\v 21 தானாகின் ராஜா ஒன்று, மெகிதோவின் ராஜா ஒன்று,
\v 22 கேதேசின் ராஜா ஒன்று, கர்மேலுக்கடுத்த யொக்னியாமின் ராஜா ஒன்று,
\v 23 தோரின் கரையைச் சேர்ந்த தோரின் ராஜா ஒன்று, கில்காலுக்கடுத்த கோயிமின் ராஜா ஒன்று,
\v 24 திர்சாவின் ராஜா ஒன்று; ஆக இவர்களெல்லோரும் முப்பத்தொரு ராஜாக்கள்.
\s5
\c 13
\cl அத்தியாயம்– 13
\s1 சுதந்தரிக்கப்படவேண்டிய தேசம்
\p
\v 1 யோசுவா வயதுமுதிர்ந்தவனானபோது, கர்த்தர் அவனை நோக்கி: நீ வயதுமுதிர்ந்தவனானாய்; கைப்பற்றிக்கொள்ளவேண்டிய தேசம் இன்னும் மகா விசாலமாக இருக்கிறது.
\s5
\v 2 மீதியாக இருக்கிற தேசம் எவைகளென்றால், எகிப்துக்கு எதிரான சீகோர் ஆறு துவங்கிக் கானானியர்களைச் சேர்ந்ததாக என்னப்படும் வடக்கே இருக்கிற எக்ரோனின் எல்லைவரையுள்ள பெலிஸ்தர்களின் எல்லா எல்லைகளும், கெசூரிம் முழுவதும்,
\v 3 காசா, அஸ்தோத், அஸ்கலோன், காத், எக்ரோன் என்கிற பட்டணங்களில் இருக்கிற பெலிஸ்தர்களுடைய ஐந்து அதிபதிகளின் நாடும், ஆவியர்களின் நாடும்,
\s5
\v 4 தெற்கே துவங்கி ஆப்பெக்வரை எமோரியர்கள் எல்லைவரை இருக்கிற கானானியர்களின் எல்லா தேசமும், சீதோனியர்களுக்கடுத்த மெயாரா நாடும்,
\v 5 கிப்லியர்களின் நாடும், சூரியன் உதயமாகும் திசையில் எர்மோன் மலையடிவாரத்தில் இருக்கிற பாகால்காத்முதல் ஆமாத்துக்குள் நுழையும்வரையுள்ள லீபனோன் முழுவதும்,
\s5
\v 6 லீபனோன் துவங்கி மிஸ்ரபோத்மாயீம்வரை மலைகளில் குடியிருக்கிற அனைவருடைய நாடும், சீதோனியர்களுடைய எல்லா நாடும்தானே. நான் அவர்களை இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் துரத்துவேன்; நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, நீ இஸ்ரவேலுக்குப் பங்குகளைக் கொடுக்கச் சீட்டுகளைப்போட்டு தேசத்தைப் பங்கிடவேண்டும்.
\v 7 ஆதலால் இந்த தேசத்தை ஒன்பது கோத்திரங்களுக்கும், மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்கும் சொந்தமாகும்படிப் பங்கிடு என்றார்.
\s1 யோர்தானுக்குக் கிழக்கேயுள்ள தேசத்தின் பிரிவுகள்
\p
\s5
\v 8 மனாசேயின் பாதிக்கோத்திரத்தார்களும் ரூபனியர்களும் காத்தியர்களும் தங்களுடைய பங்குகளை அடைந்து தீர்ந்தது; அதைக் கர்த்தரின் ஊழியக்காரனாகிய மோசே யோர்தானுக்கு மறுபுறத்தில் கிழக்கே அவர்களுக்குக் கொடுத்தான்.
\v 9 அர்னோன் ஆற்றங்கரையில் இருக்கிற ஆரோவேரும், நதியின் நடுவிலிருக்கிற பட்டணம் துவங்கி தீபோன்வரைக்கும் இருக்கிற மெதெபாவின் சமபூமி அனைத்தையும்,
\s5
\v 10 எஸ்போனிலிருந்து அம்மோனியர்களின் எல்லைவரை ஆட்சிசெய்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனுக்குரிய எல்லாப் பட்டணங்களையும்,
\v 11 கீலேயாத்தையும், கெசூரியர்கள் மாகாத்தியர்களுடைய எல்லையிலுள்ள நாட்டையும், எர்மோன் மலை முழுவதையும்,
\v 12 அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் ஆட்சிசெய்து, மோசே முறியடித்துத் துரத்தின இராட்சதர்களில் மீதியாக இருந்த பாசானின் ராஜாவாகிய ஓகுக்குச் சல்காவரையிருந்த பாசான் முழுவதையும் அவர்களுக்குக் கொடுத்தான்.
\s5
\v 13 இஸ்ரவேல் மக்களோ கெசூரியர்களையும் மாகாத்தியர்களையும் துரத்திவிடவில்லை, கெசூரியர்களும் மாகாத்தியர்களும் இந்தநாள்வரை இஸ்ரவேலின் நடுவில் குடியிருக்கிறார்கள்.
\s5
\v 14 லேவியர்களின் கோத்திரத்திற்குமட்டும் அவன் பங்கு கொடுக்கவில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குச் சொன்னபடியே, அவருடைய தகனபலிகளே அவர்களுடைய பங்கு.
\s5
\v 15 மோசே ரூபன் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களுக்குத்தக்கதாகப் பங்கு கொடுத்தான்.
\v 16 அர்னோன் ஆற்றங்கரையில் இருக்கிற ஆரோவேரும், ஆற்றின் நடுவிலிருக்கிற பட்டணம் துவங்கி மெதெபாவரையுள்ள சமபூமி முழுவதும்,
\s5
\v 17 சமபூமியில் இருக்கிற எஸ்போனும், அதின் எல்லாப் பட்டணங்களுமாகிய தீபோன், பாமோத்பாகால், பெத்பாகால் மெயோன்,
\v 18 யாகசா, கெதெமோத், மேபாகாத்,
\v 19 கீரியாத்தாயீம், சிப்மா, பள்ளத்தாக்கின் மலையிலுள்ள செரேத்சகார்,
\s5
\v 20 பெத்பேயோர், அஸ்தோத்பிஸ்கா, பெத்யெசிமோத் முதலான
\v 21 சமபூமியிலுள்ள எல்லாப் பட்டணங்களும், எஸ்போனில் ஆட்சிசெய்த சீகோன் என்னும் எமோரியர்களுடைய ராஜாவின் ராஜ்யம் முழுவதும் அவர்கள் எல்லைக்குள்ளானது; அந்தச் சீகோனையும், தேசத்திலே குடியிருந்து சீகோனின் அதிபதியாக இருந்த ஏவி, ரெக்கேம், சூர், ஊர், ரேபா என்னும் மீதியானின் பிரபுக்களையும் மோசே வெட்டிப்போட்டான்.
\s5
\v 22 இஸ்ரவேல் மக்கள் வெட்டின மற்றவர்களோடும், பேயோரின் மகனாகிய பாலாம் என்னும் குறிசொல்லுகிறவனையும் பட்டயத்தினால் வெட்டிப்போட்டார்கள்.
\v 23 அப்படியே யோர்தானும் அதற்கடுத்த பகுதியும் ரூபன் கோத்திரத்தின் எல்லையானது; இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் ரூபன் கோத்திரத்தார்களுக்கு, அவர்கள் வம்சங்களின்படி வந்த பங்கு.
\s5
\v 24 காத் கோத்திரத்திற்கு மோசே அவர்கள் வம்சங்களுக்குத் தகுந்தபடிக் கொடுத்தது என்னவென்றால்:
\v 25 யாசேரும், கீலேயாத்தின் எல்லாப் பட்டணங்களும், ரபாவுக்கு எதிரே இருக்கிற ஆரோவேர்வரையுள்ள அம்மோனியர்களின் பாதித் தேசமும்,
\v 26 எஸ்போன் துவங்கி ராமாத்மிஸ்பே வரை பெத்தொனீம் வரைக்கும் இருக்கிறதும், மகனாயீம் துவங்கி தெபீரின் எல்லைவரை இருக்கிறதும்,
\s5
\v 27 எஸ்போனின் ராஜாவாகிய சீகோனுடைய ராஜ்யத்தின் மற்றப் பகுதிகளாகிய பள்ளத்தாக்கில் இருக்கிற பெத்தாராமும், பெத்நிம்ராவும், சுக்கோத்தும் சாப்போனும், யோர்தான்வரை இருக்கிறதும், கிழக்கே யோர்தானின் கரையோரமாக கின்னரேத் கடலின் கடைசிவரைக்கும் இருக்கிறதும், அவர்கள் எல்லைக்குள்ளானது.
\v 28 இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் காத் கோத்திரத்தார்களுக்கு, அவர்களுடைய வம்சங்களின்படி வந்த பங்கு.
\s5
\v 29 மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்கும், மோசே அவர்களுடைய வம்சத்திற்குத் தகுந்தபடிக் கொடுத்தான்.
\v 30 மகனாயீம் துவங்கி, பாசானின் ராஜாவாகிய ஓகின் முழு ராஜ்யமாக இருக்கிற பாசான் முழுவதும், பாசானிலுள்ள யாவீரின் எல்லா ஊர்களுமான அறுபது பட்டணங்கள் அவர்களுடைய எல்லைக்குள்ளானது.
\v 31 பாதிக் கீலேயாத்தையும், பாசானிலே அஸ்தரோத், எத்ரேயி என்னும் ஓகு ராஜ்யத்தின் பட்டணங்களையும், மனாசேயின் மகனாகிய மாகீரின் மக்கள் பாதிபேருக்கு அவர்களுடைய வம்சங்களின்படியே கொடுத்தான்.
\s5
\v 32 மோசே கிழக்கே எரிகோவின் அருகே யோர்தானுக்கு அக்கரையில் இருக்கிற மோவாபின் சமவெளிகளில் பங்குகளாகக் கொடுத்தவைகள் இவைகளே.
\v 33 லேவி கோத்திரத்திற்கு மோசே பங்கு கொடுக்கவில்லை, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குச் சொல்லியிருந்தபடி, அவரே அவர்களுடைய பங்கு.
\s5
\c 14
\cl அத்தியாயம்– 14
\s1 யோர்தானுக்கு மேற்கேயுள்ள தேசத்தின் பிரிவுகள்
\p
\v 1 கானான் தேசத்திலே இஸ்ரவேல் மக்கள் சுதந்தரித்துக்கொண்ட தேசங்களை ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் மகனாகிய யோசுவாவும் இஸ்ரவேல் மக்களுடைய கோத்திரப் பிதாக்களின் தலைவர்களும், கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடி சீட்டுப்போட்டு,
\s5
\v 2 ஒன்பதரைக் கோத்திரங்களுக்கும் சொந்தமாகப் பங்கிட்டார்கள்.
\v 3 மற்ற இரண்டரைக் கோத்திரங்களுக்கும் மோசே யோர்தானுக்கு மறுபுறத்திலே பங்கு கொடுத்திருந்தான்; லேவியர்களுக்குமட்டும் அவர்கள் நடுவில் பங்கு கொடுக்கவில்லை.
\v 4 மனாசே மற்றும் எப்பிராயீம் என்பவர்கள் யோசேப்பின் இரண்டு கோத்திரங்களானார்கள்; ஆகவே அவர்கள் லேவியர்களுக்கு தேசத்திலே பங்குகொடுக்காமல், குடியிருக்கும்படி பட்டணங்களையும், அவர்களுடைய ஆடுமாடுகள் முதலான சொத்துக்காக வெளிநிலங்களைமட்டும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்.
\v 5 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி இஸ்ரவேல் மக்கள் செய்து, தேசத்தைப் பங்கிட்டார்கள்.
\s1 எபிரோன் காலேபுக்குக் கொடுக்கப்படுதல்
\p
\s5
\v 6 அப்பொழுது யூதாவின் கோத்திரத்தார்கள் கில்காலிலே யோசுவாவிடம் வந்தார்கள்; கேனாசியனான எப்புன்னேயின் மகனாகிய காலேப் அவனை நோக்கி: காதேஸ்பர்னெயாவிலே கர்த்தர் என்னைக்குறித்தும் உம்மைக்குறித்தும் தேவனுடைய மனிதனாகிய மோசேயிடம் சொன்ன வார்த்தையை நீர் அறிவீர்.
\v 7 தேசத்தை வேவுபார்க்கக் கர்த்தரின் ஊழியக்காரனாகிய மோசே என்னைக் காதேஸ்பர்னெயாவிலிருந்து அனுப்புகிறபோது, எனக்கு நாற்பது வயதாக இருந்தது; என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறுசெய்தி கொண்டுவந்தேன்.
\s5
\v 8 ஆனாலும் என்னோடு வந்த என் சகோதரர்கள் மக்களின் இருதயத்தைப் பயத்தினாலே கரையச்செய்தார்கள்; நானோ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாகப் பின்பற்றினேன்.
\v 9 அந்த நாளிலே மோசே: நீ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாகப் பின்பற்றினபடியினால், உன் கால் மிதித்த தேசம் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் சொந்தமாக இருக்கட்டும் என்று சொல்லி ஆணையிட்டார்.
\s5
\v 10 இப்போதும், இதோ, கர்த்தர் சொன்னபடியே என்னை உயிரோடு காத்தார்; இஸ்ரவேலர்கள் வனாந்திரத்தில் நடந்தபோது, கர்த்தர் அந்த வார்த்தையை மோசேயிடம் சொல்லி இப்பொழுது நாற்பத்தைந்து வருடங்கள் ஆனது; இதோ, இன்று நான் எண்பத்தைந்து வயதுள்ளவன்.
\v 11 மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்த பெலன் இந்தநாள்வரை எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாக இருக்கிறதற்கு அப்பொழுது எனக்கு இருந்த பெலன் இப்பொழுதும் எனக்கு இருக்கிறது.
\s5
\v 12 ஆகவே கர்த்தர் அந்த நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்குத்தாரும்; அங்கே ஏனாக்கியர்களும், பாதுகாப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்த நாளிலே கேள்விப்பட்டீரே; கர்த்தர் என்னோடு இருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன் என்றான்.
\s5
\v 13 அப்பொழுது யோசுவா: எப்புன்னேயின் மகனாகிய காலேபை ஆசீர்வதித்து, எபிரோனை அவனுக்குப் பங்காகக் கொடுத்தான்.
\v 14 ஆகவே கேனாசியனான எப்புன்னேயின் மகனாகிய காலேப் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை உத்தமமாகப் பின்பற்றினபடியினால், இந்த நாள்வரை இருக்கிறபடி, எபிரோன் அவனுக்குச் சொந்தமானது.
\v 15 முன்னே எபிரோனுக்குக் கீரியாத் அர்பா என்ற பெயர் இருந்தது; அர்பா என்பவன் ஏனாக்கியர்களுக்குள்ளே பெரிய மனிதனாக இருந்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாக இருந்தது.
\s5
\c 15
\cl அத்தியாயம்– 15
\s1 யூதா கோத்திரத்தார்களின் பங்கு
\p
\v 1 யூதா கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குவீதமாவது: ஏதோமின் எல்லைக்கு அருகே உள்ள சீன்வனாந்திரமே தென்பகுதியின் கடைசி எல்லை.
\v 2 தென்பகுதியான அவர்களுடைய எல்லை உப்புக்கடலின் கடைசியில் தெற்கு நோக்கி இருக்கிற முனைதுவங்கி,
\s5
\v 3 தென்பகுதியில் இருக்கிற அக்ராபீமின் மேடுகளுக்கும், அங்கேயிருந்து சீனுக்கும் போய், தெற்கே இருக்கிற காதேஸ்பர்னெயாவுக்கு ஏறி, எஸ்ரோனைக் கடந்து, ஆதாருக்கு ஏறி, கர்க்காவைச் சுற்றிப் போய்,
\v 4 அஸ்மோனுக்கும், அங்கேயிருந்து எகிப்தின் ஆற்றுக்கும் சென்று, கடல்வரைக்கும் போய் முடியும்; இதுவே உங்களுடைய தென்பகுதிக்கு எல்லையாக இருக்கும் என்றான்.
\s5
\v 5 கிழக்கு எல்லையானது, யோர்தான் நதியின் ஆரம்பம்வரை இருக்கிற உப்புக்கடல். வடபுறமான எல்லை, யோர்தான் நதியின் ஆரம்பம் இருக்கிற கடலின் முனைதுவங்கி,
\v 6 பெத்எக்லாவுக்கு ஏறி, வடக்கே இருக்கிற பெத்அரபாவைக் கடந்து, ரூபனின் மகனாகிய போகனின் கல்லுக்கு ஏறிப்போய்,
\s5
\v 7 பிறகு ஆகோர் பள்ளத்தாக்கைவிட்டுத் தெபீருக்கு ஏறி, வடக்கே ஆற்றின் தென்புறமான அதும்மீமின் மேட்டுக்கு முன்பாக இருக்கிற கில்காலுக்கு நேராகவும், அங்கேயிருந்து என்சேமேசின் நீரூற்றுவரைக்கும் போய், ரொகேல் என்னும் கிணற்றுக்குச் சென்று,
\v 8 பிறகு எபூசியர்கள் குடியிருக்கிற எருசலேமுக்குத் தென்புறமாக இன்னோமுடைய மகனின் பள்ளத்தாக்கைக் கடந்து, வடக்கே இருக்கிற இராட்சதர்களுடைய பள்ளத்தாக்கின் கடைசியில் மேற்காக இன்னோம் பள்ளத்தாக்கின் முன்னிருக்கிற மலையின் உச்சிவரை ஏறிப்போய்,
\s5
\v 9 அந்த மலையின் உச்சியிலிருந்து நெப்தோவாவின் நீரூற்றுக்குப் போய், எப்பெரோன் மலையின் பட்டணங்களுக்குச் சென்று, கீரியாத்யெயாரீமாகிய பாலாவுக்குப் போய்,
\v 10 பாலாவிலிருந்து மேற்கே சேயீர் மலைக்குத் திரும்பி, வடக்கே இருக்கிற கெசலோனாகிய யெயாரீம் மலைக்குப் பக்கமாகப் போய், பெத்ஷிமேசுக்கு இறங்கி, திம்னாவுக்குப் போய்,
\s5
\v 11 பின்பு வடக்கே இருக்கிற எக்ரோனுக்குப் பக்கமாகச் சென்று, சிக்ரோனுக்கு ஓடி, பாலாமலையைக் கடந்து, யாப்னியேலுக்குச் சென்று, கடலிலே முடியும்.
\v 12 மேற்கு எல்லை, பெரிய சமுத்திரமே; இது யூதா கோத்திரத்தார்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலுமிருக்கும் எல்லை.
\s5
\v 13 எப்புன்னேயின் மகனாகிய காலேபுக்கு, யோசுவா, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடி, ஏனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனை யூதா கோத்திரத்தின் நடுவே பங்காகக் கொடுத்தான்.
\v 14 அங்கேயிருந்த சேசாய், அகீமான், தல்மாய் என்னும் ஏனாக்கின் மூன்று மகன்களையும் காலேப் துரத்திவிட்டு,
\v 15 அங்கேயிருந்து தெபீரின் குடிகளிடத்திற்குப் போனான்; முற்காலத்திலே தெபீரின் பெயர் கீரியாத்செப்பேர்.
\s5
\v 16 கீரியாத்செப்பேரை அழித்துக் கைப்பற்றுகிறவனுக்கு, என் மகளாகிய அக்சாளைத் திருமணம் செய்துகொடுப்பேன் என்று காலேப் சொன்னான்.
\v 17 அப்பொழுது காலேபின் சகோதரனாகிய கேனாசின் மகன் ஒத்னியேல் அதைக் கைப்பற்றினான்; எனவே, தன் மகள் அக்சாளை அவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தான்.
\s5
\v 18 அவள் புறப்படும்போது, என் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று அவனிடம் அனுமதி பெற்றுக்கொண்டு, கழுதையின்மேலிருந்து இறங்கினாள். காலேப் அவளைப் பார்த்து: உனக்கு என்னவேண்டும் என்றான்.
\s5
\v 19 அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; எனக்கு வறட்சியான நிலத்தைத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலத்தையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது அவளுக்கு மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.
\s5
\v 20 யூதா கோத்திரத்தார்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்கு என்னவென்றால்:
\s5
\v 21 தென்புறத்தின் கடைசியான ஏதோமின் எல்லைக்கு நேராக, யூதா கோத்திரத்திற்குக் கிடைத்த பட்டணங்களாவன: கப்செயேல், ஏதேர், யாகூர்,
\v 22 கீனா. திமோனா, ஆதாதா,
\v 23 கேதேஸ், ஆத்சோர், இத்னான்,
\v 24 சீப், தேலெம், பெயாலோத்,
\s5
\v 25 ஆத்சோர், அதாத்தா, கீரியோத், எஸ்ரோன் என்னும் ஆத்சோர்,
\v 26 ஆமாம், சேமா, மொலாதா,
\v 27 ஆத்சார்காதா, எஸ்மோன், பெத்பாலேத்,
\v 28 ஆத்சார்சுவால், பெயர்செபா, பிஸ்யோத்யா,
\s5
\v 29 பாலா, ஈயிம், ஆத்சேம்,
\v 30 எல்தோலாத், கெசீல், ஒர்மா,
\v 31 சிக்லாக், மத்மன்னா, சன்சன்னா,
\v 32 லெபாயோத், சில்லீம், ஆயின், ரிம்மோன் என்பவைகள்; எல்லாப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட இருபத்தொன்பது.
\s5
\v 33 பள்ளத்தாக்கு நாட்டில் எஸ்தாவோல், சோரியா, அஷ்னா,
\v 34 சனோகா, என்கன்னீம், தப்புவா, ஏனாம்,
\v 35 யர்மூத், அதுல்லாம், சோக்கோ, அசேக்கா,
\v 36 சாராயீம், அதித்தாயீம், கெதேரா, கேதெரொத்தாயீம்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட பதினான்கு.
\s5
\v 37 சேனான், அதாஷா, மிக்தால்காத்,
\v 38 திலியான், மிஸ்பே, யோக்தெயேல்,
\v 39 லாகீஸ், போஸ்காத், எக்லோன்,
\s5
\v 40 காபோன், லகமாம், கித்லீஷ்,
\v 41 கெதெரோத், பெத்டாகோன், நாகமா, மக்கேதா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட பதினாறு.
\s5
\v 42 லிப்னா, ஏத்தேர், ஆஷான்,
\v 43 இப்தா, அஸ்னா, நெத்சீப்,
\v 44 கேகிலா, அக்சீப், மரேஷா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட ஒன்பது.
\s5
\v 45 எக்ரோனும் அதின் வெளிநிலங்களும் கிராமங்களும்,
\v 46 எக்ரோன் துவங்கிச் சமுத்திரம்வரை, அஸ்தோத்தின் பகுதியில் இருக்கிற எல்லா ஊர்களும், அவைகளின் கிராமங்களும்,
\v 47 அஸ்தோத்தும், அதின் வெளிநிலங்களும் கிராமங்களும், காசாவும் எகிப்தின் நதிவரையிருக்கிற அதின் வெளிநிலங்களும் கிராமங்களுமே; பெரிய சமுத்திரமே எல்லை.
\s5
\v 48 மலைகளில் சாமீர், யாத்தீர், சோக்கோ,
\v 49 தன்னா, தெபீர் என்னப்பட்ட கீரியாத்சன்னா,
\v 50 ஆனாப், எஸ்தெமொ, ஆனீம்,
\v 51 கோசேன், ஓலோன், கிலொ; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட பதினொன்று.
\s5
\v 52 அராப், தூமா, எஷியான்,
\v 53 யானூம், பெத்தப்புவா, ஆப்பெக்கா,
\v 54 உம்தா, எபிரோனாகிய கீரியாத் அர்பா, சீயோர்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட ஒன்பது.
\s5
\v 55 மாகோன், கர்மேல், சீப், யுத்தா,
\v 56 யெஸ்ரயேல், யொக்தெயாம், சனோகா,
\v 57 காயின், கிபியா, திம்னா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்படப் பத்து.
\s5
\v 58 அல்கூல், பெத்சூர், கெதோர்,
\v 59 மகாராத், பெதானோத், எல்தெகோன்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட ஆறு.
\s5
\v 60 கீரியாத்யெயாரீமாகிய கீரியாத்பாகால், ரபா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட இரண்டு.
\v 61 வனாந்திரத்தில், பெத்அரபா, மித்தீன், செக்காக்கா,
\v 62 நிப்சான், உப்புப்பட்டணம், என்கேதி; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட ஆறு.
\s5
\v 63 எருசலேமிலே குடியிருந்த எபூசியர்களை யூதா கோத்திரத்தார்கள் துரத்திவிடமுடியாமல்போனது; ஆகவே இந்த நாள்வரை எபூசியர்கள் யூதா கோத்திரத்தார்களோடு எருசலேமிலே குடியிருக்கிறார்கள்.
\s5
\c 16
\cl அத்தியாயம்– 16
\s1 மனாசே மற்றும் எப்பிராயீமியர்களின் பங்கு
\p
\v 1 யோசேப்பின் கோத்திரத்தார்களுக்கு விழுந்த சீட்டினால் கிடைத்த பங்குவீதமாவது: எரிகோவின் அருகே இருக்கிற யோர்தானிலிருந்து, யோர்தானுக்குக் கிழக்கான நீரூற்றுக்குப் போய், எரிகோ துவங்கிப் பெத்தேலின் மலைகள்வரையுள்ள வனாந்திர வழியாகவும் சென்று,
\v 2 பெத்தேலிலிருந்து லூசுக்குப் போய், அர்கீயினுடைய எல்லையாகிய அதரோத்தைக் கடந்து,
\s5
\v 3 மேற்கே யப்லெத்தியர்களின் எல்லைக்கும் தாழ்வான பெத்தொரோன் காசேர் என்னும் எல்லைகள்வரை இறங்கி, சமுத்திரம்வரைக்கும் போய் முடியும்.
\v 4 இதை யோசேப்பின் கோத்திரங்களாகிய மனாசேயும் எப்பிராயீமும் சுதந்தரித்தார்கள்.
\s5
\v 5 எப்பிராயீம் கோத்திரத்தார்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்கினுடைய கிழக்கு எல்லை அதரோத் அதார் துவங்கி, மேலான பெத்தொரோன்வரை போகிறது.
\v 6 மேற்கு எல்லை மிக்மேத்தாத்திற்கு வடக்காகச் சென்று, கிழக்கே தானாத்சீலோவுக்குத் திரும்பி, அதை யநோகாவுக்குக் கிழக்காகக் கடந்து,
\v 7 யநோகாவிலிருந்து அதரோத்திற்கும் நகராத்திற்கும் இறங்கி, எரிகோவின் அருகே வந்து, யோர்தானுக்குச் செல்லும்.
\s5
\v 8 தப்புவாவிலிருந்து மேற்கு எல்லை, கானா நதிக்குப் போய், சமுத்திரத்திலே முடியும்; இது எப்பிராயீம் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி உண்டான பங்கு.
\v 9 பின்னும் எப்பிராயீம் கோத்திரத்தார்களுக்குப் பிரத்தியேகமாகக் கொடுக்கப்பட்ட பட்டணங்களும் அவைகளின் கிராமங்கள் எல்லாம் மனாசே கோத்திரத்தார்களுடைய பங்கின் நடுவில் இருக்கிறது.
\s5
\v 10 அவர்கள் காசேரிலே குடியிருந்த கானானியர்களைத் துரத்திவிடவில்லை; ஆகவே கானானியர்கள், இந்த நாள்வரை இருக்கிறபடி, எப்பிராயீமர்களுக்குள்ளே குடியிருந்து, கட்டாய வேலைக்காரர்களாக்கப்பட்டார்கள்.
\s5
\c 17
\cl அத்தியாயம்– 17
\s1 யோசேப்பின் வம்சத்தார்களின் பங்குகள்
\p
\v 1 மனாசே கோத்திரத்திற்கும் பங்கு கிடைத்தது; அவன் யோசேப்புக்குத் தலைப்பிள்ளையானவன்; மனாசேயின் மூத்தமகனும் கிலெயாத்தின் தகப்பனுமான மாகீர் யுத்தமனிதனானபடியினால், கீலேயாத்தும், பாசானும் அவனுக்குக் கிடைத்தது.
\v 2 அபியேசரின் கோத்திரத்தார்களும், ஏலேக்கின் கோத்திரத்தார்களும், அஸ்ரியேலின் கோத்திரத்தார்களும், செகேமின் கோத்திரத்தார்களும், எப்பேரின் கோத்திரத்தார்களும், செமீதாவின் கோத்திரத்தார்களுமான மனாசேயினுடைய மற்ற மகன்களின் கோத்திரத்தார்களாகிய அபியேசரின் வம்சங்களுக்குத் தகுந்த பங்குகள் கொடுக்கப்பட்டது. தங்கள் வம்சங்களுக்குள்ளே அவர்களே யோசேப்பின் மகனாகிய மனாசேயின் ஆண்பிள்ளைகளாக இருந்தார்கள்.
\s5
\v 3 மனாசேயின் மகனாகிய மாகீருக்குப் பிறந்த கிலெயாத்தின் மகனாகிய எப்பேரின் மகன் செலொப்பியாத்துக்கு மகள்கள் தவிர மகன்கள் இல்லை; மகள்களின் பெயர்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவைகள்.
\v 4 அவர்கள் ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் நூனின் மகனாகிய யோசுவாவுக்கும் பிரபுக்களுக்கும் முன்பாகச் சேர்ந்துவந்து: எங்களுடைய சகோதரர்கள் நடுவே எங்களுக்குப் பங்குகள் கொடுக்கும்படி கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டார் என்றார்கள்; ஆகவே அவர்களுடைய தகப்பனுடைய சகோதரர்களின் நடுவே, கர்த்தருடைய கட்டளையின்படி, அவர்களுக்குப் பங்குகளைக் கொடுத்தான்.
\s5
\v 5 யோர்தானுக்கு மறுபுறத்திலே இருக்கிற கீலேயாத், பாசான் என்னும் தேசங்கள் அல்லாமல், மனாசேக்குச் சீட்டிலே விழுந்தது பத்துப் பங்குகளாகும்.
\v 6 மனாசேயின் மகள்கள் அவனுடைய மகன்களோடு பங்குகளைப் பெற்றார்கள்; மனாசேயின் மற்றக் கோத்திரத்தார்களுக்கு கீலேயாத் தேசம் கிடைத்தது.
\s5
\v 7 மனாசேயின் எல்லை, ஆசேர் துவங்கி சீகேமின் முன்னிருக்கிற மிக்மேத்தாவுக்கும், அங்கேயிருந்து வலதுபுறமாக என்தப்புவாவின் குடிகளிடத்திற்கும் போகிறது.
\v 8 தப்புவாவின் நிலம் மனாசேக்குக் கிடைத்தது; மனாசேயின் எல்லையோடு இருக்கிற தப்புவாவோ, எப்பிராயீம் கோத்திரத்தின் வசமானது.
\s5
\v 9 பிறகு அந்த எல்லை கானா என்னும் ஆற்றுக்குப் போய், ஆற்றுக்குத் தெற்காக இறங்குகிறது; மனாசேயினுடைய பட்டணங்களின் நடுவில் இருக்கிற அவ்விடத்துப் பட்டணங்கள் எப்பிராயீமுடையவைகள்; மனாசேயின் எல்லை ஆற்றுக்கு வடக்கேயிருந்து சமுத்திரத்திற்குப் போய் முடியும்.
\v 10 தென்நாடு எப்பிராயீமுடையது; வடநாடு மனாசேயினுடையது; சமுத்திரம் அதின் எல்லை; அது வடக்கே ஆசேரையும், கிழக்கே இசக்காரையும் தொடுகிறது.
\s5
\v 11 இசக்காரிலும் ஆசேரிலும் இருக்கிற மூன்று நாடுகளாகிய பெத்செயானும் அதின் கிராமங்களும், இப்லெயாமும் அதின் கிராமங்களும், தோரின் குடிகளும் அதின் கிராமங்களும் எந்தோரின் குடிகளும் அதின் கிராமங்களும், தானாகின் குடிகளும் அதின் கிராமங்களும் மெகிதோவின் குடிகளும் அதின் கிராமங்களும் மனாசேயினுடையவைகள்.
\v 12 மனாசேயின் கோத்திரத்தார்கள் அந்தப் பட்டணங்களின் குடிகளைத் துரத்திவிட முடியாமல்போனது; கானானியர்கள் அந்தப் பகுதியிலே குடியிருக்கவேண்டுமென்று இருந்தார்கள்.
\s5
\v 13 இஸ்ரவேல் மக்கள் பலத்து பெருகினபோதும், கானானியர்களை முழுவதும் துரத்திவிடாமல், அவர்களைக் கட்டாய வேலைக்காரர்களாக்கிக்கொண்டார்கள்.
\s5
\v 14 யோசேப்பின் சந்ததியினர் யோசுவாவை நோக்கி: கர்த்தர் எங்களை இதுவரைக்கும் ஆசீர்வதித்து வந்ததினால், நாங்கள் எண்ணிக்கையில் பெருகினவர்களாக இருக்கிறோம்; நீர் எங்களுக்குச் சொந்தமாக ஒரே அளவையும் ஒரே பங்கையும் கொடுத்தது என்ன என்று கேட்டார்கள்.
\v 15 அதற்கு யோசுவா: நீங்கள் எண்ணிக்கையில் பெருகினவர்களாகவும், எப்பிராயீம் மலைகள் உங்களுக்கு நெருக்கமாகவும் இருந்தால், பெரிசியர்கள் ரெப்பாயீமியர்கள் குடியிருக்கிற மலைதேசத்திற்குப் போய் உங்களுக்கு இடம் உண்டாக்கிக்கொள்ளுங்கள் என்றான்.
\s5
\v 16 அதற்கு யோசேப்பின் சந்ததியினர்: மலைகள் எங்களுக்குப் போதாது; பள்ளத்தாக்கு நாட்டிலிருக்கிற பெத்செயானிலும், அதின் கிராமங்களிலும், யெஸ்ரயேல் பள்ளத்தாக்கிலும் குடியிருக்கிற எல்லாக் கானானியர்களிடமும் இரும்பு இரதங்கள் உண்டு என்றார்கள்.
\v 17 யோசுவா, யோசேப்பு வம்சத்தார்களாகிய எப்பிராயீமியர்களையும் மனாசேயர்களையும் நோக்கி: நீங்கள் எண்ணிக்கையில் பெருகினவர்கள், உங்களுக்கு மகா பராக்கிரமமும் உண்டு, ஒரு பங்குமட்டும் அல்ல, மலைத்தேசமும் உங்களுடையதாகும்.
\v 18 அது காடாக இருக்கிறபடியினாலே, அதை வெட்டிச் சீர்படுத்துங்கள், அப்பொழுது அதின் கடைசிவரைக்கும் உங்களுடையதாக இருக்கும்; கானானியர்களுக்கு இரும்பு ரதங்கள் இருந்தாலும், அவர்கள் பலத்தவர்களாக இருந்தாலும், நீங்கள் அவர்களைத் துரத்திவிடுவீர்கள் என்றான்.
\s5
\c 18
\cl அத்தியாயம்– 18
\s1 மீதமுள்ள தேசத்தின் பிரிவுகள்
\p
\v 1 இஸ்ரவேல் மக்களின் சபையெல்லாம் சீலோவிலே கூடி, அங்கே ஆசரிப்புக் கூடாரத்தை அமைத்தார்கள். தேசம் அவர்களின் வசமானது.
\v 2 இஸ்ரவேல் மக்களில் தங்களுடைய பங்குகளை இன்னும் பங்கிட்டுக்கொள்ளாத ஏழு கோத்திரங்கள் இருந்தன.
\s5
\v 3 ஆகவே யோசுவா இஸ்ரவேல் மக்களை நோக்கி: உங்களுடைய பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு, நீங்கள் எதுவரைக்கும் அசதியாக இருப்பீர்கள்.
\v 4 கோத்திரத்திற்கு மும்மூன்று மனிதர்களைத் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்கள் எழுந்து புறப்பட்டு, தேசத்திலே சுற்றித்திரிந்து அதைத் தங்கள் பங்குகளுக்குத்தக்கதாக விபரமாக எழுதி, என்னிடம் கொண்டுவரும்படி அவர்களை அனுப்புவேன்.
\s5
\v 5 அதை ஏழு பங்குகளாகப் பங்கிடுவார்கள்; யூதா வம்சத்தார்கள் தெற்கே இருக்கிற தங்களுடைய எல்லையிலும், யோசேப்பு வம்சத்தார்கள் வடக்கே இருக்கிற தங்களுடைய எல்லையிலும் நிலைத்திருக்கட்டும்.
\v 6 நீங்கள் தேசத்தை ஏழு பங்குகளாக விவரித்து எழுதி, இங்கே என்னிடம் கொண்டுவாருங்கள்; அப்பொழுது இந்த இடத்திலே நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகச் சீட்டுப்போடுவேன்.
\s5
\v 7 லேவியர்களுக்கு உங்கள் நடுவே பங்கு இல்லை; கர்த்தருடைய ஆசாரியத்துவமே அவர்களின் பங்கு; காத்தும் ரூபனும் மனாசேயின் பாதிக் கோத்திரமும் யோர்தானுக்கு மறுபுறத்திலே கிழக்கே கர்த்தரின் ஊழியக்காரனாகிய மோசே தங்களுக்குக் கொடுத்த தங்கள் பங்குகளைப் பெற்றுவிட்டார்கள் என்றான்.
\s5
\v 8 அப்பொழுது அந்த மனிதர்கள் எழுந்து புறப்பட்டுப்போனார்கள்; தேசத்தைக் குறித்து விபரம் எழுதப்போகிறவர்களை யோசுவா நோக்கி: நீங்கள் போய், தேசத்திலே சுற்றித்திரிந்து, அதின் விபரத்தை எழுதி, என்னிடம் திரும்பிவாருங்கள்; அப்பொழுது இங்கே சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகச் சீட்டுப்போடுவேன் என்று சொன்னான்.
\v 9 அந்த மனிதர்கள் போய், தேசம் எங்கும் அந்தந்தப் பட்டணங்களின்படியே ஏழுபங்குகளாக ஒரு புத்தகத்தில் எழுதிக்கொண்டு, சீலோவில் இருக்கிற முகாமிலே யோசுவாவிடத்திற்கு வந்தார்கள்.
\s5
\v 10 அப்பொழுது யோசுவா அவர்களுக்காகச் சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில் சீட்டுப்போட்டு, அங்கே இஸ்ரவேல் மக்களின் பங்குவீதப்படி அவர்களுக்கு தேசத்தைப் பங்கிட்டான்.
\s1 பென்யமீன் கோத்திரத்தார்களின் பங்கு
\p
\s5
\v 11 பென்யமீன் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படியே அவர்களுக்குச் சீட்டு விழுந்தது; அவர்கள் பங்கு வீதத்தின் எல்லையானது யூதா வம்சத்தார்களுக்கும் யோசேப்பு வம்சத்தார்களுக்கும் நடுவில் இருந்தது.
\v 12 அவர்களுடைய வட எல்லை, யோர்தானிலிருந்து வந்து, எரிகோவிற்கு வடக்குப் பக்கமாகச் சென்று, அதன்பின் மேற்கே மலையில் ஏறி, பெத்தாவேன் வனாந்திரத்தில் போய் முடியும்.
\s5
\v 13 அங்கேயிருந்து அந்த எல்லை, பெத்தேலாகிய லூசுக்கு வந்து, லூசுக்குத் தெற்குப் பக்கமாகப் போய், அதரோத்அதாருக்குக் கீழே உள்ள பெத்தொரோனுக்குத் தெற்கே இருக்கிற மலையருகே இறங்கும்.
\v 14 அங்கேயிருந்து எல்லை மேற்குமூலைக்குப் பெத்தொரோனுக்கு எதிரே தெற்காக இருக்கிற மலைக்குத் தென்புறமாகப் போய்த் திரும்பி, கீரியாத்பாகால் என்னப்பட்ட யூதா கோத்திரத்தார்களின் பட்டணமாகிய கீரியாத்யெயாரீம் அருகே போய் முடியும்; இது மேற்கு எல்லை.
\s5
\v 15 தென் எல்லை கீரியாத்யெயாரீமின் முடிவில் இருக்கிறது; அங்கேயிருந்து எல்லை மேற்கே போய், நெப்தோவாவின் நீரூற்றிற்குச் சென்று,
\v 16 அங்கேயிருந்து இராட்சதர்களின் பள்ளத்தாக்கில் வடக்கே இருக்கிற இன்னோமுடைய மகன்களின் பள்ளத்தாக்கிற்கு எதிரான மலையடிவாரத்திற்கு இறங்கி, அப்புறம் தெற்கே எபூசியர்களுக்குப் பக்கமான இன்னோமின் பள்ளத்தாக்கிற்கும், அங்கேயிருந்து என்ரொகேலுக்கும் இறங்கிவந்து,
\s5
\v 17 வடக்கே போய், என்சேமேசுக்கும், அங்கேயிருந்து அதும்மீம் மேட்டுக்கு எதிரான கெலிலோத்திற்கும், அங்கேயிருந்து ரூபனின் மகனாகிய போகனின் கல்லிடம் இறங்கிவந்து,
\v 18 அராபாவுக்கு எதிரான வடக்குப்பக்கமாகப் போய், அராபாவுக்கு இறங்கும்.
\s5
\v 19 அப்புறம் அந்த எல்லை, பெத்ஓக்லாவுக்கு வடக்குப்பக்கமாகப் போய், யோர்தானின் தெற்கான உப்புக்கடலின் வடக்கு முனையிலே முடிந்துபோகும்; இது தென் எல்லை.
\v 20 கிழக்குப்புறத்தின் எல்லை யோர்தானே; இது பென்யமீன் கோத்திரத்தார்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலும் இருக்கிற எல்லைகளுக்குள்ளான பங்குகள்.
\s5
\v 21 பென்யமீன் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி இருக்கிற பட்டணங்களாவன: எரிகோ, பெத்ஓக்லா, கேசீஸ் பள்ளத்தாக்கு,
\v 22 பெத்அரபா, செமராயிம், பெத்தேல்,
\v 23 ஆவீம், பாரா. ஓப்ரா,
\v 24 கேப்பார்அமோனாய், ஒப்னி, காபா என்னும் பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.
\s5
\v 25 கிபியோன், ராமா, பேரோத்,
\v 26 மிஸ்பே, கெப்பிரா, மோத்சா,
\v 27 ரெக்கேம், இர்பெயெல், தாராலா,
\v 28 சேலா, ஏலேப், எருசலேமாகிய எபூசி, கீபெயாத், கீரேயாத் என்னும் பதினான்கு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே; பென்யமீன் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி இருக்கிற பங்குகள் இவைகளே.
\s5
\c 19
\cl அத்தியாயம்– 19
\s1 சிமியோன் கோத்திரத்தார்களின் பங்கு
\p
\v 1 இரண்டாம் சீட்டு சிமியோனுக்கு விழுந்தது; சிமியோன் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த பங்கு, யூதா கோத்திரத்தார்களுடைய பங்குகளின் நடுவே இருக்கிறது.
\s5
\v 2 அவர்களுக்குச் சொந்தமாகக் கிடைத்த பட்டணங்களாவன: பெயெர்செபா, சேபா, மொலாதா,
\v 3 ஆசார்சூகால், பாலா, ஆத்சேம்,
\v 4 எல்தோலாத், பெத்தூல், ஒர்மா,
\s5
\v 5 சிக்லாக், பெத்மார்காபோத், ஆத்சார்சூசா,
\v 6 பெத்லெபாவோத், சருகேன் பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும் உட்பட பதிமூன்று.
\v 7 மேலும் ஆயின், ரிம்மோன். எத்தேர், ஆசான் என்னும் நான்கு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.
\s5
\v 8 இந்தப் பட்டணங்களைச் சுற்றிலும் பாலாத்பெயேர்மட்டும், தெற்கே இருக்கிற ராமாத்வரை இருக்கிற எல்லாக் கிராமங்களுமே; இவை சிமியோன் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த பங்கு.
\v 9 சிமியோன் கோத்திரத்தார்களுடைய பங்கு யூதா கோத்திரத்தார்களின் பங்குவீதத்திற்குள் இருக்கிறது; யூதா கோத்திரத்தார்களின் பங்கு அவர்களுக்கு மிகுதியாக இருந்தபடியால், சிமியோன் கோத்திரத்தார் அவர்களுடைய பங்குகளின் நடுவிலே பங்குகளைப் பெற்றார்கள்.
\s1 செபுலோன் கோத்திரத்தார்களின் பங்கு
\p
\s5
\v 10 மூன்றாம் சீட்டு செபுலோன் கோத்திரத்தார்களுக்கு விழுந்தது; அவர்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த சொந்தமான பங்குவீதம் சாரீத் வரை உள்ளது.
\v 11 அவர்களுடைய எல்லை மேற்கே மாராலாவுக்கு ஏறி, தாபசேத்திற்கு வந்து, யொக்கினேயாமுக்கு எதிரான ஆற்றுக்குப் போகும்.
\s5
\v 12 சாரீதிலிருந்து அது கிழக்கே சூரியன் உதிக்கும் முனையாய்க் கிஸ்லோத்தாபோரின் எல்லையினிடத்திற்குத் திரும்பி, தாபராத்திற்குச் சென்று, யப்பியாவுக்கு ஏறி,
\v 13 அங்கேயிருந்து கிழக்குப்புறத்திலே கித்தாஏபேரையும் இத்தாகாத்சீனையும் கடந்து, ரிம்மோன்மெத்தோவாருக்கும் நேயாவுக்கும் போகும்.
\s5
\v 14 அப்புறம் அந்த எல்லை வடக்கே அன்னத்தோனுக்குத் திரும்பி, இப்தாவேலின் பள்ளத்தாக்கிலே முடியும்.
\v 15 காத்தாத், நகலால், சிம்ரோன், இதாலா, பெத்லகேம் முதலான பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும்,
\v 16 செபுலோன் கோத்திரத்தார்களுக்கு, அவர்களுடைய வம்சங்களின்படி, கிடைத்த பங்குகள் ஆகும்.
\s1 இசக்கார் கோத்திரத்தார்களின் பங்கு
\p
\s5
\v 17 நாலாம் சீட்டு இசக்காருக்கு விழுந்தது.
\v 18 இசக்கார் கோத்திரத்தார்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த எல்லை, யெஸ்ரயேல், கெசுல்லோத், சூனேம்,
\v 19 அப்பிராயீம், சீகோன் அனாகராத்,
\s5
\v 20 ராப்பித், கிஷியோன், அபெத்ஸ்,
\v 21 ரெமேத், என்கன்னீம், என்காதா, பெத்பாத்செஸ் இவைகளே.
\v 22 அப்புறம் அந்த எல்லை தாபோருக்கும், சகசீமாவுக்கும், பெத்ஷிமேசுக்கும் வந்து யோர்தானிலே முடியும்; அதற்குள் பதினாறு பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உண்டு.
\s5
\v 23 இந்தப் பட்டணங்களும் இவைகளைச்சேர்ந்த கிராமங்களும் இசக்கார் கோத்திரத்திற்கு, அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த பங்கு ஆகும்.
\s1 ஆசேர் கோத்திரத்தார்களின் பங்கு
\p
\s5
\v 24 ஐந்தாம் சீட்டு ஆசேர் கோத்திரத்தார்களுக்கு விழுந்தது.
\v 25 அவர்களுடைய வம்சங்களின்படி அவர்களுக்குக் கிடைத்த எல்லை, எல்காத், ஆலி, பேதேன், அக்சாப்,
\v 26 அலம்மேலெக், ஆமாத், மிஷயால் இவைகளே; பின்பு அது மேற்கே கர்மேலுக்கும் சீகோர்லிப்னாத்திற்கும் சென்று,
\s5
\v 27 கிழக்கே பெத்தாகோனுக்குத் திரும்பி, செபுலோனுக்கு வடக்கே இருக்கிற இப்தாவேலின் பள்ளத்தாக்கிற்கும் பெத்தேமேக்கிற்கும் நேகியெலிற்கும் வந்து, இடதுபுறமான காபூலிற்கும்,
\v 28 எபிரோனிற்கும், ரேகோபிற்கும், அம்மோனிற்கும், கானாவிற்கும், பெரிய சீதோன்வரைக்கும் போகும்.
\s5
\v 29 அப்புறம் அந்த எல்லை ராமாவிற்கும் தீரு என்னும் பாதுகாப்பான பட்டணம்வரைத் திரும்பும்; பின்பு அந்த எல்லை ஓசாவிற்குத் திரும்பி, அக்சீபின் எல்லை ஓரத்தில் உள்ள சமுத்திரத்திலே முடியும்.
\v 30 உம்மாவும், ஆப்பெக்கும், ரேகோபும் அதற்கு அடுத்திருக்கிறது; இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் இருபத்திரண்டு.
\s5
\v 31 இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் ஆசேர் கோத்திரத்திற்கு, அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த பங்குகள் ஆகும்.
\s1 நப்தலி கோத்திரத்தார்களின் பங்கு
\p
\s5
\v 32 ஆறாம் சீட்டு நப்தலி கோத்திரத்தார்களுக்கு விழுந்தது.
\v 33 நப்தலி கோத்திரத்தார்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த எல்லை, ஏலேப்பிலும், சானானிமிலுள்ள அல்லோனிலுமிருந்து வந்து, ஆதமி, நெக்கேபின் மேலும் யாப்னியேலின்மேலும், லக்கூம்வரைக்கும் போய், யோர்தானில் முடியும்.
\v 34 அப்புறம் அந்த எல்லை மேற்கே அஸ்னோத்தாபோருக்குத் திரும்பி, அங்கேயிருந்து உக்கோகக்கிற்குச் சென்று, தெற்கே செபுலோனையும், மேற்கே ஆசேரையும் சூரியோதயப்புறத்திலே யோர்தானிலே யூதாவையும் சேர்ந்து வரும்.
\s5
\v 35 பாதுகாப்பான பட்டணங்களாவன: சீத்திம், சேர், அம்மாத், ரக்காத், கின்னரேத்,
\v 36 ஆதமா, ராமா, ஆத்சோர்,
\v 37 கேதேஸ், எத்ரேயி, என்ஆத்சோர்,
\s5
\v 38 ஈரோன், மிக்தாலேல், ஓரேம், பெதானாத் பெத்ஷிமேஸ் முதலானவைகளே; பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும் உட்பட பத்தொன்பது.
\v 39 இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் நப்தலி கோத்திரத்தார்களுக்கு, அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குகள் ஆகும்.
\s1 தாண் கோத்திரத்தார்களின் பங்கு
\p
\s5
\v 40 ஏழாம் சீட்டு தாண் கோத்திரத்தார்களுக்கு விழுந்தது.
\v 41 அவர்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த பங்கின் எல்லையாவது, சோரா, எஸ்தாவோல், இர்சேமேஸ்,
\v 42 சாலாபீன், ஆயலோன், யெத்லா,
\s5
\v 43 ஏலோன், திம்னாதா, எக்ரோன்,
\v 44 எல்தெக்கே, கிபெத்தோன், பாலாத்,
\v 45 யேகூத், பெனபெராக், காத்ரிம்மோன்,
\v 46 மேயார்கோன், ராக்கோன் என்னும் பட்டணங்களும், யாப்போவுக்கு எதிரான எல்லையுமே.
\s5
\v 47 தாண் கோத்திரத்தார்களின் எல்லை அவர்களுக்கு ஒடுக்கமாக இருந்தபடியால், அவர்கள் புறப்பட்டுப்போய், லேசேமின்மேல் யுத்தம்செய்து, அதைப் பிடித்து, பட்டயத்தினால் அழித்து, அதைச் சொந்தமாக்கிக்கொண்டு, அதிலே குடியிருந்து, லேசேமுக்குத் தங்களுடைய தகப்பனாகிய தாணுடைய பெயரின்படியே தாண் என்று பேரிட்டார்கள்.
\v 48 இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் தாண் கோத்திரத்தார்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குகள் ஆகும்.
\s1 யோசுவாவின் பங்கு
\p
\s5
\v 49 தேசத்தை அதின் எல்லைகளின்படி சொந்தமாகப் பங்கிட்டு முடித்தபோது, இஸ்ரவேல் மக்கள் நூனின் மகனாகிய யோசுவாவிற்குத் தங்கள் நடுவிலே ஒரு பங்கைக் கொடுத்தார்கள்.
\v 50 எப்பிராயீமின் மலைத்தேசத்தில் இருக்கிற திம்னாத்சேரா என்னும் அவன் கேட்ட பட்டணத்தை அவனுக்குக் கர்த்தருடைய கட்டளையின்படியே கொடுத்தார்கள்; அந்தப் பட்டணத்தை அவன் கட்டி, அதிலே குடியிருந்தான்.
\s5
\v 51 ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் மகனாகிய யோசுவாவும், கோத்திரப் பிதாக்களுடைய தலைவரும் சீலோவிலே ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் இஸ்ரவேல் மக்களின் கோத்திரங்களுக்குச் சீட்டுப்போட்டுக் கொடுத்தப் பங்குகள் இவைகளே; இவ்விதமாக அவர்கள் தேசத்தைப் பங்கிட்டு முடித்தார்கள்.
\s5
\c 20
\cl அத்தியாயம்– 20
\s1 அடைக்கலப் பட்டணங்கள்
\p
\v 1 கர்த்தர் யோசுவாவை நோக்கி:
\v 2 நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால்: உள்நோக்கம் இல்லாமல் ஒருவனைக் கொன்றவன் ஓடிப்போய் தங்குவதற்காக; நான் மோசேயைக்கொண்டு உங்களுக்குக் கற்பித்த அடைக்கலப்பட்டணங்களை உங்களுக்கு ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
\v 3 அவைகள், உங்களுக்கு இரத்தப்பழி வாங்குகிறவனுடைய கைக்குத் தப்பிப்போய் இருக்கத்தக்க அடைக்கலமாக இருக்கும்.
\s5
\v 4 அந்தப் பட்டணங்களில் ஒன்றிற்கு ஓடிவருகிறவன், பட்டணத்தின் வாசலில் நின்றுகொண்டு, அந்தப் பட்டணத்தினுடைய மூப்பர்களின் காதுகளில் கேட்கும்படி, தன்னுடைய காரியத்தைச் சொல்வான்; அப்பொழுது அவர்கள் அவனைத் தங்களிடம் பட்டணத்திற்குள்ளே சேர்த்துக்கொண்டு, தங்களோடு குடியிருக்க அவனுக்கு இடம் கொடுக்கவேண்டும்.
\s5
\v 5 பழிவாங்குகிறவன் அவனைப் பின்தொடர்ந்துவந்தால், அவன் அவனை முன்விரோதம் இல்லாமல் அறியாமல் கொன்றதினால், அவனை இவனுடைய கையில் ஒப்புக்கொடுக்காமல் இருக்கவேண்டும்.
\v 6 நியாயம் விசாரிக்கும் சபைக்கு முன்பாக அவன் நிற்கும்வரைக்கும், அந்த நாட்களில் இருக்கிற பிரதான ஆசாரியன் மரிக்கும்வரைக்கும், அவன் அந்தப் பட்டணத்திலே குடியிருக்கவேண்டும்; பின்பு கொலைசெய்தவன் தான் விட்டுவந்த தன்னுடைய பட்டணத்திற்கும் தன் வீட்டிற்கும் திரும்பிப்போகவேண்டும் என்று சொல் என்றார்.
\s5
\v 7 அப்படியே அவர்கள் நப்தலியின் மலைத்தேசமான கலிலேயாவிலுள்ள கேதேசையும், எப்பிராயீமின் மலைத்தேசத்தில் உள்ள எபிரோனாகிய கீரியாத் அர்பாவையும் ஏற்படுத்தினார்கள்.
\v 8 எரிகோவிலிருக்கும் யோர்தானுக்கு அக்கரையான கிழக்கிலே ரூபன் கோத்திரத்திற்கு இருக்கும் சமபூமியின் வனாந்தரத்தில் உள்ள பேசேரையும், காத் கோத்திரத்திற்கு இருக்கும் கீலேயாத்திலுள்ள ராமோத்தையும், மனாசே கோத்திரத்திற்கு இருக்கும் பாசானிலுள்ள கோலானையும் குறித்துவைத்தார்கள்.
\s5
\v 9 உள்நோக்கம் இல்லாமல் ஒருவனைக் கொன்றவன் எவனோ அவன் சபைக்கு முன்பாக நிற்கும்வரைக்கும் பழிவாங்குகிறவனுடைய கையினால் சாகாதபடி ஓடிப்போய் ஒதுங்குவதற்கு இஸ்ரவேல் மக்கள் அனைவருக்கும், அவர்கள் நடுவே தங்குகிற அந்நியர்களுக்கும் குறிக்கப்பட்ட பட்டணங்கள் இவைகளே.
\s5
\c 21
\cl அத்தியாயம்– 21
\s1 லேவியர்களுக்கான பட்டணங்கள்
\p
\v 1 அப்பொழுது லேவியர்களின் வம்சப்பிதாக்களின் தலைவர்கள்; கானான்தேசத்தில் இருக்கிற சீலோவிலே ஆசாரியனாகிய எலெயாசாரிடமும், நூனின் மகனாகிய யோசுவாவிடமும், இஸ்ரவேல் மக்களுடைய கோத்திரப் பிதாக்களில் உள்ள தலைவர்களிடமும் வந்து:
\v 2 நாங்கள் குடியிருக்கும் பட்டணங்களையும், எங்களுடைய மிருகஜீவனுக்காக வெளிநிலங்களையும் எங்களுக்குக் கொடுக்கும்படி, கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டாரே என்றார்கள்.
\s5
\v 3 கர்த்தருடைய கட்டளையின்படியே, இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய பங்குகளிலே லேவியர்களுக்குப் பட்டணங்களையும் அவைகளின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்.
\s5
\v 4 கோகாத்தியர்களின் வம்சங்களுக்குச் சீட்டு விழுந்தது; அந்தச் சீட்டின்படி லேவியர்களில் ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததிக்கு யூதா கோத்திரத்திலும், சிமியோன் கோத்திரத்திலும், பென்யமீன் கோத்திரத்திலும் கிடைத்த பட்டணங்கள் பதின்மூன்று.
\v 5 கோகாத்தின் மற்ற வம்சங்களுக்கு, எப்பிராயீம் கோத்திரத்தின் வம்சங்களுக்குள்ளும், தாண் கோத்திரத்திலும், மனாசேயின் பாதிக் கோத்திரத்திலும், சீட்டினால் கிடைத்த பட்டணங்கள் பத்து.
\s5
\v 6 கெர்சோன் வம்சத்தின் மக்களுக்கு, இசக்கார் கோத்திரத்தின் வம்சங்களுக்குள்ளும், ஆசேர் கோத்திரத்திலும், நப்தலி கோத்திரத்திலும், பாசானில் இருக்கிற மனாசேயின் பாதிக் கோத்திரத்திலும், சீட்டினால் கிடைத்த பட்டணங்கள் பதின்மூன்று.
\v 7 மெராரி வம்சத்தின் மக்களுக்கு, அவர்களுடைய வம்சங்களின்படியே, ரூபன் கோத்திரத்திலும், காத் கோத்திரத்திலும், செபுலோன் கோத்திரத்திலும் கிடைத்த பட்டணங்கள் பன்னிரண்டு.
\s5
\v 8 இந்தப் பட்டணங்களையும் அவைகளின் வெளிநிலங்களையும் இஸ்ரவேல் மக்கள், கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடியே, சீட்டுப்போட்டு லேவியர்களுக்குக் கொடுத்தார்கள்.
\v 9 லேவியின் கோத்திரத்தில் முதலாம் சீட்டைப்பெற்ற கோகாத்தியர்களின் வம்சங்களிலே இருக்கிற ஆரோனின் சந்ததியினர்களுக்கு,
\v 10 யூதா கோத்திரத்திலும், சிமியோன் கோத்திரத்திலும், அவர்கள் கொடுத்தவைகளும் பெயர்பெயராகச் சொல்லப்பட்டவைகளுமான பட்டணங்களின் பெயர்களாவன:
\s5
\v 11 யூதாவின் மலைத்தேசத்தில் ஆனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனையும் அதைச் சுற்றியுள்ள வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்.
\v 12 பட்டணத்தின் வயல்களையும் அதினுடைய கிராமங்களையும் எப்புன்னேயின் மகனாகிய காலேபுக்குச் சொந்தமாகக் கொடுத்தார்கள்.
\s5
\v 13 இப்படியே கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாக ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததியார்களுக்கு எபிரோனையும் அதினுடைய வெளிநிலங்களையும், லிப்னாவையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
\v 14 யாத்தீரையும் அதினுடைய வெளிநிலங்களையும், எஸ்தெமொவாவையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
\v 15 ஓலோனையும் அதினுடைய வெளிநிலங்களையும், தெபீரையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
\v 16 ஆயினையும் அதினுடைய வெளிநிலங்களையும், யுத்தாவையும் அதினுடைய வெளிநிலங்களையும், பெத்ஷிமேசையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; அந்த இரண்டு கோத்திரங்களில் இருக்கிற பட்டணங்கள் ஒன்பது.
\s5
\v 17 பென்யமீன் கோத்திரத்திலே அவர்களுக்குக் கிபியோனையும் அதினுடைய வெளிநிலங்களையும் கேபாவையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
\v 18 ஆனதோத்தையும் அதினுடைய வெளிநிலங்களையும், அல்மோனையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு.
\v 19 ஆசாரியர்களான ஆரோனுடைய சந்ததியார்களின் பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களும் உட்பட பதின்மூன்று.
\s5
\v 20 லேவியர்களான கோகாத்தின் குடும்பத்தார்களில் மீதியான அவர்களுடைய மற்ற வம்சங்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்திலே அவர்களுக்குப் பங்குவீதமாக அவர்கள் கொடுத்த பட்டணங்களாவன:
\v 21 கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமான எப்பிராயீமின் மலைத்தேசத்தில் இருக்கிற சீகேமையும் அதினுடைய வெளிநிலங்களையும், கேசேரையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
\v 22 கிப்சாயீமையும் அதினுடைய வெளிநிலங்களையும், பெத்தொரோனையும் அதினுடைய வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு.
\s5
\v 23 தாண் கோத்திரத்திலே எல்தெக்கேயையும் அதினுடைய வெளிநிலங்களையும், கிபெத்தோனையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
\v 24 ஆயலோனையும் அதினுடைய வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதினுடைய வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு.
\s5
\v 25 மனாசேயின் பாதிக் கோத்திரத்திலே தானாகையும் அதினுடைய வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதினுடைய வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் இரண்டு.
\v 26 கோகாத் வம்சத்தின் மீதியான வம்சங்களுக்கு உண்டான பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களும் உட்பட பத்து.
\s5
\v 27 லேவியர்களின் வம்சங்களிலே கெர்சோன் வம்சத்தார்களுக்கு மனாசேயின் பாதிக் கோத்திரத்தில் கொலை செய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமான பாசானிலுள்ள கோலானையும் அதினுடைய வெளிநிலங்களையும், பெயேஸ்திராவையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் இரண்டு.
\s5
\v 28 இசக்காரின் கோத்திரத்திலே கீசோனையும் அதினுடைய வெளிநிலங்களையும், தாபராத்தையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
\v 29 யர்மூத்தையும் அதினுடைய வெளிநிலங்களையும், என்கன்னீமையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு.
\v 30 ஆசேரின் கோத்திரத்திலே மிஷயாலையும் அதினுடைய வெளிநிலங்களையும், அப்தோனையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
\v 31 எல்காத்தையும் அதினுடைய வெளிநிலங்களையும், ரேகோபையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு.
\s5
\v 32 நப்தலி கோத்திரத்திலே கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாக கலிலேயாவிலுள்ள கேதேசையும் அதினுடைய வெளிநிலங்களையும், அம்மோத்தோரையும் அதினுடைய வெளிநிலங்களையும், கர்தானையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் மூன்று.
\v 33 கெர்சோனியர்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களும் உட்பட பதின்மூன்று.
\s5
\v 34 மற்ற லேவியர்களாகிய மெராரி வம்சங்களுக்குச் செபுலோன் கோத்திரத்திலே யொக்னியாமையும் அதினுடைய வெளிநிலங்களையும், கர்தாவையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
\v 35 திம்னாவையும் அதினுடைய வெளிநிலங்களையும், நகலாலையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு.
\s5
\v 36 ரூபன் கோத்திரத்திலே பேசேரையும் அதினுடைய வெளிநிலங்களையும், யாகசாவையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
\v 37 கெதெமோத்தையும் அதினுடைய வெளிநிலங்களையும், மெபாகாத்தையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு.
\v 38 காத் கோத்திரத்திலே கொலை செய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாக, கீலேயாத்திலுள்ள ராமோத்தையும் அதினுடைய வெளிநிலங்களையும், மக்னாயீமையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
\s5
\v 39 எஸ்போனையும் அதினுடைய வெளிநிலங்களையும், யாசேரையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு.
\v 40 இவைகளெல்லாம் லேவியர்களின் மற்ற வம்சங்களாகிய மெராரி வம்சத்தார்களுக்கு, அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த பட்டணங்கள்; அவர்களுடைய பங்குவீதம் பன்னிரண்டு பட்டணங்கள்.
\s5
\v 41 இஸ்ரவேல் மக்கள் சுதந்தரித்திருந்த தேசத்தின் நடுவிலே இருக்கிற லேவியர்களின் பட்டணங்களெல்லாம், அவைகளின் வெளிநிலங்களும் உட்பட நாற்பத்தெட்டு.
\v 42 இந்தப் பட்டணங்களில் ஒவ்வொன்றிற்கும் அதைச் சுற்றியுள்ள வெளிநிலங்கள் இருந்தது; எல்லாப் பட்டணங்களுக்கும் அப்படியே இருந்தது.
\s5
\v 43 இந்தவிதமாகக் கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கொடுப்பேன் என்று அவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தையெல்லாம் கொடுத்தார்; அவர்கள் அவைகளைச் சுதந்தரித்துக்கொண்டு, அவைகளிலே குடியிருந்தார்கள்.
\v 44 கர்த்தர் அவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்டபடியெல்லாம் அவர்களைச் சுற்றிலும் யுத்தமில்லாமல் ஓய்ந்திருக்கச்செய்தார்; அவர்களுடைய எல்லா எதிரிகளிலும் ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கவில்லை; அவர்கள் எதிரிகளையெல்லாம் கர்த்தர் அவர்களுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்.
\v 45 கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தார்களுக்குச் சொல்லியிருந்த நல்ல வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறினது.
\s5
\c 22
\cl அத்தியாயம்– 22
\s1 கிழக்கு திசைக் கோத்திரங்கள் கூடாரங்களுக்குத் திரும்புதல்
\p
\v 1 அப்பொழுது யோசுவா ரூபனியர்களையும் காத்தியர்களையும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தார்களையும் அழைத்து,
\v 2 அவர்களை நோக்கி: கர்த்தருடைய ஊழியக்காரனாகிய மோசே உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் நீங்கள் செய்தீர்கள்; நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றிலும் என் வார்த்தையின்படி செய்தீர்கள்.
\v 3 நீங்கள் இதுவரைக்கும் அநேக நாட்களாக உங்களுடைய சகோதரர்களைக் கைவிடாமல், உங்களுடைய தேவனாகிய கர்த்தருடைய கட்டளையைக் காத்துக்கொண்டு நடந்தீர்கள்.
\s5
\v 4 இப்பொழுதும் உங்களுடைய தேவனாகிய கர்த்தர் உங்களுடைய சகோதரர்களுக்குச் சொல்லியிருந்தபடியே, அவர்களை ஓய்ந்திருக்கச் செய்தார்; ஆகவே கர்த்தருடைய ஊழியக்காரனாகிய மோசே யோர்தானுக்கு மறுபுறத்திலே உங்களுக்குக் கொடுத்த உங்களுக்குச் சொந்தமான தேசத்தில் இருக்கிற உங்களுடைய கூடாரங்களுக்குத் திரும்பிப்போங்கள்.
\v 5 ஆனாலும் நீங்கள் உங்களுடைய தேவனாகிய கர்த்தரிடம் அன்புவைத்து, அவருடைய வழிகளிலெல்லாம் நடந்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொண்டு, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவரை உங்களுடைய முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் தொழுதுகொள்கிறதற்காக, கர்த்தருடைய ஊழியக்காரனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த கட்டளைகளின்படியும் நியாயப்பிரமாணத்தின்படியும் செய்வதற்கு மிகவும் கவனமாக இருங்கள் என்றான்.
\v 6 இவ்விதமாக யோசுவா அவர்களை ஆசீர்வதித்து, அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் தங்களுடைய கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.
\s5
\v 7 மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்கு மோசே பாசானிலே பங்கு கொடுத்தான்; அதினுடைய மற்றப் பாதிக்கு, யோசுவா யோர்தானுக்கு இந்தப் புறத்திலே மேற்கே அவர்களுடைய சகோதரர்களோடு பங்கு கொடுத்தான்; யோசுவா அவர்களை அவர்களுடைய கூடாரங்களுக்கு அனுப்பிவிடுகிறபோது, அவர்களை ஆசீர்வதித்து:
\v 8 நீங்கள் மிகுந்த ஐசுவரியத்தோடும், ஏராளமான ஆடுமாடுகளோடும், பொன், வெள்ளி, வெண்கலம், இரும்போடும், அநேக ஆடைகளோடும் உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பி, உங்களுடைய எதிரிகளிடம் கொள்ளையிட்டதை உங்களுடைய சகோதரர்களோடு பங்கிட்டுக்கொள்ளுங்கள் என்றான்.
\s5
\v 9 அப்பொழுது ரூபனுடைய சந்ததியினர்களும் காத்தின் சந்ததியினர்களும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களும், கர்த்தர் மோசேயைக் கொண்டு கட்டளையிட்டபடியே, அவர்கள் கைவசப்படுத்திக்கொண்ட அவர்களுடைய சொந்த தேசமான கீலேயாத் தேசத்திற்குப் போக, கானான் தேசத்தில் உள்ள சீலோவில் இருந்த இஸ்ரவேல் மக்களைவிட்டுத் திரும்பிப்போனார்கள்.
\s5
\v 10 கானான் தேசத்தில் இருக்கிற யோர்தானின் எல்லைகளுக்கு வந்தபோது, ரூபனுடைய சந்ததியினர்களும், காத்தின் சந்ததியினர்களும், மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களும், அங்கே யோர்தானின் ஓரத்திலே பார்வைக்குப் பெரிதான ஒரு பலிபீடத்தைக் கட்டினார்கள்.
\v 11 ரூபனுடைய சந்ததியினர்களும் காத்தின் சந்ததியினர்களும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களும் கானான் தேசத்திற்கு எதிரே இஸ்ரவேல் மக்களுக்குச் சொந்தமான யோர்தானின் எல்லைகளில் ஒரு பலிபீடத்தைக் கட்டினார்கள் என்று இஸ்ரவேல் மக்கள் கேள்விப்பட்டார்கள்.
\s5
\v 12 அவர்கள் அதைக் கேள்விப்பட்டபோது, இஸ்ரவேல் மக்களின் சபையாரெல்லோரும் அவர்களுக்கு எதிராக யுத்தம்செய்வதற்காக சீலோவிலே கூடி,
\s5
\v 13 கீலேயாத் தேசத்தில் இருக்கிற ரூபன் கோத்திரத்தார்களிடமும், காத் கோத்திரத்தார்களிடமும்,, மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களிடமும், ஆசாரியனாகிய எலெயாசாருடைய மகனாகிய பினெகாசையும்,
\v 14 அவனோடு இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலும் ஒவ்வொரு பிதாவின் குடும்பத்திற்கு ஒவ்வொரு பிரபுவாகப் பத்துப் பிரபுக்களையும் அனுப்பினார்கள்; இஸ்ரவேலின் சேனைகளிலே ஆயிரம்பேர்களுக்குள்ளே ஒவ்வொருவனும் தன் தன் பிதாவின் குடும்பத்திற்குத் தலைவனாக இருந்தான்.
\s5
\v 15 அவர்கள் கீலேயாத் தேசத்திலே ரூபன் கோத்திரத்தார், காத் கோத்திரத்தார், மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களாகிய இவர்களிடம் வந்து:
\v 16 நீங்கள் இந்த நாளிலே கர்த்தரைப் பின்பற்றாதபடித் திரும்பி, இந்த நாளிலே கர்த்தருக்கு எதிராகக் கலகம் செய்யும்படியாக உங்களுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்ரவேலின் தேவனுக்கு எதிராகச் செய்த இந்தத் துரோகம் என்ன?
\s5
\v 17 பேயோரின் அக்கிரமம் நமக்குப் போதாதா? கர்த்தருடைய சபையிலே வாதை உண்டாயிருந்ததே; இந்த நாள்வரைக்கும் நாம் அதிலிருந்து நீங்கிச் சுத்தமாகவில்லையே.
\v 18 நீங்கள் இந்த நாளில் கர்த்தரைப் பின்பற்றாதபடித் திரும்புவீர்களோ? இன்று கர்த்தருக்கு எதிராகக் கலகம் செய்வீர்களோ? அவர் நாளைக்கு இஸ்ரவேலின் சபையின்மேல் கடுங்கோபங்கொள்வாரே.
\s5
\v 19 உங்களுடைய சொந்த தேசம் தீட்டாக இருந்ததானால், கர்த்தருடைய ஆசரிப்புக்கூடாரம் இருக்கிற கர்த்தருடைய சொந்தமான அக்கரையில் உள்ள தேசத்திற்கு வந்து, எங்கள் நடுவே பங்குகளைப் பெற்றுக்கொள்ளலாமே; நீங்கள் நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தை அல்லாமல் உங்களுக்கு வேறொரு பலிபீடத்தைக் கட்டுகிறதினாலே, கர்த்தருக்கும் எங்களுக்கும் எதிராக பிடிவாதம் செய்யாமல் இருங்கள்.
\v 20 சேராவின் மகனாகிய ஆகான் சாபத்தீடானப் பொருளைக்குறித்துத் துரோகம்செய்ததினாலே, இஸ்ரவேல் மக்களின்மேல் கடுங்கோபம் வரவில்லையா? அவன் ஒருவன்மட்டும் தன்னுடைய அக்கிரமத்தினாலே மடிந்துபோகவில்லையென்று கர்த்தருடைய சபையார்கள் எல்லோரும் சொல்லச்சொன்னார்கள் என்றார்கள்.
\s5
\v 21 அப்பொழுது ரூபன் கோத்திரத்தார்களும், காத் கோத்திரத்தார்களும், மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களும், இஸ்ரவேலின் ஆயிரம்பேர்களின் தலைவர்களுக்கு மறுமொழியாக:
\v 22 தேவாதி தேவனாகிய கர்த்தர், தேவாதி தேவனாகிய கர்த்தரே, அதை அறிந்திருக்கிறார்; இஸ்ரவேலர்களும் அறிந்துகொள்ளுவார்கள்; அது பிடிவாதத்தினாலாவது, கர்த்தருடைய கட்டளைக்கு எதிரான துரோகத்தினாலாவது செய்யப்பட்டதானால், இந்த நாளில் அவர் எங்களைக் காப்பாற்றாமல் இருக்கக்கடவர்.
\v 23 ஒரு காரியத்தைக்குறித்து நாங்கள் எங்களுக்கு அந்த பலிபீடத்தைக் கட்டினதே அல்லாமல், கர்த்தரைப் பின்பற்றாதபடிக்கு விலகுவதற்காவது, அதின்மேல் சர்வாங்கதகனபலியையாவது போஜனபலியையாவது சமாதானபலிகளையாவது செலுத்துகிறதற்காவது அதைச் செய்ததுண்டானால், கர்த்தர் அதை விசாரிப்பாராக.
\s5
\v 24 நாளைக்கு உங்களுடைய பிள்ளைகள் எங்களுடைய பிள்ளைகளை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கும் உங்களுக்கும் என்ன?
\s5
\v 25 ரூபனுடைய மக்கள் காத்தின் மக்களாகிய உங்களுக்கும் எங்களுக்கும் நடுவே கர்த்தர் யோர்தானை எல்லையாக வைத்தார்; கர்த்தரிடம் உங்களுக்குப் பங்கு இல்லை என்று சொல்லி, எங்கள் பிள்ளைகளைக் கர்த்தருக்குப் பயப்படாமலிருக்கச் செய்வார்கள் என்கிற பயத்தினாலே நாங்கள் சொல்லிக்கொண்டது என்னவென்றால்:
\s5
\v 26 சர்வாங்கதகனத்திற்கு அல்ல, பலிக்கும் அல்ல, எங்கள் சர்வாங்கதகனங்களாலும், பலிகளாலும், சமாதானபலிகளாலும், நாங்கள் கர்த்தருடைய சந்நிதியில் அவருடைய ஆராதனையைச் செய்யத்தக்கவர்கள் என்று எங்களுக்கும் உங்களுக்கும், நமக்குப் பின்வரும் நம்முடைய சந்ததியார்களுக்கும் நடுவே சாட்சி உண்டாயிருக்கும்படிக்கும்,
\v 27 கர்த்தரிடம் உங்களுக்குப் பங்கு இல்லை என்று உங்களுடைய பிள்ளைகள் நாளைக்கு எங்களுடைய பிள்ளைகளிடம் சொல்லாமலிருப்பதற்காகவே, ஒரு பலிபீடத்தை நமக்காக உண்டுபண்ணுவோம் என்றோம்.
\s5
\v 28 நாளைக்கு எங்களோடாவது, எங்களுடைய சந்ததியார்களோடாவது அப்படிச் சொல்வார்களானால், அப்பொழுது சர்வாங்க தகனத்திற்கும் அல்ல, பலிக்கும் அல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே சாட்சிக்காக எங்கள் பிதாக்கள் உண்டுபண்ணின கர்த்தருடைய பலிபீடத்தின் சாயலான பலிபீடத்தைப் பாருங்கள் என்று சொல்லலாம் என்றோம்.
\v 29 நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாக இருக்கிற அவருடைய பலிபீடத்தைத்தவிர, நாங்கள் சர்வாங்க தகனத்திற்கும், போஜனபலிக்கும், மற்றப் பலிக்கும் வேறொரு பலிபீடத்தைக் கட்டுகிறதினாலே, கர்த்தருக்கு எதிராகக் கலகம்பண்ணுவதும், இன்று கர்த்தரைப் பின்பற்றாதபடிக்கு விலகுவதும், எங்களுக்குத் தூரமாக இருப்பதாக என்றார்கள்.
\s5
\v 30 ரூபனுடைய கோத்திரத்தார்களும், காத்தின் கோத்திரத்தார்களும், மனாசே கோத்திரத்தார்களும் சொல்லுகிற வார்த்தைகளை ஆசாரியனாகிய பினெகாசும், அவனோடு இருந்த சபையின் பிரபுக்களும், இஸ்ரவேலுடைய ஆயிரம்பேர்களின் தலைவர்களும் கேட்டபோது, அது அவர்களுடைய பார்வைக்கு நன்றாக இருந்தது.
\v 31 அப்பொழுது ஆசாரியனான எலெயாசாரின் மகனாகிய பினெகாஸ், ரூபனுடைய கோத்திரத்தார்களையும், காத்தின் கோத்திரத்தார்களையும், மனாசே கோத்திரத்தார்களையும் நோக்கி: நீங்கள் கர்த்தருக்கு எதிராக அப்படிப்பட்ட துரோகத்தைச் செய்யாதிருக்கிறதினாலே, கர்த்தர் நம்முடைய நடுவில் இருக்கிறார் என்பதை இன்று அறிந்திருக்கிறோம்; இப்பொழுது இஸ்ரவேல் மக்களைக் கர்த்தருடைய கைக்குத் தப்புவித்தீர்கள் என்றான்.
\s5
\v 32 ஆசாரியனான எலெயாசாரின் மகனாகிய பினெகாசும், பிரபுக்களும், கீலேயாத் தேசத்தில் இருக்கிற ரூபனுடைய கோத்திரத்தார்களையும், காத்தின் கோத்திரத்தார்களையும் விட்டு, கானான் தேசத்திற்கு இஸ்ரவேல் மக்களிடம் திரும்பிவந்து, அவர்களுக்கு மறுசெய்தி சொன்னார்கள்.
\v 33 அந்தச் செய்தி இஸ்ரவேல் மக்களின் பார்வைக்கு நன்றாக இருந்தது; ஆகவே ரூபனுடைய வம்சத்தார்களும் காத்தின் வம்சத்தார்களும் குடியிருக்கிற தேசத்தை அழித்துவிட, அவர்கள்மேல் யுத்தத்திற்குப் புறப்படுவோம் என்கிற பேச்சை விட்டு, இஸ்ரவேல் மக்கள் தேவனை ஸ்தோத்தரித்தார்கள்.
\s5
\v 34 கர்த்தரே தேவன் என்பதற்கு அந்த பலிபீடம் நமக்குள்ளே சாட்சியாக இருக்கும் என்று சொல்லி, ரூபனுடைய வம்சத்தார்களும், காத்தின் வம்சத்தார்களும் அதற்கு ஏத் என்று பெயரிட்டார்கள்.
\s5
\c 23
\cl அத்தியாயம்– 23
\s1 யோசுவாவின் இறுதி உரை
\p
\v 1 கர்த்தர் இஸ்ரவேலைச் சுற்றிலும் இருந்த அவர்களுடைய எல்லா எதிரிகளாலும் யுத்தமில்லாதபடி ஓய்ந்திருக்கச்செய்து அநேக நாட்கள் சென்றபின்பு, யோசுவா முதிர்வயதானபோது,
\v 2 யோசுவா இஸ்ரவேலின் மூப்பர்களையும், தலைவர்களையும், நியாயாதிபதிகளையும், அதிகாரிகளையும், மற்ற எல்லோரையும் அழைத்து, அவர்களை நோக்கி: நான் முதிர்வயதானேன்.
\v 3 உங்களுடைய தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு முன்பாக இந்த எல்லா தேசங்களுக்கும் செய்த எல்லாவற்றையும் நீங்கள் பார்த்தீர்கள்; உங்களுடைய தேவனாகிய கர்த்தரே உங்களுக்காக யுத்தம்செய்தார்.
\s5
\v 4 பாருங்கள், யோர்தான்முதல் நான் நிர்மூலமாக்கினவைகளும், மேற்கில் உள்ள பெரிய சமுத்திரம்வரைக்கும் இன்னும் மீதியாக இருக்கிறவைகளுமான எல்லா தேசங்களையும் சீட்டுப்போட்டு; உங்களுக்கு, உங்களுடைய கோத்திரங்களுக்குத் தகுந்தபடி, சொந்தமாகப் பங்கிட்டேன்.
\v 5 உங்களுடைய தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் அவர்களுடைய தேசத்தைக் கட்டிக்கொள்ளும்படிக்கு, உங்களுடைய தேவனாகிய கர்த்தரே அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்தி, உங்களுடைய பார்வையிலிருந்து அகற்றிப்போடுவார்.
\s5
\v 6 ஆகவே, மோசேயின் நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதியிருக்கிறதை விட்டுவிட்டு, வலதுபுறமாவது இடதுபுறமாவது விலகிப்போகாமல், அதையெல்லாம் கடைபிடிக்கவும், செய்யவும் உறுதி செய்துகொள்ளுங்கள்.
\v 7 உங்களுக்குள்ளே மீதியாக இருக்கிற இந்த தேசங்களோடு சேராமலும், அவர்களுடைய தெய்வங்களின் பெயர்களை நினைக்காமலும், அவைகளைக்கொண்டு சத்தியம்செய்யாமலும், அவைகளைத் தொழுதுகொள்ளாமலும், பணிந்துகொள்ளாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாக இருங்கள்.
\v 8 இந்த நாள்வரைக்கும் நீங்கள் செய்ததுபோல, உங்களுடைய தேவனாகிய கர்த்தரைப் பற்றிக்கொண்டிருங்கள்.
\s5
\v 9 கர்த்தர் உங்களுக்கு முன்பாகப் பெரியவைகளும் பலத்தவைகளுமான தேசங்களைத் துரத்தியிருக்கிறார்; இந்த நாள்வரைக்கும் ஒருவரும் உங்களுக்கு முன்பாக நிற்கவில்லை.
\v 10 உங்களில் ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்துவான்; உங்களுடைய தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி, அவரே உங்களுக்காக யுத்தம்செய்கிறார்.
\v 11 ஆகவே, உங்களுடைய தேவனாகிய கர்த்தரிடம் அன்புசெலுத்தும்படி, உங்களுடைய ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.
\s5
\v 12 நீங்கள் பின்வாங்கிப்போய், உங்களுக்குள்ளே மீதியாக இருக்கிற இந்த மக்களோடு சேர்ந்துகொண்டு, அவர்களோடு சம்பந்தம் கலந்து, நீங்கள் அவர்களிடமும் அவர்கள் உங்களிடமும் உறவாடினால்,
\v 13 உங்களுடைய தேவனாகிய கர்த்தர் இனி இந்த தேசங்களை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடமாட்டார் என்றும், உங்களுடைய தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து அழிந்துபோகும்வரைக்கும், அவர்கள் உங்களுக்குக் கண்ணியாகவும், வலையாகவும், உங்களுடைய முதுகுகளுக்குச் சவுக்காகவும், உங்களுடைய கண்களுக்கு முள்ளுகளாகவும் இருப்பார்கள் என்றும் நிச்சயமாக அறியுங்கள்.
\s5
\v 14 இதோ, இன்று நான் பூலோகத்தார்கள் எல்லோரும் போகிற வழியிலே போகிறேன்; உங்களுடைய தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்ல வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்களுடைய முழு இருதயத்தாலும், முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள்; அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறினது, அவைகளில் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை.
\v 15 இப்பொழுதும் உங்களுடைய தேவனாகிய கர்த்தர் உங்களிடம் சொன்ன நல்ல காரியமெல்லாம் உங்களுக்கு எப்படி நிறைவேறியதோ, அப்படியே, உங்களுடைய தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிட்ட அவருடைய உடன்படிக்கையை நீங்கள் மீறி, அந்நிய தெய்வங்களைத் தொழுதுகொண்டு, அவைகளைப் பணிந்துகொள்ளும் காலத்தில்,
\s5
\v 16 உங்களுடைய தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து உங்களை அழிக்கும்வரைக்கும், கர்த்தர் உங்கள்மேல் எல்லாத் தீமையான காரியங்களையும் வரப்பண்ணுவார்; கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் பற்றியெரியும்; அவர் உங்களுக்குக் கொடுத்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரமாக அழிந்துபோவீர்கள் என்றான்.
\s5
\c 24
\cl அத்தியாயம்– 24
\s1 சீகேமிலே உடன்படிக்கை புதுப்பிக்கப்படுதல்
\p
\v 1 பின்பு யோசுவா இஸ்ரவேலின் கோத்திரங்களையெல்லாம் சீகேமிலே கூடிவரச்செய்து, இஸ்ரவேலின் மூப்பர்களையும், தலைவர்களையும், நியாயாதிபதிகளையும், அதிகாரிகளையும் வரவழைத்தான்; அவர்கள் தேவனுடைய சந்நிதியில் வந்து நின்றார்கள்.
\v 2 அப்பொழுது யோசுவா எல்லா மக்களையும் நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: பூர்வ காலத்திலே உங்களுடைய பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் நாகோருக்கும் தகப்பனான தேராகு என்பவன், நதிக்கு அப்பால் குடியிருந்தபோது அவர்கள் வேறு தெய்வங்களைத் தொழுதுகொண்டார்கள்;
\s5
\v 3 நான் நதிக்கு அப்பால் இருந்த உங்களுடைய தகப்பனாகிய ஆபிரகாமை அழைத்துக்கொண்டுவந்து, அவனைக் கானான்தேசத்திலே வாழச்செய்து, அவனுடைய சந்ததியை மிகுதியாக்கி, அவனுக்கு ஈசாக்கைக் கொடுத்தேன்.
\v 4 ஈசாக்குக்கு யாக்கோபையும் ஏசாவையும் கொடுத்து, ஏசாவுக்குச் சேயீர் மலைத்தேசத்தைச் சுதந்தரிக்கும்படி கொடுத்தேன்; யாக்கோபும் அவன் பிள்ளைகளுமோ எகிப்துக்குப் போனார்கள்;
\s5
\v 5 நான் மோசேயையும் ஆரோனையும் அனுப்பி, எகிப்தியர்களை வாதித்தேன்; அப்படி அவர்கள் நடுவிலே நான் செய்தபின்பு உங்களைப் புறப்படச்செய்தேன்.
\v 6 நான் உங்களுடைய பிதாக்களை எகிப்திலிருந்து புறப்படப்படச் செய்தபோது, சமுத்திரத்தின் கரைக்கு வந்தீர்கள்; எகிப்தியர்கள் இரதங்களோடும், குதிரைவீரர்களோடும் உங்களுடைய பிதாக்களைச் சிவந்த சமுத்திரம்வரைப் பின்தொடர்ந்தார்கள்.
\s5
\v 7 அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அப்பொழுது அவர் உங்களுக்கும் எகிப்தியர்களுக்கும் நடுவில் இருளை வரச்செய்து, சமுத்திரத்தை அவர்கள்மேல் புரளச்செய்து, அவர்களை மூடிப்போட்டார்; நான் எகிப்திலே செய்ததை உங்களுடைய கண்கள் கண்டது; பின்பு வனாந்திரத்தில் அநேக நாட்கள் வாழ்ந்தீர்கள்.
\s5
\v 8 அதற்குப்பின்பு உங்களை யோர்தானுக்கு மறுபுறத்திலே குடியிருந்த எமோரியர்களின் தேசத்திற்குக் கொண்டுவந்தேன்; அவர்கள் உங்களோடு யுத்தம்செய்கிறபோது, அவர்களை உங்களுடைய கையில் ஒப்புக்கொடுத்தேன்; அவர்களுடைய தேசத்தை சுதந்தரித்துக்கொண்டீர்கள்; அவர்களை உங்களுக்கு முன்பாக அழித்துவிட்டேன்.
\s5
\v 9 அப்பொழுது சிப்போரின் மகனாகிய பாலாக் என்னும் மோவாபியர்களின் ராஜா எழும்பி, இஸ்ரவேலோடு யுத்தம்செய்து, உங்களைச் சபிப்பதற்காக, பேயோரின் மகனாகிய பிலேயாமை அழைத்தான்.
\v 10 பிலேயாமுக்குச் செவிகொடுக்க எனக்கு விருப்பம் இல்லாததினாலே, அவன் உங்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தான், இந்தவிதமாக உங்களை அவனுடைய கைகளிலிருந்து தப்புவித்தேன்.
\s5
\v 11 பின்பு யோர்தானைக் கடந்து எரிகோவுக்கு வந்தீர்கள்; எரிகோவின் குடிகளும், எமோரியர்களும், பெரிசியர்களும், கானானியர்களும், ஏத்தியர்களும், கிர்காசியர்களும், ஏவியர்களும், எபூசியர்களும், உங்களுக்கு எதிராக யுத்தம்செய்தார்கள்; ஆனாலும் அவர்களை நான் உங்களுடைய கைகளிலே ஒப்புக்கொடுத்தேன்.
\v 12 எமோரியர்களின் இரண்டு ராஜாக்களையும் உங்கள் பட்டயத்தாலும் உங்களுடைய வில்லாலும் நீங்கள் துரத்தவில்லை; நான் உங்களுக்கு முன்பாகக் குளவிகளை அனுப்பினேன்; அவைகள் அவர்களை உங்கள் முன்னிருந்து துரத்திவிட்டது.
\s5
\v 13 அப்படியே நீங்கள் பண்படுத்தாத தேசத்தையும், நீங்கள் கட்டாத பட்டணங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகளில் குடியிருக்கிறீர்கள்; நீங்கள் நடாத திராட்சைத்தோட்டங்களின் பலனையும், ஒலிவத்தோப்புக்களின் பலனையும் சாப்பிடுகிறீர்கள் என்றார்.
\s5
\v 14 ஆகவே நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாகத் தொழுதுகொண்டு, உங்களுடைய பிதாக்கள் நதிக்கு அப்பாலும் எகிப்திலும் தொழுதுகொண்ட தெய்வங்களை அகற்றிவிட்டு, கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.
\v 15 கர்த்தரைத் தொழுதுகொள்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாகத் தெரிந்தால், பின்பு யாரைத் தொழுதுகொள்வீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்; நதிக்கு அப்பால் உங்களுடைய பிதாக்கள் தொழுதுகொண்ட தெய்வங்களைத் தொழுதுகொள்வீர்களோ? நீங்கள் வாழ்கின்ற தேசத்தின் மக்களாகிய எமோரியர்களின் தெய்வங்களைத் தொழுதுகொள்வீர்களோ? நானும் என் வீட்டார்களுமோவென்றால், கர்த்தரையே தொழுதுகொள்ளுவோம் என்றான்.
\s5
\v 16 அப்பொழுது மக்கள் மறுமொழியாக: வேறு தெய்வங்களைத் தொழுதுகொள்ளும்படி, கர்த்தரைவிட்டு விலகுகிற காரியம் எங்களுக்குத் தூரமாக இருப்பதாக.
\v 17 நம்மையும் நம்முடைய பிதாக்களையும் அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்து, நம்முடைய கண்களுக்கு முன்பாகப் பெரிய அடையாளங்களைச் செய்து, நாம் நடந்த எல்லா வழியிலும், நாம் கடந்து வந்த எல்லா மக்களுக்குள்ளும் நம்மைக் காப்பாற்றினவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே.
\v 18 தேசத்திலே குடியிருந்த எமோரியர்கள் முதலான எல்லா மக்களையும் கர்த்தர் நமக்கு முன்பாகத் துரத்தினாரே; ஆகவே நாங்களும் கர்த்தரைத் தொழுதுகொள்ளுவோம், அவரே நம்முடைய தேவன் என்றார்கள்.
\s5
\v 19 யோசுவா மக்களை நோக்கி: நீங்கள் கர்த்தரைத் தொழுதுகொள்ளமாட்டீர்கள்; அவர் பரிசுத்தமுள்ள தேவன், அவர் எரிச்சலுள்ள தேவன்; உங்கள் மீறுதலையும் உங்கள் பாவங்களையும் மன்னிக்கமாட்டார்.
\v 20 கர்த்தர் உங்களுக்கு நன்மை செய்திருக்க, நீங்கள் கர்த்தரைவிட்டு, அந்நிய தெய்வங்களைத் தொழுதுகொண்டால், அவர் திரும்பி உங்களுக்குத் தீமை செய்து, உங்களை அழிப்பார் என்றான்.
\s5
\v 21 மக்கள் யோசுவாவை நோக்கி: அப்படியல்ல, நாங்கள் கர்த்தரையே தொழுதுகொள்ளுவோம் என்றார்கள்.
\v 22 அப்பொழுது யோசுவா மக்களை நோக்கி: கர்த்தரைத் தொழுதுகொள்ளும்படி நீங்கள் அவரைத் தெரிந்துகொண்டதற்கு நீங்களே உங்களுக்குச் சாட்சிகள் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களே சாட்சிகள் என்றார்கள்.
\v 23 அப்பொழுது அவன்: அப்படியானால், இப்பொழுதும் உங்களுடைய நடுவே இருக்கிற அந்நிய தெய்வங்களை அகற்றிவிட்டு, உங்களுடைய இருதயத்தை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு நேராகத் திருப்புங்கள் என்றான்.
\s5
\v 24 அப்பொழுது மக்கள் யோசுவாவை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தரையே தொழுதுகொண்டு, அவருடைய சத்தத்திற்கே கீழ்ப்படிவோம் என்றார்கள்.
\v 25 அந்தப்படி யோசுவா அந்த நாளில் சீகேமிலே மக்களோடு உடன்படிக்கைசெய்து, அவர்களுக்கு அதைப் பிரமாணமாகவும் கட்டளையாகவும் ஏற்படுத்தினான்.
\v 26 இந்த வார்த்தைகளை யோசுவா தேவனுடைய நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதி, ஒரு பெரிய கல்லை எடுத்து, அதை அங்கே கர்த்தருடைய பரிசுத்த இடத்தின் அருகில் இருந்த கர்வாலி மரத்தின்கீழே நட்டு,
\s5
\v 27 எல்லா மக்களையும் நோக்கி: இதோ, இந்தக் கல் நமக்குள்ளே சாட்சியாக இருக்கக்கடவது; கர்த்தர் நம்மோடு சொன்ன எல்லா வார்த்தைகளையும் இது கேட்டது; நீங்கள் உங்களுடைய தேவனுக்கு எதிராகப் பொய்சொல்லாதபடி, இது உங்களுக்குச் சாட்சியாக இருக்கக்கடவது என்று சொல்லி,
\s1 வாக்குத்தத்த தேசத்தில் அடக்கம்செய்தல்
\p
\v 28 யோசுவா மக்களை அவரவர்களுடைய சொந்தமான தேசத்திற்கு அனுப்பிவிட்டான்.
\s5
\v 29 இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, நூனின் மகனாகிய யோசுவா என்னும் கர்த்தருடைய ஊழியக்காரன் நூற்றுப்பத்து வயதுள்ளவனாக மரணமடைந்தான்.
\v 30 அவனை எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள காயாஸ் மலைக்கு வடக்கே இருக்கிற திம்னாத் சேரா என்னும் அவனுடைய பங்கின் எல்லைக்குள்ளே அடக்கம் செய்தார்கள்.
\s5
\v 31 யோசுவா உயிரோடு இருந்த எல்லா நாட்களிலும், கர்த்தர் இஸ்ரவேலுக்குச் செய்த அவருடைய செயல்கள் அனைத்தையும் அறிந்து யோசுவாவிற்குப்பின்பு அநேக நாட்கள் உயிரோடு இருந்த மூப்பர்களுடைய எல்லா நாட்களிலும், இஸ்ரவேலர்கள் கர்த்தரைச் சேவித்தார்கள்.
\s5
\v 32 இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து கொண்டுவந்த யோசேப்பின் எலும்புகளை, அவர்கள் சீகேமிலே யாக்கோபு சீகேமின் தகப்பனாகிய எமோரியர்களுடைய மகன்களின் கையில் நூறு வெள்ளிக்காசுக்கு வாங்கின நிலத்தின் பங்கிலே அடக்கம்செய்தார்கள்; அந்த நிலம் யோசேப்பின் சந்ததியினர்களுக்குச் சொந்தமானது.
\v 33 ஆரோனின் மகனாகிய எலெயாசாரும் மரணமடைந்தான், அவனுடைய மகனாகிய பினெகாசுக்கு எப்பிராயீமின் மலைத்தேசத்திலே கொடுக்கப்பட்ட மேட்டிலே அவனை அடக்கம்செய்தார்கள்.